Periyava Golden Quotes-370

album1_43

 

வாழ்நாள் பூராவும் எதிலே ரொம்பவும் ஈடுபாடு இருக்கிறதோ, அதுதான் அந்திமத்திலும் ஒருத்தனை இழுக்கும். வாழ்நாள் முழுவதும் பகவத் சிந்தனையோடு இருந்தால்தான் கடைசியிலும் அது ஸித்திக்கும். ஸரி, அது தானாகவே ஸித்தித்துவிட்டுப் போகிறது. ஒருவன் ஜீவியகாலம் முழுவதும் ஈஸ்வர பக்தி பண்ணிக்கொண்டேயிருந்தால், கடைசியில் இவன் படுக்கையில் விழும்போதும் தானே, ‘ஆடோமாடிக்’-ஆக அதே ஸ்மரணந்தான் இருக்கப் போகிறது. ஆனதால் ”ஸர்வகாலத்திலும் என்னை நினை” என்று சொன்ன க்ருஷ்ண பரமாத்மா “அந்திமத்திலும் என்னை நினை” என்று ஒன்றைச் சேர்த்திருக்க வேண்டாமே? ஸர்வகால ஸ்மரணை தானாக அந்திமத்திலும் வந்துவிட்டுப் போகிறது! இங்கேதான் மோக்ஷத்துக்குக் கொஞ்சம் குறுக்கு வழி (short-cut) சொன்ன மாதிரி இருக்கிறது. ‘ஒருத்தன் அந்திமத்தில் எதை எதை நினைத்துக்கொண்டு உடம்பை விட்டாலும் அதையே போய் அடைகிறான்’ என்று கீதையில் ஸ்பஷ்டமாகச் சொல்கிறார்.

யம் யம் வாபி ஸ்மரன் பாவம் த்யஜத்யந்தே களேவரம் |
தம் தம் ஏவைதி கௌந்தேய ஸதா தத்பாவ பாவித: ||

இப்படிச் சொல்கிறபோது, வாழ்நாள் முழுக்க நினைக்காத ஒன்றை ஒருத்தன் அந்திமத்தில் நினைத்துவிட்டாலும் ஸரி, அந்திமத்தில் நினைத்த அதையே மரணத்துக்குப்பின் அடைந்து விடுவான் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ள இடம் இருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

In his final moments, a human being will be attracted by those thoughts which had occupied his attention during his life time. Hence if a person is preoccupied with the thought of the Divine during his lifespan, then that thought will automatically occur to him when he breathes his last. So one wonders whether there was any need for Lord Krishna to stress that a person has to think of Him in the final moments of his life. Then, may be Lord Krishna is indeed offering a ‘Short cut’ to Salvation. He succinctly states in Gita that a person attains that object/state of which he is thinking as life force ebbs out of him. This makes us think that it is enough if a person dwells on the Divine at the fag end of his life, even if he has not done so during his life time. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. பெரியவா நின் பொற் பாத கமலங்கள் எப்போதும் என் நினைவில் நிற்க
    அருளவா…

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
    காஞ்சி சங்கர காமகோடி சங்கர
    காலடி சங்கர கலவை சங்கர
    அத்வைத சங்கர அவதார சங்கர
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

Leave a Reply

%d bloggers like this: