Maha Periyava’s Meaningful Command-Sleep Near the Stove!

 


Shri KN Gurumurthy with His Padukas 2

Jaya Jaya Sankara Hara Hara Sankara – The compassionate side of Sri Periyava comes to the fore in this incident described by Shri Ramani Anna. I remember one of Shri Joshi Mama’s relative recalled this incident few years back.

Many Jaya Jaya Sankara to Smt. Bharathi Shankar, our sathsang seva volunteer for the translation. Ram Ram

மஹா ஸ்வாமிகள் போட்ட அர்த்தமுள்ள ஆணை – அடுப்புக்கு பக்கத்திலே படு!

 

பல வருடங்களுக்கு முன், ஒரு சித்திரை மாதம். வருஷப் பிறப்பு தினம். காலை வேளை. ஸ்ரீ காஞ்சி மடத்தில் மஹா ஸ்வாமிகளை தரிசிக்க ஏகக் கூட்டம். நீண்ட வரிசை.

அந்த வரிசையில் பதினாறு வயது இளைஞனும் காத்திருந்தான். வரிசை மெல்ல நகர்ந்தது. பத்து மணி சுமாருக்கு மஹா ஸ்வாமிகள் அமர்ந்திருந்த மேடை அருகே வந்து சேர்ந்தான் அந்த இளைஞன். அவனை சற்று நேரம் உற்றுப் பார்த்தார்

ஆச்சார்யாள். அவ்வளவு தான்! உடனே, பெரியவாளுக்கு முன் சாஷ்டங்கமாக விழுந்து நமஸ்கரித்தான். உடனே எழவில்லை. சற்று நேரம் பொறுத்து பார்த்த ஸ்வாமிகள், “அப்பா, கொழந்தே எழுந்திரு…எழுந்திரு !” என்று ஆக்ஞை இட்டார். எழுந்தான். கைகளை மேல கூப்பி நின்றான். பக்தி நடுக்கம் அவனிடம் இருந்து அகலவில்லை. அவன் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது!

இளைஞனை அருகே கூப்பிட்டார் ஸ்வாமிகள். கும்பிட்டபடி அருகே சென்றான். “நீ யாரப்பா ? ஒம் பேரென்ன ? எந்துர்லேந்து வர்றே ?” என்று விசாரித்தார். அந்த இளைஞன் மிகவும் வினயமாக வாயை ஒரு கையால் பொத்தி, “ஸ்வாமி. எம் பேரு பாலக்ருஷ்ண ஜோஷி. குஜராத்தி பிராமணன். மெட்ராஸில் இருந்து வர்றேன். பூர்வீகம் குஜராத் !” என்று அடக்கத்தோடு சொன்னான்.

“மெட்ராஸ்ல எந்த இடம்னு ?” என்று கேட்டார்.

“ஹனுமந்தராயன் கோவில் தெரு ஸ்வாமி!” என்றான் ஜோஷி பவ்யமாக.

“என்ன படிச்சிருக்கே?”

“எட்டாவது வரைக்கும் பெரியவா என்று தயங்கித் தயங்கி சொன்னான் ஜோஷி.

“அது போகட்டும்…இன்னிக்கு புது வருஷப்பொறப்புங்கரதாலே இந்த க்ஷேத்தரத்துலே இருக்கற கோயில்களுக்கு ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு போவோம்னு வந்தியாக்கும் ?” என்று விசாரித்தார் மஹா ஸ்வாமிகள்.

“அப்படி இல்லை பெரியவா ! பெரியவாளை தரிசனம் பண்ணிட்டு போகணும்னு வந்தேன் !”

உடனே மஹா ஸ்வாமிகள், “அபச்சாரம்…அபச்சாரம். அப்படியெல்லாம் சொல்லப் படாது. ஒரு ஊருக்கு போனா, மொதல்லே அங்கே இருக்கற சிவ, விஷ்ணு ஆலயங்களுக்கு போய் அவசியம் தரிசனம் பண்ணனும். நா எந்த ஊருக்கு போனாலும் கோயில்களுக்கு போய் தரிசனம் பண்ணிவிட்டு தான் மறு காரியம்…என்ன புரியறதா ?” என்று, வாய் விட்டுச் சிரித்தார் ஸ்வாமிகள்.

“இப்போ புரிஞ்சுண்டேன்!” என்று அடக்கமாக பதில் சொன்னான் ஜோஷி. உடனே மஹா ஸ்வாமிகள், “சரி…ஆச்சார்யாள் பிரசாதத்தை வாங்கிண்டு, இந்த ஊர்லே இருக்கிற கோயில்களுக்கு எல்லாம் போயிட்டு, அப்புறமா மெட்ராசுக்கு பஸ் ஏறணும் !” என்ன புரியறதா ?” என்று சற்று அழுத்தம் கொடுத்து சொன்னார் ஸ்வாமிகள். உடனே பாலக்ருஷ்ண ஜோஷி சற்று தைரியம் வந்தவனாக, “நன்னா புரியறது பெரியவா.  நீங்க உத்தரவு பண்ணபடியே இந்த ஊர்லே எல்லா கோயில்களுக்கும் போயிட்டு, தரிசனம் பண்ணிட்டு மடத்துக்கு வந்துடறேன். அனுக்கிரகம் பண்ணனும் !” என்றான். ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே, “அதான், பிரசாதமெல்லாம் இப்பவே கொடுத்துடப் போறேனே. திரும்ப எதுக்கு மடத்துக்கு வரப் போறே? ஓஹோ..ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு, மத்யானம் மடத்துலே சாப்பிட்டு பஸ் ஏறலாமுனு முடிவு பண்ணி இருக்கியாக்கும்! பேஷ்..பேஷ்” என்று உத்தரவு கொடுத்தார் ஸ்வாமிகள். தயங்கினான் ஜோஷி. அவன் கண்களில் நீர்.

“ஏன் கண் கலங்கறே ?” – பெரியவா அன்போடு கேட்டார்.

உடனே ஜோஷி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “கொஞ்ச நாள் இங்கேயே இருக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. அதனாலே …” என்று முடிப்பதற்குள், “இங்கேயானா…புரியலியே ?” என்று இடை மரித்தார் மஹா ஸ்வாமிகள்.

ஜோஷி பவ்யமாக, “மடத்துலே தான் பெரியவா !” என்றான்.

“என்ன…மடத்துலையா ! இங்க சன்யாசிகள் நா தங்குவா. ஒன்னாட்டம் இருக்கற பசங்களுக்கு இங்கே என்ன வேலை ? ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு ஊர் போய்ச் சேரு !” – ஸ்வாமிகளின் குரலில் சற்று உஷ்ணம் தெரிந்தது.

ஜோஷி நகரவில்லை. மீண்டும் ஒரு முறை பெரியவாள் காலில் சாஷ்டங்கமாக விழுந்து எழுந்தான். “பெரியவா அப்படிச் சொல்லப் படாது. நேக்கு மடத்திலே தங்கி, ஒங்களுக்கு கொஞ்ச காலம் பணி விடை செய்யணும்கறது எண்ணம் !” என்று கொட்டி விட்டான்.

ஆச்சார்யாளுக்கு நிலைமை புரிந்தது. கள்ளம் கபடமற்ற ஜோஷியின் தோற்றமும், வெளிப்படையான பேச்சும் ஸ்வாமிகளை வெகுவாக கவர்ந்தது. ஜோஷியிடம் ஒரு தனி அபிமானம் மஹா ஸ்வாமிகளுக்கு ஏற்பட்டது. இருப்பினும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல், “நேக்கு பணிவிடையா ? இங்க தான் மடத்திலே நிறைய பசங்க இருக்காளே! இதுல நீ வேற என்னத்துக்கு ? நீ மெட்ராஸ் கிளம்பற வழியைப் பாரு !” என்றார் மஹா ஸ்வாமிகள். ஜோஷி அந்த இடத்தை விட்டு நகர மனமின்றி நகர்ந்தான். ஆனால், மடத்தை விட்டு நகரவில்லை.

ஜோஷி மத்தியானம் மடத்திலே சாப்பிட்டான். பெரியவா தங்கி ஓய்வெடுக்கும் அறைக்கு வெளியே ஓர் ஓரமாக உட்கார்ந்து கொண்டான்.

சாயரக்க்ஷ வேளை. ஸ்வாமிகள் ஸ்நானம் முடித்து வெளியே வந்தார். ஜோஷி வர கண்ணில் பட்டான். பெரியவா ஏதும் பேசாமல் வேகமாகக் கடந்து சென்றார். பெரியவா எங்கு சென்றாலும் அவர் கண்ணில் படுகிற மாதிரி நின்று பார்த்தான் ஜோஷி. நான்கு நாட்கள் விடாமல் பக்தி வைராக்கியத்தோடு நின்று பார்த்தான். பலனில்லை!

ஐந்தாவது நாள். விடியற்காலை வேளை. ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயில் புஷ்கரணிக்கு உஷத் கால ஸ்நானத்துக்காகப் புறப்பட்டார் ஸ்வாமிகள். ஸ்நானம் பண்ணி கரையேறிய ஸ்வாமிகள் கண்ணில் ஜோஷி பட்டான். “நீ இன்னும் மெட்ராஸ் போகலியா ?” – அனுசரணையுடன் கேட்டார் ஸ்வாமிகள். “இல்லே பெரியவா ! நான் மெட்ராசிலிருந்து சங்கல்பம் பண்ணிண்டு வந்தது பூர்த்தியாகாமல் திரும்பற உத்தேசம் இல்லே !” என வைராக்கியத்துடன் சொன்னான் ஜோஷி.

பெரியவாளுக்கு தெரிந்திருந்தாலும், தெரியாதது மாதிரி கேட்டார். அப்படி என்ன சங்கல்பமோ ?”

“கொஞ்ச காலம் உங்கள் பாதார விந்தங்களில் பணி விடை செய்றது தான் பெரியவா !” என்று எதிர்பார்போடு சொன்னான் ஜோஷி.

“சாத்தியமில்லாத சங்கல்ப்பதை பண்ணிக்க கூடாது !” – சொன்ன ஸ்வாமிகள் நடந்து போய் விட்டார்.

ஜோஷி மனம் தளரவில்லை. ஸ்ரீ காமாக்ஷி அம்மனை தரிசித்து விட்டு நேராக மடத்துக்குப் போனான். ஆச்சார்யாளின் அறை வாசலில் நின்று கொண்டான்.

பக்த தரிசனத்துக்காக ஸ்வாமிகள் வெளியே வந்தார். அவர் கண்ணில் ஜோஷி பட்டான். அவனைப் பார்த்தவுடன் ஆச்சார்யாளுக்கு மனம் நெகிழ்ந்து விட்டது. “தனக்கு பணி விடை செய்தே தீர வேண்டுமென்று இப்படி ஆசையுடன் கூடிய ஒரு வைராக்கியமா !” என்று ஆச்சர்யப்பட்ட ஸ்வாமிகள், ஜோஷியை அருகில் அழைத்தார்.

“ஒங்கப்பாவுக்கு உத்தியோகமா ? வியாபாரமா ?” என்று கேட்டார் ஸ்வாமிகள்.

“வியாபாரம் தான் பெரியவா, வைரம் வாங்கி, விக்கறது !” என்று பதில் சொன்னான் ஜோஷி.

ஒன்னோட குணத்துக்கு பிற்க் காலத்திலே நீயும் பெரிய வைர வியாபாரியா வருவே. அப்போ..நீ, நேர்மையான வைர வியாபாரின்னு பேரு வாங்கணும்! சரி..சரி!ஒன் ஆசைப்படியே கொஞ்ச நாள் மத்த பசங்களாட்டம் கூட இருந்து பணி விடை பண்ணிட்டு போ !” பச்சை கோடி காட்டி விட்டுப் போனார் ஸ்வாமிகள்.

ஸ்வாமிகளுக்கு பணி விடை செய்யும் நான்கைந்து இளைஞர்களோடு ஜோஷியும் சேர்ந்தான். ஆச்சார்யாளை தரிசித்துக் கொண்டே இருப்பது; சொன்ன பணி விடைகளை செய்வது என இரண்டு நாட்கள் நகர்ந்தன. அந்த இரண்டு நாட்களும் இரவிலும் ஆச்சார்யாள் படுத்த அந்த அறையிலேயே ஓர் ஓரமாக மற்ற பையன்களுடன் ஜோஷிக்கும் படுக்கை. இதைப் பரம பாக்கியமாகக் கருதினான் ஜோஷி.

மூன்றாவது நாள் இரவு. படுக்கப் போகும் முன் ஆச்சார்யாள் ஜோஷியை அருகே வரச் சொன்னார். ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தான் ஜோஷி. “பால கிருஷ்ணா ஜோஷி..நீ இனிமே ஒரு காரியம் பண்ணனும்! பகல் பூரா என்கூட இருந்து மத்தவா மாதிரி பணிவிடை பண்ணு. ராத்திரி வேளையிலே மாத்திரம் நீ இங்க படுத்துக்க வேண்டாம்!” என்று சொல்லி முடிப்பதற்குள், ஜோஷி பதற்றத்துடன், “பெரியவா அப்படி ஒரு உத்தரவு போடப்படாதுனு  பிரார்த்திக்கிறேன் ! நானும் மத்தவா மாதிரி நீங்க இருக்கிற இந்த ரூம்லேயே படுத்துக்கறேன். கிருபை பண்ணனும் !” என்று கண்களில் நீர் மல்க கெஞ்சினான்.

ஸ்வாமிகள், நா காரணமா தான் சொல்லறேன் ! நீ கேக்கணும்” என்று குரலில் சற்று கடுமை காட்டினார்.

ஜோஷி, “சரி பெரியவா, நீங்க சொல்றபடியே செய்யறேன்” என்று சமாளித்துக் கொண்டு பேசினான்.

உடனே பெரியவா சிரித்துக் கொண்டே, “அப்படிச் சொல்லு. ராத்திரி நேரா சமையல் கட்டுக்கு போ! அங்க பெரிய கோட்டை அடுப்புக்கு பக்கத்தில் ஒரு மர பெஞ்சு கெடக்கும்! அதுல சௌக்கியமா படுத்துத் தூங்கி விடியக் காலம் எழுந்து பல் தேச்சு, ஸ்நானம் பண்ணிட்டு இங்க கைங்கர்யத்துக்கு வந்துடு…என்ன புரியறதா? ” என்று கறாராகக் கட்டளயிட்டார் ஸ்வாமிகள்!

ஜோஷியால் மேற் கொண்டு ஏதும் பேச முடியவில்லை. கண்களின் நீரைத் துடைத்துக் கொண்டு, “நீங்க சொன்னபடியே பண்ணறேன் பெரியவா !” என்று நகர்ந்தான். மற்ற பையன்களெல்லாம் இதை வேடிக்கை பார்த்தனர். ‘தன்னை மட்டும் பெரியவா ஏன் கோட்டை அடுபந்க்கரையில் போய் படுக்க சொன்னார் ?” என்ற கேள்விக்கு அவனால் விடை காண முடியவில்லை.

ஜோஷி வெளியே வந்ததும், மஹா ஸ்வாமிகளுக்கு கைங்கர்யம் பண்ணுகிற ஒரு இளைஞன் எதிர்ப்பட்டான். அவனை அழைத்த ஜோஷி, “ஏம்ப்பா! ஒங்கள்லே யாரையாவது பெரியவா இது வரைக்கும் ராத்திரியிலே கோட்டை அடுப்பங்கரையிலே போய்ப் படுத்து தூங்க சொல்லிருக்காளா ?” என்று ஆர்வமுடன் கேட்டான். உடனே அந்த இளைஞன் முகத்தை சுளித்தவாறு, “சேச்சே ! எங்க யாரையும் பெரியவா இது வரை அப்படிச் சொன்னதே இல்லை என நகர்ந்தான்.

ஜோஷிக்கு அவமானமாக இருந்தது. அப்போது இரவு பத்து மணி. கேவிக் கவி அழுது கொண்டே வெறிச்சோடிக் கிடந்த சமையலறைக்குள் வந்து, பெரியவா சொன்னபடி கோட்டை அடுப்பருகே கிடந்த மர பெஞ்சில் படுத்தான். அவன், இரவு ஒன்றும் சாப்பிடவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. நெடு நேரம் விழித்துக் கண்ணயர்ந்தான். பொழுது புலர்ந்தது. மடம் விழித்துக் கொண்டது. மடத்துக்கே உரிய வேத பாராயணங்களும், பஜனைப் பாடல்களும் இதமாக காற்றிலே மிதந்து வந்தன.

ஜோஷி கண் விழித்துக் கொண்டான். பல் துலக்கி, ஸ்நானம் பண்ணி விட்டு, நேராகக் காமாக்ஷி அம்மன் கோவில் சந்நிதியில் போய் உட்கார்ந்து விட்டான். பெரியவா கைங்கர்யத்துக்கு போக வேண்டுமென்று அவனுக்கு தோணவில்லை. மதியம் மடத்துக்கு வந்தான். சாப்பிட்டான். மீண்டும் மாலை காமாக்ஷி அம்மன் சந்நிதி. இரவு பத்து மணிக்கு சமையல்கட்டில், கோட்டை பெஞ்சில் படுக்கை. பெரியவாளிடமே போகவில்லை.

இப்படி இரண்டு நாட்கள் நகர்ந்தன. மூன்றாம் நாள் காலை. மகா ஸ்வாமிகள், தனக்கு பணிவிடை செய்யும் இளைஞன் ஒருவனை அருகில் அழைத்தார். அவனிடம் கவலையோடு, “ஏண்டாப்பா ! ரெண்டு நாளைக்கு முன்னாடி பாலக்ருஷ்ண ஜோஷினு ஒரு பையன் சேவை பண்ண வந்தானே…அவனைக் காணலியே ! எங்கே போய்ட்டான்? ஒரு வேளை, சொல்லிக்காம மெட்ராசுக்கு போயிட்டானோ ?” என்று வினவினார்.

உடனே அந்த இளைஞன் தயங்கியபடி, “இல்லே பெரியவா. மடத்துல தான் இருக்கான் ! என்றான்.

“பின்னே, ரெண்டு நாளா ஏன் இங்கே வரலே ?”

“தெரியலியே பெரியவா…”

அதற்க்கப்புறம் மற்றொரு பையன் அங்கு வரவே, அவனை அருகில் அழைத்த பெரியவா, “ஏண்டா, நோக்கு ஏதாவது தெரியுமோ ? அந்த குஜராத்திப் பையன் ரெண்டு நாளா ஏன் இந்த பக்கமே வரலே ?” என்றார் ஆதங்கத்துடன்.

“தெரியலே பெரியவா !” – அவன் சொன்னான்.

“சரி..சரி..அந்த ஜோஷியைப் பார்த்து நா ஒடனே வரச் சொன்னதா தெரிவி…” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார் ஸ்வாமிகள்.

மகா ஸ்வாமிகளுக்கு முன் வந்து கூனி குறுகி நின்றான் ஜோஷி.

“வா கொழந்தே…எங்க ரெண்டு நாளா ஒன்ன இந்தப் பக்கமே காணலே ? உடம்பு கிடம்பு சரியில்லையோ ?” – அன்புடன் விசாரித்தார் பெரியவர். கை கூப்பி நின்ற ஜோஷியிடம் இருந்து பதில் இல்லை.

“என்கிட்டே ஏதாவது வருத்தமோ…கோபமோ ?” என்று முகத்தில் சந்தோஷம் தவழ குழந்தைத் தனமாகக் கேட்டார் ஸ்வாமிகள்.

ஜோஷி மெதுவாக வாய் திறந்தான். “கோபமெல்லாம் இல்லை பெரியவா ! மனசுக்கு கொஞ்சம் வருத்தம்.” என்று தட்டு தடுமாறி சொன்னான். பெரியவா ஆச்சர்யத்தோடு ஜோஷியப் பார்த்து, “வருத்தமா…எம் பேர்லேயா ?” என்று கேட்டார்.

ஜோஷி பதில் கூறவில்லை. மௌனம் காத்தான்.

பெரியவா விடவில்லை. “சொல்லு…சொல்லு…உன் வருத்தத்தை நானும் தெருஞ்சுக்கணுமோலியோ…” என்று உற்சாகப் படுத்தினார். மற்ற பையன்கள் அனைவரும் கை கட்டி நின்றிருந்தனர்.

பெரியவாளை நமஸ்காரம் பண்ணி விட்டு ஜோஷி வாய் விட்டு பேச ஆரம்பித்தான். “வேற ஒண்ணுமில்லை பெரியவா ! மொதல் ரெண்டு நாள், என்னையும் ராத்திரியிலே மத்த பையன்களோட இங்கேயே படுத்துக்க சொல்லி உத்தரவு பண்ணேள். சந்தோஷமா படுத்துண்டேன். திடீர்னு முந்தா நாள் ராத்திரி கூப்பிட்டு, “கோட்டை அடுப்புக்குப் பக்கத்திலே பெஞ்சிலே போய்ப் படுத்துக்கோ’னு உத்தரவு பண்ணிட்டேள் ! நா இவாள மாதிரி இந்த பக்கத்து பிராமணனா இல்லாமே குஜராத்தி பிராமணனா இருக்கறதாலே என்னை அங்கே போய் படுத்துக்க சொல்லிடேளோனு எம் மனசுக்கு கஷ்டமாயிடுத்து!  அதனாலே தான் ரெண்டு நாளா இங்கே வரலே. என்னை மன்னிச்சுடுங்கோ பெரியவா…”- கதறி அழுதபடியே பெரியவாளின் கால்களில் விழுந்தான் ஜோஷி.

நிலைமையைப் புரிந்து கொண்டார் ஸ்வாமிகள். சற்று நேரம் ஒன்றும் பேசவில்லை. அங்கு அமைதி நிலவியது. பிறகு, அங்கு நின்றிருந்த பையன்களை சற்று வெளியே போகச் சொன்னார் ஸ்வாமிகள். ஜோஷியை அருகில் அழைத்தார். பரம வாத்ஸல்யத்துடன், “அடடா…பாலக்ருஷ்ணா…நா ஒன்னை கோட்டை அடுப்புக்கிட்டே பெஞ்சிலே படுத்துக்க சொன்னதுக்கு, நீ இப்படி அர்த்தம் பண்ணிண்டுடியா ! அடப் பாவமே…நா அப்படியெல்லாம் நெனச்சுண்டு அத சொல்லலேப்பா! சின்ன பையன் தப்பா புரிஞ்சுண்டுட்டியே” என்று கூறி விட்டு, ஜோஷியை கீழே உட்காரச் சொன்னார் பெரியவா. தயங்கியபடியே அமர்ந்தான்.

உடனே பெரியவா கருணை ததும்பும் குரலில், “ஒன்னை மட்டும் சமையலறை கோட்டை அடுப்புக்கிட்டே மர பெஞ்சுலே படுத்துக்க சொன்னதுக்கு, நீ மனசுலே போட்டு வெச்சுண்டு இப்போ வெளிப்படுத்தினியே…அந்த விசேஷ காரணமெல்லாம் இல்லவே இல்லேடா ஜோஷி. அதுக்கு ஒரே காரணம் தான்…இதோ பார்றா ஜோஷி !” என்று, தான் இடையில் அணிந்திருந்த வஸ்திரத்தை தொடை வரை நகர்த்திக் காண்பித்தார் ஸ்வாமிகள். ஆச்சார்யாளின் சிவந்த தொடைகளில் அடை அடை ஆக கொசு கடித்த தழும்புகள்.

“கொழந்தே ஜோஷி ! இதெல்லாம் என்னனு தெரியறதா நோக்கு ? ராத்திரி வேளையிலே கொசு கடிச்ச தழும்புகள். நா ஒரு சந்நியாசி. இதைப் பொறுத்துண்டு இருந்துடுவேன். நீ கொழந்தே ! ரொம்ப கஷ்டப்படுவே! ரெண்டு நாள் முன்னாடி நீ கொசுக்கடியிலே சிரமப்படறதைப் பார்த்தேன். என்னாட்டம் நோக்கும் சிவப்பு ஒடம்பு! அவஸ்தைப் படாமல் நீயாவது சௌக்கியமா தூங்கட்டுமேனு தான் பத்திரமான எடத்துக்கு ஒன்னை போகச் சொன்னேன்! கோட்டை அடுப்புக்கு பக்கத்தில் அந்த பெஞ்சு கிடக்கறதாலே, அடுப்பு உஷ்ணத்தில் அங்க கொசு வரவே வராது! நன்னா தூங்குவே! அதனாலே தான் அப்படிச் சொன்னேன். நீ என்னடான்னா வேற விதமா…விபரீதமா நினைச்சுண்டிடேயே!” என்று பெரியவா சிரித்துக் கொண்டே சொன்னது தான் தாமதம் ! “ஹோ” என்று கதறி அழ ஆரம்பித்து விட்டான் ஜோஷி!

“பெரியவா…என்னை மன்னிச்சேன்னு சொல்லுங்கோ ! ஒங்க கருணையை புரிஞ்சிக்காம நா ஏதேதோ உளறிட்டேன் !” என்று விம்மினான் ஜோஷி! அந்த காருண்ய மூர்த்தி சிரித்துக் கொண்டிருந்தது. தன் கைகளை உயர்த்தி பூரணமாக பாலகருஷ்ண ஜோஷியை ஆசிர்வதித்தது அந்தத் தெய்வம் !

“ஜோஷி! பிற்காலத்தில் நீயும் ஒரு சிறந்த வைர வியாபாரியா விளங்குவே ! நியாயமான விலைக்கு வித்து நல்ல படியா வியாபாரம் பண்ணு !” என்று மனப்பூர்வமாக ஆசீர்வாதம் பண்ணினார் மஹா ஸ்வாமிகள்.

பிற்காலத்தில் ஸ்வாமிகள் வாக்குப்படியே நியாயம், தர்மம் வழுவாத பெரிய வைர வியாபாரியாக விளங்கினார் பாலக்ருஷ்ண ஜோஷி! (சமாதி) காலம் வரையிலும் அவரது பூரண அன்புக்கு பாத்திரமாக விளங்கினார். சில வருஷங்கள் கழித்து ஜோஷியும் இறைவனடி சேர்ந்தார்.

__________________________________________________________________________________________ 

 The Meaningful command of Maha Periyava – Sleep near the Stove

Many years ago, it was the Tamizh new year day. Morning time. There was a heavy rush in the Kanchi Sri Matam with a long winding queue, to have Darshan of Maha Periyava.

There was a sixteen year old boy waiting in the queue. The queue was moving slowly. Around ten o’clock, the boy reached somewhere near the stage where Periyava was seated. Swamigal looked at him deeply for some time. That is all. The boy fell at His feet head long and made a Sashtaanga namaskaaram. But he didn’t rise immediately. After waiting for a few minutes patiently, Swamigal ordered him in a compassionate tone, “Child, get up, get up.” The boy rose slowly and stood with his hands folded above his head. His body was still trembling with Bhakthi. Tears were streaming down his face.

Swami called the boy to come near Him. The boy approached Him with folded hands. “Who are you? What is your name? Which place are you coming from?” Swamy enquired him. The youth replied in all humility, with one hand placed on his mouth,  “Swamy, my name is Balakrishna Joshi. I’m a Gujarathi Brahmin. I’m coming from Madras but my native is Gujarat.”

“Where exactly in Madras?” He asked.

“Hanumandharayan street Swamy,” he replied respectfully.

“What is your educational qualification?”

“Eighth standard,” he replied with much hesitation.

“That’s ok. Today being the new year day, you have come to visit the temples in and around this place right?”

“That’s not so Periyava. I came to have a Darshan of you only Periyava.”

“No no, you are not supposed to say like this. When you go to a town, you are supposed to visit all the Shiva and Vishnu temples there without fail. Whenever I go to a place, the first thing I do is to have a Dharshan at the local temples and then do anything else. Do you understand?” Periyava laughed a wholehearted laugh.

“Now I understand Periyava,” replied the boy humbly. Then Periyava said,” Now get Acharyal’s Prasadham and go to all the temples in this town. Only then should you catch the bus to your place. Do you get it?” Periyava said adding a little bit of stress to His words. Immediately Balakrishna Joshi gained some confidence and said, “ I get it clearly Periyava. I’ll visit all the temples in this town as ordained by you and will come back to the Matam. Please bless me.” Swamigal said with a smile,” I’m going to give you the prasadham now itself. Then why should you come back here again? Oh have you planned to have your lunch at Matam after the temple Darshan and then leave for your place? Nice, nice,” Periyava tried to see him off. Joshi stood there hesitantly. There were tears in his eyes.

“Why are you crying?” Periya asked him affectionately. At once Joshi wiped his tears and started to speak,” I have a desire to stay here for a few days. So,…” Periyava interrupted him before he could finish his sentence and asked,” Here means? I don’t get you.”

Joshi replied meekly,” In Sri Matam only Periyava.”

“What ? In the Matam? Only Sanyasis stay here. Young boys like you have no job here. Visit the temples and get ready to go back to you place first”.  There was heat in His voice.

Joshi didn’t move. He again fell down at the Swamigal’s feet and made a Sashtaanga Namaskaram. “ Please don’t say like this Periyava. I’m thinking of staying in the Matam and serve you for some time.” He poured his heart out.

Periyava understood Joshi’s situation. His chaste and genuine external appearance and candid speech have impressed the Periyava greatly. A special liking for him was born in His heart. Still, without showing it out, Maha Swamigal told Joshi, “ There are so many boys here for my service. Why should you stay here unnecessarily? You get ready to go back to your place.”

Joshi moved away without having the heart to leave. But he didn’t go away from Sri Matam.

Joshi had lunch at Matam in the afternoon. Then he sat outside the room where Periya usually relaxes Himself.

In the evening Periyava came out of the room after finishing the Snanam (bath). His eye caught Joshi sitting in a corner. But Periyava crossed him quickly without saying anything. Joshi tried to catch Periyava’s attention by following Him wherever He went and standing within His eyesight. He stood like that for four days with a strong Will but in vain.

Fifth day morning, Periyava started for Kamakshi Amman temple Pond for His Ushath Kala Snanam (early morning bath). Joshi came into the sight of Periyava when He came out of the pond after the bath. “Haven’t you gone back to Madras yet?” asked Periyava caringly. “No Periyava. I have no plans of returning without my vow which I took before starting for here, being fulfilled,” replied Joshi with a strong Vairagyam.

Though He knew about it, Periyava asked as if unknowingly, “What is that vow?”

“To do service at your lotus feet Periyava,” Joshi said expectantly.

“ You should not make a vow to do impossible things.” Saying so, the Swamigal went past him.

Joshi’s mind did not relent on this. After having a Darshan of Kamakshi, he went straight to Sri Matam.

Swamy came out for Baktha Darisanam. Joshi caught His attention. On seeing him, the Acharyal’s heart melted a bit. Periya, feeling surprised about such a strong vow with a desire to do service to Him, called Joshi near.

“Is your father a government employee or doing private business?” asked Swamigal.

“Business Periyava. Buying and selling Diamonds,” replied Joshi.

“With your good character, you will also become a big Diamond merchant one day. At that time, you should earn a name that you are an honest Diamond merchant. Ok, as per your desire, you stay with the other men in Matam for a few days and do service along with them,” Periyava showed green signal to his wish and left.

Joshi joined the four or five young men who was doing service to Periyava. Two days passed with having Darshan of Acharya and doing the work assigned to him. Those two days, Joshi was made to lie down in the same room with the Acharya along with those men, which Joshi considered to be a great fortune.

Third day night, when the boys were getting ready for bed, the Acharya asked Joshi to come near him. Joshi came and prostrated before Him. “Balkrishna Joshi, hereafter you should do one thing. You stay with me all time during the day and serve me but during night you need not sleep here,” even before Periyava could complete the sentence, Joshi got tensed up and requested hurriedly, “I pray you not to order anything of that sort Periyava. Let me also sleep here along with others. Please show me mercy,” he begged with tears in his eyes.

“Swamigal I have a reason for saying this. When I tell you something to do, you should obey me,”  Periyava’s voice was becoming a little haughty.

Joshi understood and managed to say,”Ok Periyava. I’ll do accordingly.”

At once Periyava said smilingly, “ That’s  the spirit. During the night, go straight to the kitchen. There would be a wooden bench near the big old fashioned stove (Kottai Aduppu). Lie down on it comfortably and sleep well. Get up early in the morning, brush your teeth, have a bath and come here straightly for Kaingaryam. Do you understand?” Periyava ordered in a strict voice.

Joshi couldn’t speak anything further. He wiped away the tears from his eyes and moved away saying, “ I’ll do as per your order Periyava.” All the other boys were watching this episode. He couldn’t find an answer to the question why Periyava had ordered him alone to go and lie down near the Kottai aduppu (stove).

As soon as Joshi came out of the room, another boy in Periyava’s service was crossing that way. Joshi stopped him and asked anxiously, “Hey, has Periyava asked any of you to go and sleep on the big kitchen before?”. The boy winced his face and replied, “No no, Periyava has never asked any of us to do such things.”

Joshi felt ashamed. It was ten o’clock at night. He came into the big vacant kitchen, weeping uncontrollably and lied down on the bench near the kottai aduppu that Periyava mentioned. He didn’t have anything for dinner. He felt a lump in his throat. He was lying awake for a long time and finally dozed off. The day had dawned. Sri Matam came into life. Sri Matam’s special sounds of Veda Parayana and Bhajans were floating soothingly in the air.

Joshi woke up. He brushed his teeth, took bath and went straight to Kamakshi Amman temple and sat there. He didn’t feel like going for Periyava’s Kaingaryam. He came to Sri Matam in the afternoon. Had his lunch . Again evening at Kamakshi Amman temple. Night stay as usual near the kottai aduppu in the bench. He didn’t go to Periyava at all.

Two days passed like this. Third day morning, Periyava called a boy doing service for Him to come near. He asked him with intense worry, “ Child, two days back, a boy named Balakrishna Joshi came here for service. He isn’t around now. Where is he? May be he has left for Madras without bidding goodbye?”

The boy replied with some hesitation.” No Periyava. He is in Matam only.”

“Then why didn’t he come here for two days?”

“No idea Periyava,” he replied.

“Ok, ok. Go and inform that Joshi that I want to see him immediately,” Periya ordered and went inside.

Joshi came and stood before Periyava with his body bent down in embarrassment.

“Come child. You are nowhere to be seen around for two days. Are you sick or something?” Periyava enquired compassionately. There was no reply from Joshi who was standing with folded hands.

“Are you cross with me, or do you have any grievance against me?” asked Periyava with a child- like happy expression on His face.

Joshi opened his mouth slowly. “ No, no. I’m not angry and all. Just a small grievance at heart,” he replied in a faltering voice. Periyava looked at him with surprise and asked,” Grievance? Towards me?”

“Joshi didn’t answer. He observed silence.

Periyava didn’t relent. He encouraged him to answer,”Come on, tell me… tell me…. See I should also know your grievance.”

All the other boys stood  and watched with folded hands.

Joshi prostrated before Periyava and started to speak. “ It’s nothing Periyava. First two days, you ordered me to sleep here with the other boys in service. I was sleeping so happily. All of a sudden, day before yesterday, you called me and told me to go and sleep in the bench near the kottai aduppu in the kitchen. I thought you had asked me to sleep there because I’m a Gujarathi Brahmin and not a Brahmin of this side like others and I was feeling very heartbroken. That is why I was not coming here for the past  two days. Forgive me Periyava,” Joshi fell at His feet weeping.

Periyava understood the situation. He didn’t speak  for some time. There was absolute silence. Then he asked the other boys to leave the room and wait outside for some time. He called Joshi nearer. Then with utmost compassion, He said, “Oh Balakrishna, you seem to have misunderstood my asking you to sleep near the Kottai aduppu. So sad. I didn’t mean it that way my boy. Being young, you have misunderstood my command,” saying so, Periya asked Joshi to sit down. He sat down with hesitation.

Then Periyava started to speak in a compassionate voice. “ The reason for my suggestion for you to sleep in the kitchen does not have any special connotation which was bothering your heart and expressed by you now. There is only one reason for it. See here Joshi,” Periyava removed his Vasthram (clothing) till His thighs. There were terrible rashes because of mosquito bites on the fair skin of Periyava.

“Child Joshi. Do you understand what these marks on my skin are? They are scars of mosquito bites during the nights. I’m a Sanyasi. I would tolerate and endure them silently. But you are a small boy. You will suffer a lot. Two days ago, I noticed how you were suffering . You have a fair skin just like me. Atleast you should sleep peacefully without any inconvenience. That’s why I asked to go to a safer place. As the bench lies next to the big stove, Mosquitoes won’t come there because of the heat of the stove. That’s why I said so. But you have thought differently, misunderstanding it in a strange way…..” As soon as Periyava spoke this way with a playful smile, Joshi started wailing loudly.

“Periyava, tell me you have forgiven me. I have misunderstood your words without realising your immense mercy and have blabbered like this,” Joshi wept inconsolably. The embodiment of Mercy sat there smiling. That God of Mercy raised His hands and blessed Joshi abundantly.

“Joshi, you are going to be a renowned Diamond merchant in the future. Do your business with ethics, selling them for a fair price and prosper well,” Maha Swamigal blessed him wholeheartedly.

Later as per Periyava’s words, Joshi became a renowned Diamond merchant who was known for his strict adherence to fairness and ethics in the business. He remained as an apple of the eye of Periyava till the evening of his life and reached the Lotus feet of Bhagawan in a few years too.



Categories: Devotee Experiences

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading