Deepavali Special-Kamakoti Suriyan!

 kanchi-periava-3

 

 

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Another gem  of a  poem  on  Maha Periava  taken  from  the  Deepavali  edition of Kalaimakal magazine 1969.  This  poem  was  penned  by  one  ‘Jyothi’  which  is  a  chosen  name. One of our readers mentioned that this person is none other than the editor of Kalaimagal late Sri Ki. Va. Jagannathan.

Many Jaya Jaya Sankara to Shri B. Narayanan Mama for the sharing this article along with one of his great Periyava drawings. Ram Ram


காமகோடிக்  கதிரவன். – ‘ஜோதி’

சாந்தம்  மணக்கும்  திருவதனம்,  தயையே  மணக்கும்  திருவிழிகள்

காந்தம்  என்ன  அன்பர்  மனம்  கவரும்  இனிய  புன்முறுவல்,

போந்த  வெள்ளைத்  திருநீறு   பொலியும்  நெற்றி,  தவச்  செங்கோல்

ஏந்தும்  மலர்க்கை,  இதயத்தில்  இறைவன்  உள்ளான்  என்னும்கை;

 

காவியாடை  புனைந்தொளிரும்  கவினார்  மேனி,  கனிமாலை

மேவுந்  திருத்தோள்,  அக்கமணி  விளங்கும்  மார்பம்,  அருள்மலரப்

பூவில்  மேவும்  இடமெல்லாம்  புனிதம்  வளரச்  செயும்  அடிகள்

யாவும்  அமைந்த  திருமூர்த்தி  சந்த்ரசேகரேந்திரனே !
 

சொல்லும்  சொல்லால்  அடியவர்தம்  சோர்வு  போக்கி  அருள்  பொழிவான்;

கல்லும்  கனியக்  கண்ணீனொளி  காட்டிக்  கருணை  வழங்கிடுவான்;

செல்லும்  இடங்கள்  திருத்தலமாச்  செய்வான்;  ஞானச்  செங்கோலை

அல்லும்  பகலும்  ஓச்சி  நிற்கும்  ஆசான்  சந்த்ர  சேகரனே !
 

காம கோடி  பீடத்திற்  கதிரோன்  போல  ஒளிர்கின்றான்,;

பூமி  மக்கள்  துயரமெல்லாம்  போக்கி  இன்ப வாழ்வுருதற்

காம்மெய்த்  தவம்தான்  புரிகின்றான்;  அரிய கலையாம் கடல்  கடந்தான்;

சாமி  இவனென்  றன்பர்தொழும்  சந்த்ரசேக  ரேந்திரனே !
 

இயம்பும்  மொழிகள்  யாவுமறை  என்ன  விளங்கும்;  அவனாணை

முயங்கச்  செய்யும்  முயற்சியெல்லாம்  மூலை  முடுக்கி  லும்பரவும்;

வயங்கும்  ஆசி  பெற்றவர்கள்  மாட்சி  பெற்று  வாழ்வார்கள்;

சயங்கொள்  ஞானத்  தவவேந்தன்  சந்த்ரசேக  ரேந்திரனே !
 

வேதம்  வளர,  ஆகமநல்  வித்தை  வலர,  மெய்ஞ்ஞான

போதம்  வளர,  இருபாவை  பொலிந்து  வளர,  இறைநாம

நாதம்  வளரக்  கலை  வளர  நாளும்  நாளும்  அருள்பொழியும்

தாதை  யன்றோ,  காஞ்சிவளர்  சந்த்ர  சேக ரேந்திரனே!
 

பகைவர்  இல்லை;  சுற்றமிலை;  பற்றும்  இல்லை;  புகழ்விரும்பும்

வகையும்  இல்லை;  இவன்போல்  மகானிங் கில்லை;  கலியுகத்தும்

புகையும்  புலனை அடக்கி  வென்று பொலிதல் கூடு  மெனச்சொல்லும்

தகமை  காட்டுகின்றான்  எம்  சந்த்ர  சேக  ரேந்திரனே!
 

வாழி  காம கோடியெனும்  மாண்பார்  பீடப்  பெருங்குரவன்!

வாழி  ஆதி  சங்கரன்றன்  வழியில்  வந்த மாவாசான் !

வாழி இந்து  மௌளிபதம்  வழுத்திப்  பணியும்  மெய்ஞ்ஞானி !

வாழி வாழி அருட்சந்த்ர சேக  ரேந்த்ர  மாதவனே !



Categories: Krithis

Tags:

1 reply

  1. very beautiful lines

Leave a Reply

%d bloggers like this: