‘ஆத்மா என்ற மாறாத ஸத்யத்தின் நிலையிலிருந்து பார்க்கிறபோது சரீரமும் சாவும் துச்சம்தான்; அவை ஒன்றுமே இல்லை. ஆனால் நாம் மாறாத ஆத்மா என்பதைத் தெரிந்து கொள்ளாதவர்களாகத்தானே இருக்கிறோம்? நமக்குத் தெரிந்தது மாறிக் கொண்டே இருக்கிற இந்த மனஸும், மாறிக்கொண்டே இருக்கிற இந்த ப்ரபஞ்சமும்தானே? சாவு உண்டாகி அடுத்த ஜன்மா ஏற்படுகிறபோது இந்த ஜன்மாவிலே இந்த ப்ரபஞ்சத்திலே நமக்கு இருந்த தொடர்புகளெல்லாம் துண்டித்துப்போய், வேறு புதுத் தொடர்புகள் உண்டாகின்றன. இதே இடத்தில் இதே குடும்பத்தில் நாம் மறுபடியும் பிறந்தால்கூட நமக்கு அது தெரியப் போவதில்லை. ஆனால் இப்படி இங்கேயேதான் பிறப்போம் என்று சொல்ல முடியாது. வேறே சூழ்நிலையில், வேறு தினுஸான மதத்தில், நாகரிகத்தில், ஸம்ப்ரதாயத்தில் போய்ப் பிறந்தாலும் பிறப்போம். எந்த மாதிரிச் சூழ்நிலையில் பிறப்போமோ?’ என்று பெரிய கேள்வியாகத்தானே இருக்கிறது? ‘இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ? என்று பெரிய பெரிய மஹான்களே பயப்பட்டிருக்கிறார்களே!
இதனால் பகவான் ஒரு ஜீவனுடைய தொடர்புகள் அடியோடு மாற இருக்கிற அந்த மரண ஸமயத்தில் “ஐயோ, பாவம்! இந்த ஜீவன் மறுபடியும் ஜன்மா இல்லாமல் பண்ணிக் கொள்ளாமலேயே உயிரை விடுகிறது. இப்பொழுது முழுக்க வேறு தினுஸான சூழ்நிலையில் பிறந்து, ‘அடியைப் பிடிடா பாரதபட்டா’ என்று ஆத்மாபிவிருத்திக்கான கார்யத்தை இது ஆரம்பித்தாக வேண்டும். இந்த ஜன்மாவின் கர்மாதான் அடுத்த ஜன்மாவிலும் துரத்திக் கொண்டு வரும் என்பது வாஸ்தவமானாலும், அடுத்த ஜன்மாவில் சூழ்நிலை வேறுதானே? அதிலே இது பழைய கர்மாவைக் கழித்துக்கொண்டு மேலே போகுமா அல்லது இன்னும் கெட்ட கர்மாவைப் பண்ணி வீணாகுமோ?’ என்று பரம கருணையோடு நினைப்பான் போலிருக்கிறது. இப்படி பகவானே இரக்கப்பட்டுத்தான் ரொம்பவும் பெரிய மனஸோடு, ”ஸரி, இந்தச் சாகிற ஸமயத்தில் இது நம்மை நினைத்துவிடட்டும். அது போதும். இதற்கு மறுபடியும் ஜன்மா இல்லாமல் நாமே எடுத்துக் கொண்டு விடலாம்” என்று பெரிய ‘கன்ஸெஷன்’ தந்திருக்கிறான் என்று தோன்றுகிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
From the Perspective of the Ultimate truth of the Soul, the body and this life are valueless things. But we are not aware of the unchanging soul. We are only aware of the ever changing mind and the ever shifting universe. After death when we are born again, all the associations of this birth come to an end and new associations are established in this universe. Even if we are born in the same place and in the same family, we are not going to be aware of the fact. But such an occurrence may not happen. We may be born in a different environment, in a different culture, and even in a different religion. The details of our next birth are shrouded in mystery. Even great souls & saints have expressed their fears about the kind of birth they might have to take after they leave this old body. So Bhagawan apparently takes compassion on the soul in its death throes. The soul has not made sure that there will not be a further continuation of this birth-death cycle. It may be born in a completely different environment and may have to commence the process of spiritual elevation from the basics. Though it is true that the fruits of this birth or karma will follow one in the next birth, it is a matter of debate whether the soul will be able to get rid of the old karma or become entangled in fresh karma. So Bhagawan in His perennial compassion offers an opportunity to the dying person. “Let the dying person think of me. And I will gather him unto me”. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Devotee Experiences
Leave a Reply