சரீர வியாதிதான் தொத்துகிறது என்றில்லை. எண்ணங்களும் பிறத்தியாரை பாதிக்கவே செய்கின்றன. இப்போது ஸயன்ஸில் கூடச் சொல்கிறார்கள், ‘மூளை எண்ணங்களாக வேலை செய்வதுகூட ஒரு எலெக்ட்ரிக் கரென்ட்தான்; சிந்தனா சக்திக்குப் (thought-power) பிறரையும் பாதிக்கிற தன்மை இருக்கிறது’ என்று. அதனால் நாம் சரீரத்தையும், புத்தியையும் சுத்தமாக வைத்துக் கொண்டிருப்பதாலும் பிறரின் தேக மன ஆரோக்கியங்களுக்கு உபகாரம் பண்ணியவர்களாக (அபகாரம் பண்ணாதவர்களாகவாவது) ஆகிறோம். நேராக மூளையை சுத்தப்படுத்திக் கொள்கிறேன் என்று உட்காருவதைவிட, நான் சொன்ன அநேக தினுஸான பரோபகாரங்களை – எல்லாவற்றையுமோ, சிலவற்றையோ நிறையச் செய்து கொண்டிருந்தாலே, தானாகச் சித்தம் சுத்தமாகிவிடும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Not only the physical diseases but the thoughts of the mind are also infectious. Nowadays, even Science says that the manifestation of the brain as thoughts is in the form of electric current; this thought power has the capacity to affect others as well. So when we keep our body and mind pure we are helping others to maintain their physical and mental health – atleast we are not harming these two. Instead of sitting down to directly cleanse the mind, it is better to involve oneself in all or some of the different forms of philanthropy I have enlisted. The mind will become pure on its own. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Divine Nectar from MahaPeriyava. Jaya Jaya Shankara Hara Hara Shankara.
Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman. Nagapattinam