Periyava Golden Quotes-363

album2_15

 

உயிர் போன பிறகு உடம்புக்குப் பண்ண வேண்டிய கார்யத்தைச் சொன்னேன். உயிர் போகிற சமயத்தில் செய்ய வேண்டிய பணி ஒன்றும் இருக்கிறது. இதைவிட ஒரு ஜீவனுக்குச் செய்யக் கூடிய பெரிய பரோபகாரம் எதுவுமில்லை. அது என்ன?

க்ருஷ்ண பரமாத்மா அர்ஜுனனிடம், ”உடம்பு போனாலும் ஆத்மா சாகிறதில்லை. அதனால் ஒரு பெரிய தர்மத்தை உத்தேசித்து நீ யுத்தம் பண்ணவேண்டிய கடமை, ஸ்வதர்மம் இருக்கிறபோது, ‘பந்துமித்ரர்களைக் கொல்ல மாட்டேன்’ என்று பின் வாங்குவது ஸரியில்லை” என்று உபதேசம் பண்ணினார். அந்த உபதேசந்தான் பகவத்கீதை பக்தி யோகத்தாலோ ஞான யோகத்தாலோ தன்னை உபாஸிப்பவர்களை மறுபடி இந்த லோகத்துக்குத் தள்ளாமல் பரமாத்மாவான தன்னிடமே அடக்கம் பண்ணிக் கொண்டு விடுவதாக பகவான் சொல்கிறார். பக்தன் ஞானியாகிவிட்டால் செத்துப்போன அப்புறம்தான் பரமாத்மாவிடம் ஐக்கியமாக வேண்டும் என்றில்லை. அவன் இந்த லோகத்தில் இருக்கிற மாதிரி பிறத்தியாருக்குத் தோன்றும்போதே மோக்ஷத்தில்தான் இருந்து கொண்டிருப்பான். ஸகல துக்கங்களிலிருந்தும் விடுபட்ட ஸதானந்த நிலைதான் மோக்ஷம்.. ஆனால் இந்தமாதிரிப் பண்ணி ஜயித்து மீளுகிறவன் எங்கேயாவது கோடியில் ஒருத்தன்தான் இருப்பான். இப்படியானால் என்ன பண்ணுவது? எல்லாவற்றுக்கும் ஒரு குறுக்குவழி இருக்கிறதே, அந்த மாதிரி ஸம்ஸாரத்திலிருந்து விடுபடுவதற்கு short-cut இல்லையா?

ஒன்றே ஒன்று இருக்கிற மாதிரி பகவானே சொல்லியிருக்கிறார் ‘ஒருத்தன் செத்துப்போகிற ஸமயத்தில் எதை நினைத்துக் கொண்டு உடலை விடுகிறானோ, அதையே மறுஜன்மாவில் அடைகிறான். என்னையே ஸ்மரித்துக் கொண்டு எவன் சரீரத்தை விடுகிறானோ. அவன் என்னை அடைந்து விடுகிறான்’ என்று சொல்லி “நாஸ்தி அத்ர ஸம்சய:” – “இதில் ஸந்தேஹமே இல்லை” என்று ‘காரன்டி’ கொடுத்திருக்கிறார்! ‘ரொம்ப ஸுலபமான வழியாக இருக்கே வாழ்க்கை முழுக்க எப்படிக் குட்டிச்சுவராக நடத்தினாலும் அந்திம ஸமயத்தில் மட்டும பகவானை நினைத்துக் கொண்டால் போதுமாமே! அதனாலேயே இந்த ஜனன-மரணச் சக்கரத்திலிருந்து தப்பித்துக் கொண்டு விடமுடியுமாமே!’ என்று தோன்றுகிறது.

ஆனால் பகவான் இங்கே ‘பொடி’ வைத்துப் பேசுகிறார். ‘கடைசிக் காலத்தில் என்னை நினைத்துக் கொண்டு’ என்பதற்கு ‘அந்தகாலே மாம் ஸ்மரன்’ என்று சொன்னால் போதும். ஆனால் பகவான் அப்படிச் சொல்லவில்லை. ‘அந்த காலே ச மாம் ஏவ ஸ்மரன்’ என்று ஒரு ‘ச’வும் ‘ஏவ’வும் போட்டு ஸம்ஸார நிவ்ருத்தி இத்தனை ஸுலபமில்லையப்பா என்று ஆக்கியிருக்கிறார்! இந்த ‘ச’ வுக்கும் ‘ஏவ’ வுக்கும் என்ன அர்த்தம்? அந்த காலே ‘ச’ என்றால் ‘சாகிற ஸமயத்திலும்’ என்று அர்த்தம். ‘மாம் ஏவ‘ என்றால் ‘என்னை’ என்று மட்டும் அர்த்தமில்லை; ‘என்னை மட்டுமே’ என்று அர்த்தம்.அவரை மட்டுமே அந்திமத்திலும் ‘ஸ்டெடி’யாக ஸ்மரிக்க வேண்டும். அப்போதுதான் மோக்ஷம்.  – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

I have spoken about the rituals to be done to a human being after the life leaves the body. There is another great help to be rendered when the soul is about to leave the body or when a person is about to die. Lord Krishna encourages Arjuna to do his duty and fight against the erring Kauravas stating that there is no death to the soul and only the physical entity is destroyed.  He also states that He gathers unto Himself all those who worship Him through Gnana Yoga or Bhakti Yoga. They are not sent back to be reborn in this world. When a person attains Gnana or the Ultimate Knowledge, it is not necessary that he should die to attain the feet of the Almighty. It might appear that he is living in this world, but the Gnani will always be immersed in the eternal bliss of divinity, free from all sorrows.  But such a person will be one in a billion, as Lord Krishna Himself states in Srimad Bhagawad Gita. Then what should be done? Is there no short cut to free oneself from the worldly shackles? Lord Krishna Himself shows the way. The final thought of a person in his death bed, decides the course of his next birth. A person who thinks of the Almighty before he breathes his last will definitely attain the feet of Bhagawan. Sri Krishna assures us that there is no doubt about this. It seems to be a very easy way to escape the whirlpool of death and birth-even if one had led a pointless life, is is not enough to think of the almighty at the time when one breathes the last?  But Lord Krishna has a very subtle point to make here. A careful study of the words He uses makes it clear that He states that a person has to “think of Him alone at the time of death also”. Then only the Ultimate Liberation or Moksha is possible. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi SwamigalCategories: Deivathin Kural, Devotee Experiences

Tags:

Leave a Reply

%d bloggers like this: