Thanks to Sri Varagooran mama for the share….
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-இவ்வார குமுதம் பக்தி..
1960-ம் வருஷம் வாக்குல மகாபெரியவா கொல்கத்தாவிற்கு விஜயம் பண்ணியிருந்தா.
அந்தக் கால கட்டத்துல கொல்கத்தா பொருளாதாரத்துல ரொம்ப பின்தங்கின ஊராத்தான் இருந்தது. அங்கே கிட்டத்தட்ட ஒரு வாரம் முகாமிட்டிருந்தா, மகாபெரியவா. தினமும் ஆயிரத்துக்கு மேலானவா பரமாசார்யாளை தரிசனம் பண்றதுக்கு வந்தா.
அவா எல்லாருக்கும் ஆசீர்வாதம் பண்ணி, பிரசாதம் குடுத்து அனுப்பின ஆசார்யாளுக்கு ஒரு விஷயம்
நன்னா புரிஞ்சிருக்கு. அது நம்பளோட வேதத்தையும், புராணத்தையும் எடுத்துச் சொல்லித்தர அங்கே வேதபாடசாலை எதுவும் இல்லைங்கிற விஷயம்தான். அதனால் கொல்கத்தாவுல வேதபாடசாலை ஒண்ணு அமைக்கணும்ணு நினைச்சார் மகாபெரியவா.
ஆனா, பொருளாதார வசதியில் ரொம்பவே பின்தங்கி இருந்த அந்த ஊர்லே அது அவ்வளவு ஒண்ணும்
சுலபமான விஷயம் கிடையாது. அதனால தினம்,தினம் வந்த பக்தர்கள்ல அதுக்குத் தோதானவா யாராவது
இருப்பாளான்னு பரமாசார்யா பார்த்துண்டே இருந்தார். இதெல்லாம் ஆசார்யா தன்னோட எண்ணத்தை ஒருத்தர் கிட்டே சொன்னதுக்கு அப்புறமாதான் அவரோட கைங்கர்யத் தொண்டர்களுக்கேகூட தெரியும்.
அதுவரைக்கும் பரமாசார்ய ரகசியமாதான் இருந்தது.
கிட்டத்தட்ட முகாம் முடிஞ்சு காஞ்சிபுரத்துக்குப் புறப்படறதுக்கு ரெண்டு மூணுநாள் முன்னால வந்த ஒரு
பக்தரைப் பார்த்ததும், அவர் அதுக்கு சரிப்பட்டு வருவார்னு தோணியிருக்கு. உடனே அவர்கிட்டே,
“இந்த ஊர்ல வேதபாடசாலை ஒண்ணு அமைக்கலாம்கறது என்னோட எண்ணம்.அதைப் பூர்த்தி பண்றது உன்னாலதான்மு டியும்னு தோணறது. நீ என்ன சொல்றே?” அப்படின்னு கேட்டார் ஆசார்யா.
பரமாசார்யா சொன்னா அதுக்கு அப்பீல் ஏதாவது உண்டா என்ன? மறுக்காம ஏத்துண்ட அவர், மளமளன்னு காரியத்துல இறங்கினார்.இப்போ மாதிரி அப்போல்லாம் வாகன வசதி கிடையாது.இருந்தாலும் பல இடங்களுக்கும் அலைஞ்சு திரிஞ்சு வேதபாடசாலை கட்டறதுக்கு தகுதியான ஒரு இடத்தையும் கண்டுபிடிச்சார் அந்த பக்தர்.
வேதபாடசாலை கட்டறதுக்கான இடத்தைத் தேர்வு பண்ணினதும் ஆசார்யாகிட்டே வந்து விவரத்தைச்
சொன்னார்.பரமாசார்யா எல்லா விவரத்தையும் நன்னா கேட்டுண்டு அங்கேயே கட்டிடலாம்னு சம்மதம் தெரிவிச்சா. உடனடியா அந்த இடத்துக்கு சொந்தக்காரனைப் பார்த்து
விஷயத்தைச் சொன்னார் பக்தர்.
ஆசார்யாளே கேட்கறார்னா அது எங்க பாக்யம்னு சொன்ன அந்த இடத்து சொந்தக்காரா, நல்ல நாளா பார்த்து எடத்தை கிரயம் பண்ணித் தர்றதா சொல்லிட்டா.அந்த பக்தர் திரும்பவும் ஆசார்யாகிட்டே வந்து விஷயத்தை சொன்னார்.
“எல்லாம் நல்லபடியா நடக்கும்!”னு சொல்லி ஆசீர்வாதம்ப ண்ணி அனுப்பினார் ஆசார்யா.அதுக்கு மறுநாள் ஆசார்யா அங்கேயிருந்து புறப்பட்டுட்டா.
ஒருவாரம் ஆச்சுஒரு நல்ல நாளா பார்த்து வேத பாடசாலைக்கான இடத்தை கிரயத்தைக் குடுத்து வாங்கி
மடத்துபேர்ல ரிஜிஸ்டர் பண்ணிண்டு வரலாம்னு புறப்பட்டார் பக்தர். அவருக்கு ஒரு அதிச்சி காத்துண்டு இருந்தது.
அது என்னன்னா, அதுநாள் வரைக்கும் இடத்தைத் தரேன்னு சொன்னவா, “இந்த இடத்தை நாங்க யாருக்கும் தர்றதா இல்லை அதுனால நீங்க வேற எங்கேயாவது இடம் பார்த்துக்குங்கோ!”
அப்படின்னு முகத்தில அடிச்சமாதிரி சொல்லியிருக்கா.
பக்தருக்கு பயங்கர அதிர்ச்சி.’என்னடா இது காரணமே இல்லாம இப்படிப் பேச்சு மாறிப் பேசறாளே! அதாவது பரவாயில்லைன்னா, எதுக்கு இத்தனை சிடுசிடுப்பு, கோபம் எல்லாம் காட்டறா? நாம என்ன சொந்த உபயோகத்துக்கா கேட்கறோம்? பரமாசார்யா சொன்னபடி வேதபாடசாலை கட்டற பொது நன்மைக்குத்தானே கேட்கிறோம் ! திடீர்னு என்ன ஆச்சு இவாளுக்கு? இப்படியெல்லாம் யோசித்தவர், எதுக்கும் கொஞ்சம் தயவாவே கேட்டுப் பார்ப்போம்னு நினைச்சுண்டு,ரொம்ப பணிவா திரும்பவும்
கேட்டிருக்கார். அதோட பரமாசார்யாளோட விருப்பம்கறதையும், ஏற்கனவே தரேன்னு அவா
வாக்குறுதி தந்ததையும் சொல்லியிருக்கார்.
பொறுமையா அவர் சொல்லியும் எதனாலயோ ரொம்பவே ஆத்திரப்பட்டிருக்கா, நிலத்துக்கு சொந்தக்காரர்.
“ஆசார்யா சொன்னார்னு நீங்க சொல்றேள். எங்களுக்கு இஷ்டமில்லைன்னு நாங்க சொல்றோம். பொதுக்-
காரியத்துக்குன்னாலும் அப்படியே தூக்கிக் குடுத்துட முடியுமா? சும்மா கேட்கலே. காசு தரேள்தான். அதுக்காக எங்களுக்கு விருப்பம் இல்லைனா விட்டுட வேண்டியதுதானே?ஏன் வீணா சிரமப்படுத்தறேள். எங்க
இடத்தை விற்கிறதா இல்லைன்னு சொன்னா,சொன்னதுதான் புறப்படுங்கோ!” பதிலுக்காகக் கூட காத்துண்டிருக்காம கதவை படார்னு அடிச்சு சாத்திட்டு உள்ளே போயிட்டா அவா.
….to be continued…..
Categories: Devotee Experiences
Sri Mahaperiyava was not in Calcutta in 1960. He was there in 1930s or early 40s while returning from his Kasi pilgrimage. Please , I am not finding fault.Just conveying information. We ought to be very careful when we refer to Sri Mahaperiyava.
Sir Pranams. The calcutta Veda Padasala Part I is to be continued. It would have been nice if the remaining part is published for curiosity.
It is preferrable to completely publish the content of the message/incident.
Hara Hara Sankara