யாருக்கு எது ஹிதமாக இருக்குமோ, அப்படிப்பட்ட ப்ரஸாதமாக எடுத்துப்போக வேண்டும். விபூதிப்ரஸாதம் என்பது சிவன் கோயிலில் இருக்கும் தக்ஷிணாமூர்த்திக்கோ, அல்லது தனிக் கோயிலில் இருக்கிற பிள்ளையாருக்கோ, ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிக்கோ அபிஷேகம் பண்ணப்பட்ட விபூதியாக இருக்க வேண்டும். ஸாக்ஷாத் பராசக்தியான அம்பாள் பாதத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தமும் கங்கா ஜலத்துடனோ, கங்கா ஜலம் கிடைக்காவிட்டால் அதற்குப் பதிலாகவோ வைத்திருந்து, மரிக்கிறவனுக்குக் கொடுக்கலாம். இதேபோல் விஷ்ணுபரமாக, பெருமாளுக்கு அர்ச்சனை செய்த துளஸியைக்கொண்டு வந்து உலர்த்தி ஸ்டாக் வைத்துக் கொள்ள வேண்டும். பெருமாள் பாதத்தில் அபிஷேகமான தீர்த்தமும் கொடுக்கலாம். கங்கை கிடைக்காவிட்டால், அதற்கு பதில் வைஷ்ணவர்களுக்குப் பெருமாள் பாத தீர்த்தம் தரவேண்டும். பெருமாளுக்கு நித்யப்படி முழு அபிஷேகம் இராது. திருமஞ்சனம் என்று சில நாட்களில்தான் செய்வார்கள். அதனால் மூர்த்தியின் பாதத்தில் மட்டும் அபிஷேகம் பண்ணுவித்து அந்தத் தீர்த்தத்தை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்ள வேண்டும். எதற்கும் கங்கை கைவசம் இருப்பது நல்லது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
When we come to know that a person is in death bed we should take the prasadam that will console his mind. It it is vibhuthi prasadam, it should be the vibhuthi used to perform abhishekam for Dhakshinamoorthy in the Sivan temple or Pillaiyar or Subramania Swamy presiding in temples of their own. Holy water used to wash the feet of Ambal can be used along with the water of Ganges, or in case Ganges water is not available, it can be used instead of the same. Similarly a stock of Thulasi used to perform archana to Perumal can be collected, dried, and kept with us. Similarly in the case of Vaishnavites, the holy water used to wash the feet of Perumal can be collected and used whenever Ganges water is not available. Abhishekam is not performed to the Perumal regularly. Thirumanjanam is performed on occasions. So, a specific request can be made at the temple and the holy water can be collected after ensuring that that the feet of Perumal are washed with it. But it is always better to keep a stock of Ganges water with us. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
எவ்வளவு மஹத்துவமான நமது பாரம்பர்யம். நமது அகத்து பெரியவர்களின் குருவான ஸ்ரீகுரு மஹாபெரீவாளின் கருணாகடாக்ஷத்தினால் பாதுகாத்துவைத்த ரக்க்ஷைகள்மிகவும் உபயோகமாக இறையடி சேர்ந்த உறவினர்களின் மோக்க்ஷத்தினை கண்டிருக்கிறோம். நமது சந்த்திகளுக்கும் பயிற்றுவிப்போம் . மஹாபெரீவா பாதாரகமலம் சரணம்
Please.It is”if it is”and not “it it is”in the third line from the top.