If all go to Kumbabhisekam who will take care of Maintenance?

MahaPeriava_elephant_drawing_BN

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Another great incident from Shri Ramani Anna’s book Maha Periyava.

Many Jaya Jaya Sankara to Smt. Geetha Kannan, our sathsang seva volunteer for the share. Ram Ram

                                                                ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ! 
                                                            மஹா பெரியவர் – எஸ். ரமணி அண்ணா

தீர்க்க தரிசனம் – கும்பாபிஷேகத்துக்கு எல்லாம் போனா யார் இங்கே படி அளப்பா ?

பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. காஞ்சி மஹா ஸ்வாமிகள் அப்போது காரைக்குடி நகரில் முகாமிட்டு இருந்தார். அவர் தங்கி இருந்தது ஒரு நகரத்தார் சத்திரத்தில். அப்போது மடத்துக்கு லௌகீக (பொருளாதார) ரீதியாக சற்று சிரமம் இருந்து வந்தது.

மடத்தின் மானேஜருக்கு  ஒரு எண்ணம் உதித்தது. பணக்கார நகரத்தார் வசிக்கும் ஊர் காரைக்குடி.  நிறைய வீதிகள் உள்ளன. மஹாபெரியவாளை ஒரு பல்லக்கில் (பட்டணப் பிரவேசமாக) வீதிகள் வழியாக அழைத்துச் சென்றால் மடத்துக்கு அபரீதமாக பணம் வசூலாகும் என்று மேனேஜர் நினைத்தார். இதை மஹா ஸ்வாமிகள் இடமே தெரிவித்து அனுமதி வாங்கி விடலாம் என்று தீர்மானித்தார்.

ஒரு நாள் மதியம் பெரியவா பிக்ஷை எடுத்து விட்டு ஓய்வாக இருக்கும் நேரத்தில், தயங்கியபடியே அருகில் சென்று பேசாமல் நின்றார் மேனேஜர்.

வா..என்ன விஷயம் ? என்னவோ சொல்ல தயக்கம் காட்டராப்லே தெரியறதே…” ஸ்வாமிகள் கேட்டார்.

மேனேஜர் மென்று விழுங்கியபடியே, “நாளன்னிக்கு சாயங்காலம் இந்த ஊர்லே ஒரு பட்டணப் பிரவேசத்துக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன்!” என்றார்.

யாருக்கு? இது ஸ்வாமிகள்.

மேனேஜர் தயங்கியவாறே, “பெரியவாளுக்குத் தான்!” என்றார்.

“அதுக்கு என்ன அவசியம் இப்போ?”

மேனேஜர் வாயைப்  பொத்தியபடியே, “வேற ஒண்ணுமில்லை பெரியவா. ஒங்கள பல்லக்குல ஒக்காத்தி வீதி வீதியா பட்டணப் பிரவேசம் விட்டா நகரத்தார் கிட்டே இருந்து நிறைய பணம் வரும். இப்போ சிரமமா இருக்கிற மடத்துக்கு கொஞ்சம் உதவியா இருக்கும்…”என்று முடிப்பதற்குள், ” ஏண்டாப்பா மடத்துக்கு இப்படி எல்லாமா பணம் வரணும்னு பார்க்கிறே! ஆகாது அப்பா அப்படி எல்லாம் என்னாலே ஆகாது. நீ சொல்லற மாதிரி பல்லக்குலே ஒக்காந்து வர்ற உத்தேசம் இல்லவே இல்லை” என்று சற்று கடுமையாகவே மானேஜரிடம்  சொன்னார் ஸ்வாமிகள்.

“அதுக்கில்லை பெரியவா..” என்று மேனேஜர் ஏதோ ஆரம்பிப்பதற்குள் ஸ்வாமிகள் அந்த இடத்தை விட்டு எழுந்து விட்டார். பிறகு, மானஜரைப் பார்த்து ஸ்வாமிகள், “நாளன்னிக்கு என்னோட ப்ரோக்ராம் என்னனு தெரியுமோ? தேவக் கோட்டைக்கு பக்கத்துல இருக்கிற கிராமத்தில் இருந்து, ‘சிவன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு நீங்க வரணும் கூப்ட்டிட்டு போனாலே, அந்த ஏழை ஜனங்கள்…நாம எல்லோரும் அந்த கிராமக் கும்பாபிஷேகத்துக்கு போறோம். அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை கவனி” என்று கூறி விட்டு, உள்பக்கம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

சற்று தூரம் தான் சென்றிருப்பார் பெரியவா.  மேனேஜர், அவரையும் அறியாமல் வாய் தவறி, “அந்த கிராமத்துக் கும்பாபிஷேகத்துக்கு எல்லாம் போனா யார் படி அளப்பா ?” என்று சற்று உரக்கவே சொல்லி விட்டார். பூஜை அறைக்குள் நுழையப் போன மஹா ஸ்வாமிகள் காதில் மேனேஜர் சொன்னது விழுந்து விட்டது. உடனே சற்று நின்று திரும்பி பார்த்தார். மஹா சுவாமிகளை எதிர் நோக்க முடியாமல் பயத்துடன் நகர்ந்து விட்டார் மேனேஜர்.

தேவக் கோட்டைக்கு அருகில் உள்ள அந்த கிராமத்து சிவன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தம் பரிவாரங்களுடன் புறப்பட்டு விட்டார் மஹா ஸ்வாமிகள். மிக வேகமான நடை. பரிவாரம் பின் தொடர்ந்தது.

நெடுந் தூரம் நடந்ததும் நான்கு சாலைகள் கூடுகிற ஒரு இடம் வந்தது.  அந்த நாற் சந்தியில் மஹா சுவாமிகளை தரிசிக்க ஆயிரக்கணக்கில் கிராமத்து ஜனங்கள் குழந்தை குட்டிகள் உடன் காத்துக் கிடந்தார்கள்.

அந்த ஜனங்களை பார்த்ததும் மஹா ஸ்வாமிகளுக்கு பரம சந்தோஷம்! சாலை ஓரம் இருந்த ஒரு பெரிய ஆலமரத்து வேரில் அமர்ந்து கொண்டார். அந்த கிராம ஜனங்கள் அனைவரும் வரிசையாக நின்று, ஒவ்வொருவராக நமஸ்கரித்து ஆசி பெற்றார்கள். அவர்கள் வெறுமனே நமஸ்கரிக்கவில்லை. அவர் அவர்கள் சக்திக்குத் தகுந்த படி, அந்த காலத்து வெள்ளி ஒரு ரூபாய், எட்டணா, நாலணா நாணயங்களை மஹா சுவாமிகளின் பாதங்களில் குரு காணிக்கை ஆக சமர்ப்பித்தார்கள். அவ்வளவு பேரும் அன்று தரிசித்து முடிய ஐந்து அல்லது ஆறு மணி ஆயிற்று.

காஞ்சி மஹா சுவாமிகளுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட நாணயங்கள் பெரிய குவியலாக காணப்பட்டது. அந்த ஏழை ஜனங்களிடம் இருந்து பிரியா விடை பெற்று புறப்பட்டார் ஸ்வாமிகள். மடத்தின் மேனேஜர் அந்த காசு குவியலின் அருகே வந்தார். பித்தளை மரக்கால் ஒன்றை பின்னால் இருந்த மாட்டு வண்டியில் இருந்து கொண்டு வர சொன்னார். தரையில் அமர்ந்து தன் கையாலேயே நாணயங்களை மரக்காலால்  அளந்து ஒரு கோணிப்பையில் கொட்ட ஆரம்பித்தார்.

கொஞ்ச தூரம் நடந்து சென்று விட்ட மஹா ஸ்வாமிகள் திடீர் என்று திரும்பி வந்தார். மானேஜரைப்  பார்த்து, “நீ என்ன சொன்னே? ‘அந்த கிராமத்து கும்பாபிஷேகத்துக்கு எல்லாம் போனா, யார் படியளப்பா?’ னு கேட்டியே…அப்படி சொன்ன நீயே இப்ப மரக்கால் வெச்சு அளந்துண்டு இருக்கே ! யோசிச்சு பாரு…’ என்று ஸ்வாமிகள் சிரித்து கொண்டே சொன்னார். அளந்து கொண்டிருந்த மேனேஜருக்கு வெட்கமாக போய் விட்டது.

காசு மூட்டைகளை கடந்து வந்து நடமாடும் அந்த தெய்வத்தின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்தார் மேனேஜர். பிறகு, ஆனந்தக் கண்ணீருடன் சொன்னார், “தெரியாம சொல்லிட்டேன். என்னை பெரியவா மன்னிக்கணும். ”

மஹா ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே நடந்தார்.

______________________________________________________________________________________________

                                          Jaya Jaya Sankara Hara Hara Sankara

                                                          Maha Periyavar – S. Ramani Anna

Dheerga Dharisanam – If all go to kumbabhisekam who will take care of our maintenance? (Yaaru Padi Alappa?)

This incident happened many years ago. Kanchi Maha Swamigal was camping in the town of Karaikudi at that time. He was staying in a community choultry. During that time, the Mutt was facing a slightly difficult financial situation.

The Manager of the Mutt had an idea. Karaikudi is a town  where rich people live. There are many streets. If Maha Periyaval is taken for a town visit in a palanquin on the streets , there would be a good collection of money, thought the manager. He decided to tell this to Maha Swamigal himself and get his permission.

One day afternoon, when Periyava was resting after his bhiksha, the manager hesitantly went near him and stood quietly.

“Come, what is the matter? Looks like you want to tell some thing”, Periyava asked.

The manager  hesitantly  said, “Day after tomorrow evening I have arranged for a town visit”.

For whom? This is Swamigal.

The manager frightfully said, “for periyava only”.

“What is the necessity now?”

“Nothing Periyava, if we make you sit in a palanquin and take you on a town visit along the streets, there will be a good collection of money from the people. It will be helpful for the Mutt in this difficult time…”. Before he could finish the sentence, Swamigal told the manager sternly, “Why? Do you think money should come to Mutt by all these ways! No, that is not possible. I do not intend to sit in the palanquin as per you wish”.

Before the manager could reply anything “No, Periyava…”, Swamigal left that place. Then, Swamigal told the manager, “ Do you know my programme the day after tomorrow? You see, the poor people from a village near Devakottai who called on me and said, You have to come to our Sivan Temple Kumbabhishekam…., we are all going to the kumbabhishekam in the village. You make arrangements for that”, and went inside.

Periyava would have gone only a few steps. Without his knowledge the manager said in a slightly raised voice, “If we go to that village kumbabhishekam, who will take care of our maintenance? ( Yaru Padi allapa? )” The Swamigal who was about to enter the Pooja room heard what the manager said. He stopped and turned. Unable to face Swamigal directly, manager moved away.

Maha Swamigal along with his entourage left for the village kumbabhishekam near Devakottai. He was walking very fast. The entourage followed him.

After walking a long distance, they came to a intersection of four roads. At the intersection thousands of people and children were waiting to have dharshan of Maha Swamigal.

On seeing those people Maha Swamigal became very happy !.  He sat on the roots of a big banyan tree on the road side.  Those village people stood in a line and got blessing from periyava one by one. They  just didn’t  do namaskaram alone. Each person according to their capacity offered silver coins, 1 rupee, 8 annas, 4 annas ( of those days)as Guru Dhakshinai  at the feet of Maha Swamigal . It took 5 to 6 hours for all of them to have darshan.

Coins offered to Kanchi  Maha Swamigal appeared like a big heap. Swamigal reluctantly bade good bye to those poor villagers and started. The Mutt manager came near the heap of coins. He asked to bring one brass measure (Marakal)  from the bullock cart that was standing behind. He sat on the floor and started to measure with the marakal (measuring cup) and poured each measure into a gunny bag.

Maha Swamigal who by then walked over a short distance suddenly came back. He looked at the manager and said with a smile “what did you say –  If we go to that village kumbabhishekam, who will take care of our maintenance? But now you yourself are measuring using the brass measure ( Marakal) ( neeye ippo padi allakre). Think about that.”  The manager who was measuring the heap of coins felt humbled.

The Manager came past those gunny bags and fell at the feet of the walking god. Then he said with tears of joy “ unknowingly I said periyava, please forgive me”.

Maha Swami with a smile started walking.



Categories: Devotee Experiences

Tags:

4 replies

  1. Thenarudaya Periyava Potri!
    Ennatavarkum Iraiva Potri!!
    Sarvagyna Sarvavyapi Maha periyava saranam!!!
    Mayapiraparkum maha periyava adi potri!!!!

    Migavum Sirapu! Thank you for sharing the experiences.

    Regards,
    Karthik Sridharan

  2. Bagavane, Padikkumpothe manam silikirathu.

  3. The Avathara Purusha Knows how to conduct the Mutt, since HE, the Divine Prameshwara incarnation, who have adorns our Kamakoti Mutt, who governs the entire world with us in this Century.

  4. Jaya Jaya Sankara Hara Hara Sankara.Janakiraman. Nagapattinam.

Leave a Reply to Venkatarama Janakiraman JanakiramanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading