Periyava Golden Quotes-365

album1_55

 

நம் மனஸ் லகான் இல்லாத குதிரையாக ஓடுகிற ஓட்டம் நமக்குத் தெரியும். ஏதோ இந்த க்ஷணம் அது அப்படியே பரமாத்மாவிலேயே தோய்ந்து விட்டாற்போல இருக்கும். பார்த்தால் அடுத்த க்ஷணமே அது பிய்த்துக் கொண்டு ஏதாவது குப்பைத் தொட்டிக்குப் போயிருக்கும். நமக்கே ஆச்சர்யமாக, தாங்கமுடியாத வ்யஸனமாக இருக்கும் – ‘அவ்வளவு நல்ல சாந்த நிலையில் இருந்தோமே; இது எப்படி அங்கேயிருந்து அறுத்துக் கொண்டு கிளம்பிற்று? என்று. இங்கிலீஷில் fraction of a second என்கிறார்களே, அதுமாதிரி, ஒரு ஸெகண்டில் வீசம் பாகங்கூட இந்த மனஸ் ஒன்றில் நிலைத்து நிற்க மாட்டேன் என்கிறது. எனவே, ‘மாம் ஏவ ஸ்மரன்’ – பகவானை மாத்திரமே நினைப்பது – என்பது ரொம்பக் கஷ்டம்தான். வாழ்நாள் பூராவும் ஏதாவது ஒன்றில் நம் மனஸ் அழுத்தமாக ஆழமாக ஈடுபட்டிருந்தால்தான் அந்த விஷயமே ப்ராணன் போகிற ஸமயத்திலும் கிளம்பி வந்து நம் மனஸ் முழுவதையும் ரொப்பி வியாபித்துக் கொள்ளும். நாம் அதை நினைக்கிறோம் என்பதில்லை. அதுவே முட்டிக்கொண்டு வந்து தன்னை நினைக்கும்படியாகப் பண்ணும்.

இப்போது ஸைகாலஜியில் சொல்கிறார்கள், நமக்கே தெரியாமல் நாம் எப்பொழுதோ ஆழமாக, அழுத்தமாக நினைத்த விஷயங்கள்தான் தாமாக மனஸின் மேல்மட்டத்துக்கு எழும்பி வருகிறது என்கிறார்கள். குறிப்பாக வெளி வியாபாரமில்லாமல் தூங்குகிறபோது இம்மாதிரி பழைய ஸ்டாக் கிளம்பி வந்து ஸ்வப்னமாகிறது என்கிறார்கள். தூக்கந்தான் என்றில்லை. கார்யமில்லாமல் இருக்கிற போதுகளிலெல்லாம், ஒரு த்யானம் என்று உட்கார்ந்தால்கூட, ஜலத்துக்கடியே கையினால் அழுத்தி வைக்கிற கார்க், கையை எடுத்தவுடன் மேலே கிர்ரென்று வருகிறமாதிரி, உள் நினைப்புகள் மேலே வந்து நம்மைப் பிடித்துக் கொள்கின்றன. சாஸ்த்ரங்களிலும் பூர்வ வாஸனை என்று இதுகளைச் சொல்லி, இவற்றை அடியோடு இல்லாமல் வாஸனாக்ஷயம் பண்ணிக் கொண்டால்தான் மனஸ் பரமதெளிவாகத் தெளிந்து நின்று அதில் ஆத்ம ஜ்யோதிஸ் பளீரென்று அடிக்கும் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் நாம் “போ, போ” என்று பிடித்துத் தள்ளினாலும் அது போகுமா? போகாது. அதைப் போகப் பண்ணுவதற்கு வழி நம்மால் எவ்வளவு முடியுமோ அத்தனை பாடும் பட்டு ஸ்த்விஷயங்களை, ஸத்துக்களிலெல்லாம் பரம ஸத்தான – ‘ஏகம் ஸத்’தான – பரமாத்மாவை நினைத்துக் கொண்டேயிருப்பதுதான். இந்த நல்ல வாஸனையை ‘வா, வா’ என்று சொல்லிக் கொண்டேயிருந்து வரவழைத்து மனஸுக்குள் உட்கார்த்தி வைத்துக் கொண்டால்தான், கெட்ட வாஸனைகள் தங்களுக்கு இடமில்லை என்று ஓடிப் போகும். அமேத்யத்தை எவ்வளவு தேய்த்து அலம்பி விட்டாலும் நாற்றம் போக மாட்டேன் என்கிறது. ஒரு ஊதுவர்த்தியை ஏற்றி வைத்து விட்டால் அது இருந்த இடம் தெரியாமல் போகிறது. கடைசியில் நல்ல வாஸனைகளும் போக வேண்டும். மனஸே போக வேண்டும். அதெல்லாம் ரொம்பப் பின்னாடி வருகிற நிலை. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்


Our heart is like an unbridled horse. If at one moment it is immersed in the Ultimate divine, at the next it will be rolling in sheer rubbish. Even we will be surprised and worried about this kind of erratic behavior – only a fraction of a second is needed for the mind to fall from a peaceful state. The mind is never steady. It is indeed very difficult to fix it on Bhagawan alone. If we are immersed in a particular thought during our entire life, that thought will come and enthrone itself in our hearts at our final moments in this world. It will rush into our heart on its own; we need not make any effort. Even psychologists say that subconscious thoughts, suppressed in our minds, come rushing to the fore, especially in our dreams, when we are disconnected from the exterior world. This applies to even meditative states. When we strive to meditate calmly, the hidden thoughts come flooding into our mind like a cork which cannot be held submerged under the water. Even our Sastras state that only if such “Vasanaas” (footprints of the past) are eradicated completely the luminous Aathma will glow in the clarity of our hearts. But it is not so easy. However much we try to drive unwanted thoughts away they come bouncing back with renewed force. The only solution is to think of good, positive thoughts which can elbow these unwanted thoughts away. Who is more Positive and Good than the Ultimate divine or Paramaathmaa? So our mind should dwell on Him constantly to ensure purity and clarity of mind at the time we leave our earthly lives behind. If the foul smell of dirt and rubbish refuses to go away, do we not light incense sticks? Of course, eventually all the “good” thoughts should also disappear. This comes at a later stage. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Devotee Experiences

Tags:

8 replies

  1. very good srinivasan, please correct “our heart” in English version as “our mind”.may be I am wrong, not sure.

  2. Namaskarams Shri Sai Srnivasan. Thanks for the information. MahaPerivaa Padarakamalam Saranam.

  3. Siddhanthas

  4. The Holi Book of our 21st Century is the MahaPerivaa-Ganapthy DEIVATHIN KURAL, covered all the life Siddhartha’s, would be Holi Divine speak of Our MahaParameswara MahaPerivaa. My curious query, is this been translated to English?

    • It has been translated in English. The book name is called ‘Voice of God’, which is strictly a copyrighted content. As you may be aware, we are having our sathsang volunteers to translate one chapter at a time and have been posting them every few days. Ram Ram

  5. My Heartful thanks for posting the above.
    Could u please give the name of the topic and volume no. in deivathin kural of the above quoted message of periyava

Leave a Reply

%d bloggers like this: