Thanks to Sri Vadidyanathan for this Thirupugazh-style song on Periyava. He shared it yesterday but I couldn’t post this on time….
இந்த கிருத்திகை நாட்கள் தோறும், கையில் வேலில்லாமல், தண்டத்துடன் வந்து நம்மிடம் நடமாடிய ஸ்வாமிநாதனேயாகிய பெரியவாளின் மேல், திருப்புகழ் பாடலின் சந்தத்தில், ஒரு பாடலைப் பாடுவது என்று ஆவல்.
இன்றைய கிரித்திகையிலும் அந்த ஆவலை நிறைவேற்றிக் கொடுத்த பெரியவாளின் பதகமலங்களுக்கு இந்தப் பாடலை காணிக்கையாக்குகிறேன்.
************************************************************
“முத்தைத் திரு பத்தித் திருநகை” என்ற திருப்புகழ் சந்தத்திலே இந்த்ப் பாடலை அமைந்திருக்கிறது….
******************************************************************************
பத்தர்க்கென நச்சை அமுதென
இச்சையொடு முற்றும் பருகிய
உள்ளம்கவர் கள்வன் அவனது – வடிவான
அத்தன்பெரு வித்தன் மனதினில்
நித்தம்உறை சித்தன் கரமது
நித்தம்தரு பக்திக் கனியது – வரமாக
புத்தன்மத மித்யைச் சிதறிட
புத்தம்புது வித்தைக் கொடுதரு
சுத்தன்உரு சித்தன் அருளொடு – இனிதேகி
இக்கட்டுக ளைப்பற் பொடிதரு
திக்கட்ரவர் கட்குத் துணைவரு
ரக்ஷித்தருள் நின்பொற் பதமது – தருவாயே!
Categories: Bookshelf
Sri.Vaidyanathan sir’s poem is really a wonderful composition.the sandam is really nice.
Periava’ blessings alone can bring out such beautiful compositions.pranams to such great devotees.