Periyava Golden Quotes-387

album1_11

மேல் நாடுகளில் பெரிதாக ஸ்தாபன ரீதியில் Institutionalize செய்து பரோபகாரப் பணிகள் செய்கிறார்கள். இப்படித் தனி ஸ்தாபனங்கள் இல்லாமலே தனி மனிதர்களாகவும், ஸங்கமாகவும் பொது நலப்பணி புரிவது நமது வைதிக தர்மத்துக்கு ஆதாரமான ஓர் அம்சமாக ஆதியிலிருந்து இருந்து வந்திருக்கிறது. ‘இன்ஸ்டிட்யூஷனலைஸ்’ செய்யாமல் தன்னியல்பாக நம் வாழ்முறையிலேயே கண்ணுக்குத் தெரியாமல், ஒட்டிக் கொண்டு பரோபகாரம் நடைபெறுதில் ஒரு உத்தமமான அம்சம் என்ன என்றால் இங்கேதான் அஹங்காரம் தலைதூக்கவே இடமில்லாமலிருக்கிறது. ‘இன்ஸ்டிட்யூஷன்’ என்றால் Office-bearers (அதில் பதவி வகிப்பவர்கள்) எலெக்க்ஷன், போட்டா போட்டி, ப்பளிஸிடி எல்லாமும் வந்துதான் சேரும். அதனால்தான் நான் ஸங்கமாகச் செய்ய வேண்டிய அநேகப் பணிகளைச் சொல்கிறபோதுகூட, இதற்காகத் தனி ஆர்கனைஸேஷனும் Office-bearers-ம் வேண்டாம். ஏற்கனவே இருக்கிற வார வழிபாட்டுக் கழகம், பாவை கமிட்டி, பஜனை கோஷ்டி, ஸத்ஸங்கம் ஏதாவது ஒன்றின் மேற்பார்வையிலும் பொறுப்பிலும் இந்தப் பணிகளையும் கொண்டுவந்து விடுங்கள் என்கிறேன். ரொம்பப் பெரிசாக திட்டம் போட வேண்டாம், அவசியத்துக்கு அதிகமாக வசூல் பண்ண வேண்டாம் என்றெல்லாம் நான் எச்சரிப்பதற்கும் காரணம், இப்படிப் பெரிசாகக் கால் வைத்தால் முதலில் இதைச் செய்யும் நம் ஸ்தாபனத்துக்கு பப்ளிஸிடி தேட வேண்டி வரும். அது அப்படியே வழுக்கி விட்டு ஸ்தாபனத்தில் ஈடுபட்டிருக்கிற நமக்கும் Self-publicity தேடிக் கொள்கிற சபலத்தில் கொண்டு விடும். ஆண்டு விழாவில் நாம் வரவேற்பு சொல்ல மாட்டோமோ, வந்தனோபசாரம் சொல்ல மாட்டோமோ, வருகிற முக்கியஸ்தர்களுக்கு மாலையாவது போட மாட்டோமா, ஃபோட்டோவிலாவது தெரியும்படி நிற்க மாட்டோமா என்று இப்படியெல்லாம் மனஸை அலையச் செய்யும். அதாவது அஹங்காரத்தை அழித்துக் கொள்ளவே ஏற்பட்ட பொதுத் தொண்டு, நேர்மாறாக அஹங்காரத்தை விருத்தி செய்கிறதாக விபரீத ரூபம் எடுத்துவிடும். தான் இருக்கிற இடமே தெரியாமல், தன் காரியம் மட்டுமே தெரிவதுதான் தொண்டின் லக்ஷணம். இதனால்தான் ‘தர்மே க்ஷரதி கீர்த்தநாத்’ என்று சொல்கிறது. அதாவது, பாபம் பண்ணிவிட்டேன் என்று ஒருத்தன் வெளியில் சொன்னாலே எப்படி அவனுடைய பாபம் நசித்து விடுமோ, அப்படி “தர்மம் பண்ணுகிறேன்” என்று தண்டோரா போட்டுக் கொண்டால் அதனால் ஒருத்தனுக்குக் கிடைக்கிற புண்யமும் நசித்து விடுமாம்! ஸம்ஸ்க்ருதத்தில் Subtle -ஆக (நுட்பம் மிக்கதாக) “தர்ம த்வஜன்” என்பார்கள். தர்ம த்வஜன் என்றால் தர்மக் கொடியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பவன் என்று அர்த்தம். இது பாராட்டுகிற டைட்டில் மாதிரி தொனித்தாலும் இதற்கு உள்ளர்த்தம் “போலி தர்மவான்” என்பதே! தன் தர்மத்தை உசத்திக் காட்டுவதாலேயே அதை இவன் போக்கிக் கொண்டு விடுகிறான் என்பது தாத்பர்யம்! – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

In Western countries, Philanthropy has been institutionalized. But in our Vedic tradition, individuals and associations have been performing many acts of philanthropy without really institutionalizing it. The greatest factor about lack of institutionalization is that there is least chance of ‘Ego/Pride’ dominating the entire act. Since the charity is performed naturally, as a part of life, there is little chance of arrogance creeping in. Once an institution is formed, office bearers have to be elected. Politics and publicity naturally follow. Keeping this in mind, I have advised people to perform social service through the existing devotional and spiritual groups even when the service requires coming together of a number of persons. I also warn against mega plans and fund collection drives (beyond the requirement) for the very same reason. Such efforts will require publicity for the organization and eventually this will tempt us into efforts for self publicity. We may want to play an important part in the functions like garlanding the chief guest and will be eager to pose for the publicity photos. The social service which is supposed to negate our ego will end up inflating it – what a negative consequence! Social Service should be done quietly without anyone knowing it. Our sastras have this valuable advice to offer – as sins are mitigated by admitting to them, similarly the Punnya or the Goodwil one earns is lost by publicizing the good acts we have done. There is a subtle terminology in Sanskrit called “Dharma Dhwajan” – the one who is holding the flag of charity aloft. Though on face this seems to be a eulogy, it actually cynically means that the person is a false philanthropist who has lost the value of the charitable acts he has performed by publicizing them. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Please. Extra ‘l’ has crept in ‘ subtle ‘ in the eighth line from the bottom

Leave a Reply

%d bloggers like this: