சாவு என்றால் எவனுக்கும் பயம்தான். ஆயுஸ் முழுக்க நாஸ்திகனாக இருந்தவன்கூட அந்திம காலத்தில் ஏதோ ஒரு பெரிய சக்தியின் கையில் தானிருக்கிறோம் என்று கொஞ்சமாவது தெரிந்து கொள்ளாமலிருக்க மாட்டான். அந்த நேரத்திலே பயத்தைப் போக்க அந்த சக்திதான் கதி என்ற எண்ணம் எவனுக்கும் வராமல் இருக்காது. எவனுமே ஈஸ்வர த்யானத்தோடுதான் சாக விரும்புவான் என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆனதால், நாம் அவனுக்கு உபகரிப்பதை அவன் நிச்சயம் ஏற்றுக்கொள்வான். அவனுடைய பந்துக்களும் இந்தக் கைங்கர்யத்தை வரவேற்பார்கள். சில கிழம் கட்டைகள் போகாதா என்று இருக்கும்போது, வைத்யம் பார்க்கிறோம் என்று நாம் போனால் ஒருக்கால் பந்துக்கள் அசட்டை பண்ணக்கூடும். ஆனால் ‘புறப்பாடு’ நன்றாக நடப்பதற்கே நாம் உபகாரம் பண்ணுகிறோம் என்றால் எவரும் ஆக்ஷேபிக்க மாட்டார்கள்! அதிலும் நாம் அவர்களுக்குச் எந்தச் செலவும் சிரமமும் வைக்காததால் நிச்சயம் ஆக்ஷேபிக்க மாட்டார்கள் ஆனதால் நாம் இப்படிப்பட்ட தொண்டு செய்கிறோம் என்று தெரிந்துவிட்டால், அவர்களே நம்மைக் கூப்பிடுவார்கள். கூப்பிடாவிட்டாலும் நாம் போக வேண்டும். அவர்கள் கடும் நாஸ்திகர்களாக இருந்து ஆக்ஷேபித்தால் கொஞ்சம் எடுத்துச் சொல்லிப் பார்க்கலாம். அப்படியும் கேட்காவிட்டால் திரும்பிவிடலாம். அவமானம் பார்க்க ஆரம்பித்துவிட்டால் அது தொண்டே இல்லை. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Everybody is scared of death. Even a die-hard atheist will be aware that he is in the hands of some great power, at his final moments. There will be a strong feeling that only this power can allay his fear. I feel that everyone will like to leave this life, meditating on Bhagawan. So a dying person will definitely accept our help (of chanting the divine name of Bhagawan, near his death bed). Even his relatives will welcome it. Only in the case of certain very elderly people, the relatives may object if we try to treat them, since they will be awaiting release of these old people from this life. But no objection will be raised when they realize we are only trying to ease the final journey. They may even summon us if they come to know we are performing such services. Even if they do not call us, we should go. If they are die-hard atheists who strongly object to this service, we should try to convince them. If they are not convinced we should turn back. We should not fear humiliation while doing any service because once we do so, this ceases to be a service. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply