Jaya Jaya Sankara Hara Hara Sankara – A gem of a poem on MahaPeriava taken from the Deepavali edition of Kalaimakal magazine 1968. This poem was penned by one ‘Jyothi’ which is a chosen name.
Many Jaya Jaya Sankara to Shri B. Narayanan Mama for the sharing this article along with one of his great Periyava drawings. Ram Ram
இதோ தெய்வம். – ‘ஜோதி’
சாந்த உருவங்கொள் மூர்த்தியினான்—–யாரும்
சார்ந்து பணிந்திடும் கீர்த்தியினான்
காந்த மெனப்பலர் உள்ளங்களைத்தன்
கருணை மொழியினாற் கொள்ளைகொள்வான்.
அன்னையைப் போன்ற பெருங்கருணை—பெற்ற
அப்பனைப் போன்ற மனக்கவலை
மன்னனைப் போன்ற தவச்செங்கோல் இந்த
மாநிலம் போற்றப் பொருந்தியவன்.
கண்ணின் ஒளியைப் புகழுவதோ—அன்றிக்
கலையின் அறிவை வியப்பதுவோ
தண்ணென்ற சொல்லில் இரும்புங் குழைந்திடத்
தயைபுரி பாங்கினைப் போற்றுவதோ?
யாவர்வந் தாலும் அவர்க்கிதமாய்ப்—பேசி
இன்பம் பெறச்செய்யும் அண்ணலவன்
தேவர்கள் போற்றிய தெய்வம் இதோவந்து
தெரிசனம் காட்டுமென்றெண்ணுகின்றோம்!
தவத்தின் உருவிது தயையின் கடல்—இந்தத்
தாரிணி உயர்வதற் காகவந்து
சிவமெனும் அப்பொருள் சீரடி நோவத்
திசைதிசை தோறும் நடக்கின்றதே!
கண்ணிலே கண்டவர் பாக்கியத்தார்—
மொழி காதிலே கேட்டவர் பேறுபெற்றார்
தண்ணிய காஞ்சியில் காமகோடிப்பீட
நாயகன் பேரருள் வாழியரோ !
Categories: Krithis
Very nice poem coming out of poet’s heart. Jaya Jaya Sankara Hara Hara Shankar lax man.
The poet who penned the above poem Jothi is none other than the Editor of Kalaimagal late Sri Ki. Va. Jagannathan. Native of Mohanur, located between Namakkal & Trichy.
Thank you Sir, for this information.
Really very artistically crafted, with nice words..some I did not understand, the meaning, but it shows the essense of your talent…to myself…