1. Deepavali Special-Ganga Snanamum Kaveri Snanamum-Preface (Gems from Deivathin Kural)

Mahaperiyava_Deepawali

Jaya Jaya Sankara – Wish you all a great Deepavali!! Starting today we will see some important chapters from Deivathin Kural about Deepavali. Here Sri Periyava explains many subtle details about Deepavali many of us will not be aware of. One such thing is, “Do we have to do “Three Snanams” and just Ganga Snanam? Well, Periyava the Sarwareswaran explains the entire Deepavali Mahathmiyam with great clarity and lucidity!. One of these chapters also have the answer to the quiz posted yesterday 🙂

These are pretty small chapters, very enjoyable to read and learn from. Shri Ra Ganapathi Anna has so beautifully captured the colloquial language used by Periyava which makes this even more interesting. Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer for the translation. Ram Ram

கங்கா ஸ்நானமும் காவேரி ஸ்நானமும்

முன்னுரை

ஸ்ரீ மஹா பெரியவர்கள் ஸ்ரீகாளஹஸ்தியில் 1966ம் ஆண்டு எழுந்தருளியிருந்த போது, தீபாவளிக்கு அண்மையில் அவர்களைத் தரிசிக்கச் சென்ற அடியார்களில் ஒருவர், “தீபாவளிக்கும் கங்கா ஸ்நானத்துக்கும் என்ன தொடர்பு?” என்று விளக்கி வைக்குமாறு பெரியவர்களை வேண்டிக் கொண்டார்.

பெரியவர்கள் புன்னகை பூத்து, “ஏன், தீபாவளிக்கும் கங்கைக்கும் சம்பந்தம் இருக்க முடியாதென்று நினைக்கிறாயா? தீபாவளி க்ருஷ்ண பரமாத்மா நரகாஸுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பண்டிகை. கங்கையோ பரமேச்வர ஸம்பந்தமுள்ளது. யமுனைதான் கிருஷ்ணனுடைய நதி. ‘யமுனா தீர விஹாரி’ என்றே அவரைச் சொல்கிறோம். அதனால் தீபாவளியில் கங்கா ஸ்நானம் என்று ஏன் விசேஷம் கொடுத்திருக்கிறது என்று உனக்குத் தோன்றுகிறதாக்கும்?” என்று கேட்டார்.

அந்த அடியார் அப்படித்தான் எண்ணியிருப்பார் போலும். பேசாமல் இருந்தார்.

“அது இருக்கட்டும்; தீபாவளிக்கு நாம் எல்லோரும் கங்கா ஸ்நானம் பண்ணுகிறோமென்றால் அதற்குக் காரண புருஷரான கிருஷ்ணர் அன்றைக்குக் காவேரி ஸ்நானம் பண்ணினார் என்று நீ கேள்விப் பட்டிருக்கிறாயோ?” என்று ஓர் அபூர்வ விஷயத்தை வினாவாக விடுத்தார் ஸ்ரீ ஜகத்குரு.

“இல்லை. பெரியவாள்தான் சொல்லி அநுக்ரஹம் செய்ய வேணும்” என்று அவர் விண்ணப்பித்துக் கொண்டார்.

கூடியிருந்தவர்களில் வேறு எவருக்காவது அந்தக் கதை தெரியுமா என்று பெரியவர்கள் அலுக்காமல் ஒவ்வொருவராக்க் கேட்டார். எவருக்கும் தெரியவில்லை.

பண்டிதராகத் தோன்றிய ஒருவர், “ஸ்ரீமத் பாகவதத்தில் நரகாஸுர வதத்தைச் சொல்லியிருக்கும் இடத்தில், அதற்கு தீபாவளி, கங்கை, காவேரி ஆகிய எந்த ஸம்பந்தமுமே சொல்லியிருக்கவில்லை” என்றார். அவர் சொன்ன மாதிரியிலிருந்து, அதனால் இவ்விஷயங்களை ஏற்பதற்கில்லை என்பது போலிருந்தது.

“பாகவதத்திலே இல்லாவிட்டாலும் புராணந்தரங்களில் (வேறு புராணங்களில்) இந்த ஸமாசாரங்கள் இருக்கின்றன. ராமாயண, பாரத, பாகவதாதிகளில் வால்மீகியும், வியாஸரும், சுகப்ரம்மமும் சொல்லாமல் விட்ட அநேக விஷயங்கள் வேறு புராணங்களிலும், உப புராணங்களிலும், ஸ்தல புராணங்களிலும் வருகின்றன. கதைப் போக்கு, கதா பாத்திரங்களுடைய குண விசேஷம், லோகத்துக்கு இதனால் கிடைக்கிற உபதேசம் என்று எப்படிப் பார்த்தாலும் இவை பெரும்பாலும் மூல ராமாயண, பாரத, பாகவதாதிகளுக்கு complimentaryயாகவே (இட்டு நிரப்பி முழுமை தருவனவாகவே) இருக்கின்றன. ஆகையால், மூலக்ரந்தத்துக்கு contradictoryயாக (முரணாக) இல்லாதவரை இப்படிப்பட்ட additional (கூடுதலான) ஸமாசாரங்களையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்” என்று கூறிய பெரியவர்கள், “நரகாஸுரனை பகவான் ஸம்ஹாரம் பண்ணினவுடன் பூமாதேவி வந்து அவரிடம் பிரார்த்தித்துக் கொண்டதாக பாகவதத்தில் வருகிறதோ இல்லையோ?” என்று தெரியாதவர் போலப் பெரியவாள் பண்டிதரைக் கேட்டார்.

“வருகிறது, நரகன் அபஹரித்திருந்த இந்திரனுடைய குடையையும், (இந்திரனின் தாயாரான) அதிதியின் குண்டலங்களையும் பூமாதேவிதான் கொண்டு வந்து பகவானிடம் அர்ப்பணித்தாள் என்று வருகிறது. அப்போது அவள் செய்த ஒரு ஸ்தோத்திரமும் இருக்கிறது. ஆனால் இது பொதுப்படையான ஸ்துதியாக இருக்கிறதே தவிர, நரகனின் ஞாபகார்த்தமாகத் தீபாவளி கொண்டாடப்பட வேண்டும் என்று அவள் வரம் கேட்டதாக இல்லை”  என்று கூறிய பண்டிதர் “நரகாஸுரனுடைய பிள்ளை பகதத்தனை பகவான் தான் ரக்ஷிக்க வேண்டும் என்று பூமாதேவி ஒப்புக் கொடுத்ததாகவும் இருக்கிறது” என்றார்.

“வாலியை ராமர் ஸம்ஹாரம் பண்ணினவுடன் அவன், பிள்ளை அங்கதனை அவருடைய guardianshipலேயே விட்ட மாதிரி” என மொழிந்த ஜகத்குரு, “அது ஸரி; நரகாஸுரனே இப்படி, தான் வதமான தினத்தை லோகமெல்லாம் பண்டிகையாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் இன்னொரு version (கதாபேதம்) கேள்விப்பட்டிருக்கிறாயோல்லியோ?” என்று கேட்டார்.

“கேட்டிருக்கிறேன்” என்றார் அவர்.

“எனக்கென்னவோ அவனுடைய அம்மாவான பூமாதேவி இப்படி வரம் கேட்டாள் என்பதுதான் ரொம்ப விஸேஷமாக மனஸில் படுகிறது. பகவான் ஹஸ்தத்தால் மரணமடைந்து அவருக்குள்ளேயே ஐக்கியமாகிற ஸ்டேஜில் இருக்கும் ஒருத்தனுக்கு நல்லறிவு உண்டாகி இம்மாதிரி வேண்டிக் கொள்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு பெற்ற தாய் புத்ர சோகத்தில் வயிறெரியாமல், பரம துக்கமான ஸமயத்தில், நம் பிள்ளை போனாலும், அவன் போனதற்காகவே, லோகத்தில் ஸமஸ்த ஜனங்களும் ஸந்தோஷமாக விழா கொண்டாட வேண்டும் என்று வேண்டிக் கொண்டாளென்றால் அதுதான் நெஞ்சைத் தொடுகிற மாதிரி இருக்கிறது. பொறுமைக்கு பூமாதேவி என்பது இங்கேதான் நிரூபணமாகிறது. அந்தத் தாயாருடைய தியாக சக்தியினால்தான் தேசம் பூராவிலும் வேறெந்தப் பண்டிகைக்குமில்லாத பிராதான்யம் (முதன்மை) தீபாவளிக்கே ஏற்பட்டிருக்கிறது என்று எனக்கு அபிப்ராயம்” என்றார்.

கண்ணன் காவேரி ஸ்நானம் செய்த கதையைத் தெரிந்து கொள்வதில் தங்கள் ஆர்வத்தைச் சில பக்தர்கள் தெரிவித்துக் கொண்டனர்.

“அவன் (முதலில் விண்ணப்பித்த அடியார்) ‘கங்கா ஸ்நான ஸம்பந்தத்தைச் சொல்லு’ என்று கேட்டான். நான் காவேரி ஸ்நானத்தைப் பற்றிச் சொல்கிறேனென்றால், “ஸ்வாமிகளுக்கு நாம் கேட்ட விஷ்யம் தெரியாது” என்று நினைக்க மாட்டானா? அதனால், கங்கா ஸ்நானம், காவேரி ஸ்நானம் எல்லாவற்றையும் பற்றிச் சொல்கிறேன்” என்று குறும்பாகக் கூறிய குருநாதர், மேலும் குறும்பாக “இவர் (பண்டிதர்) பாகவதத்திலே வந்தால்தான் ஒப்புக் கொள்வேன்” என்று சொன்னாலும் நான் அதோடு வேறு கதைகளையும் போட்டுப் பிசைந்து அவியலாகத்தான் சொல்லப் போகிறேன். காவேரி மகாத்மியத்தைப் பற்றி ஸ்காந்தம், ஆக்நேய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம் முதலானதுகளில் இருக்கிறது. அதிலொன்றில்** துலா காவேரி மஹிமையைச் சொல்கிற இடத்தில் தான் தீபாவளிக் கதை வருகிறது. சுகருக்கு பாகவதத்தை உபதேசித்த அதே வியாஸாசாரியாள்தான் இந்த எல்லாப் புராணங்களையும் கொடுத்திருக்கிறார்” என அர்த்த புஷ்டியுடன் மொழிந்து, நிமிர்ந்து அமர்ந்து, கதை கூற ஆயத்தமானார்.

** பிரம்ம வைவர்த்த புராணத்தில்

ஓர் அம்மாள் “நரகாஸுர வதக்கதையைக்கூடப் பெரியவாள் வாயாலே கேட்கணும்” என்று விஞ்ஞாபித்துக் கொண்டாள்.

“எல்லாக் கதையும்தான்! ஏதோ இப்போது எனக்கு நினைவு வருகிற வரைக்கும் சொல்கிறேன்” என்று ஸர்வக்ஞர் கடல் மடையாகத் தொடங்கினார். பண்டிதரும் ஓரிரு இடங்களில் எடுத்துக் கொடுக்க, அது மேலும் பொங்கிப் பெருகச் செய்தார்.

கங்கையும் காவேரியுமாக இருந்த அந்தப் பிரவாஹத்தை இங்கே வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

_____________________________________________________________________________________________

Bath in Ganga and Bath in Kaveri

Preface

When Sri Maha Periyava was camping at Sri Kaalahasthi in 1966, one of the devotees who came to see him (“Dharshan”)  close to Deepaavali time, requested Sri Maha Periyava to explain, “What is the link between Deepaavali function and taking bath in Ganga river?”

Sri MahaPeriyava smiled and said, “Why, Do you think that there can be no link between Deepaavali and Ganga? Deepaavali is being celebrated due to the victory of Sri Krishna Paramaathma over Narakaasura.  However, Ganga is associated with Lord Parameshwara. Yamuna is the river linked with Lord Sri Krishna. We sing “Yamuna Dheera Vihaari” only for him. Hence you might be thinking what is special about taking bath in Ganga during Deepaavali?”

The devotee might have exactly wondered the same. He was silent.

“Let it be that way; Assuming we all take bath in Ganga river during Deepaavali, have you heard that the main person behind the celebration of Deepaavali, Lord Sri Krishna took bath in Kaaveri river on that day?” Sri Maha Periyavaa raised a question stating this astonishing event.

“No. Only Periyava needs to provide more information on this incident” requested the devotee.

Sri Maha Periyava tirelessly asked every one of the devotees present in the crowd if they knew about this happening. However, the response was negative.

A person who appeared like a knowledgeable Pandit said, “In Srimad Bhaagavatham, at the place where it narrates about the destruction of Narakaasura by Lord Sri Krishna, there is no mention about taking bath in Ganga or Kaaveri river”. From his firm tone, it looked as if taking bath in Ganga or Kaaveri during Deepaavali was a hoax.

“Even if this is not in Srimad Bhaagavatham, it is there in other ancient literature (sacred literature called “Puraanaas”). A lot of information that Sri Vaalmiki, Sri Vyaasar and Sri Suka Brahmam did not state in Ramayana, Maha Bhaaratham and Srimad Bhaagavatham are present in other ancient sacred literatures, sub-literatures and literatures based on sacred places (Sthala Puranaas). The story line, the good virtues and qualities of the characters, the moral obtained for the world from the story are all aligned and complementary to the main literature’s of Ramayana, Maha Bhaaratham and Srimad Bhaagavatham. Hence, as long as they are not contradictory to these major literature’s, we need to accept the information from these other small literature’s” stated Maha Periyava. “Once Narakaasuraa is destroyed by Lord Sri Krishna, does Bhaagavatham mention about Goddess Bhoomaa Devi praying to Lord Sri Krishna or not?” asked Sri Maha Periyava to the Pandit as if he himself did not know.

“Yes. It states that Goddess Bhooma Devi is the one who surrenders the umbrella of Lord Indra and the earrings of Maatha Adhithi (Mother of Lord Indra), which were earlier forcefully obtained and possessed by Narakaasura, to the Great Lord Sri Krishna. There is also a sacred chant sung by her (“Stothram”) at that time as per Bhaagavatham. However, it was a generalized one and does not mention anything about requesting the Lord to grant celebration of Narakaasuraa’s death as Deepaavali”, said the Pandit. He also said, “Bhaagavatham does mention that Goddess Bhooma Devi requests Lord Sri Krishna to take care of Narakaasura’s son, Bhagadhaththan”.

Stating, “This is the same situation as how Vaali’s son, Angadhaa was left under the guardianship of Sri Rama after Vaali’s death”, “Jagadguru” Sri Maha Periyava continued, “That is fine; Have you heard of another version of this incident wherein Narakaasura himself requested to Lord Krishna that the day of his death should be celebrated as Deepaavali?”

“Yes, I have heard”, said the Pandit.

“According to me, the version where Goddess Bhoomaa Devi prayed for his son seems to be more significant. It may not be surprising for a person, who dies in the hands of Bhagawan, asking for such a boon at the stage when he merges into the Great Lord. However, instead of being extremely distressed by the death of her beloved son and being very angry, the mother requesting Lord to have everyone celebrate the day of her son’s death is more touching. It is evident from here that Goddess Bhoomaa Devi is the personification of patience. According to me, only because of the sacrificial power of this mother, Deepaavali has such an importance that is not seen for any other functions celebrated throughout India”, stated Sri Maha Periyava.

Some devotees expressed their curiosity in learning about the story where Lord Sri Krishna took bath in Kaaveri river.

“He (the devotee who placed the first request) asked about the link with taking bath in Ganga river. If I start about Lord Krishna taking bath in Kaaveri river, won’t he think that Swaamigal does not know anything about what he asked? Hence I will tell about taking bath in both Ganga and Kaaveri river” said the “Jagad Guru” mischievously. He also continued mischievously, “Even if the Pandit states that he will accept only if it is present in Bhaagavadham, I will mix it with other literature’s and present it like an “Aviyal”. The importance of Kaaveri river is being told by “Skaandham”, “Aagneya Puraanam”, Brahma Vaivartha Puraanam” etc. In one of them (“Brahma Vaivartha Puraanam”), the place where the importance of “Thula Kaaveri” is mentioned also speaks about the Deepaavali story. The same Sri Vyaasar, who gave Bhaagavatham to Sri Sukar, also gave all these sacred literatures to us”, Sri Maha Periyava confidently spoke these meaningful words and sat erect to start the divine storytelling.

One lady also expressed her desire to hear the story of destruction of Narakaasura in Sri Maha Periyava’s divine voice.

“All the related stories will be told, as much as I remember”, started the “All-Knowing” Sri Maha Periyava similar to the flood flowing out of an opened dam. With the Pandit also providing references in a few places, he made the flood spread magnanimously.

We present the unstoppable flow that was in the form of Ganga and Kaaveri to the readers now.



Categories: Deivathin Kural

Tags:

4 replies

  1. Thank you respected team, I feel extremely happy when I see the translation, This one is very thrilling and we await for the following posts.

  2. Starting from Talacauvery and upto Poompuhar, in which holy abode, srikrishna might have taken his holy bath on Deepavali. Inquistiveness builds up. what periyava said on this!!!

  3. you have not completed about what periyava told about kaveri and ganga snanam

Leave a Reply

%d