2 replies

  1. Jaya Jaya Sankara Hara Hara Sankara. What a wonder. That is the leela of Sri Ambal and the sannidhyam that prevails there. Janakiraman. Nagapattinam.

  2. மஹாபெரியவாளின் இந்த கூற்று உண்மையே …எனக்கு அனுபவம் உண்டு.இதனை படித்து விட்டு, இன்று காலை ஒரு நினைப்பில் …நவராத்திரி சமயம் ….இன்று சிறுகரும்பூர் சுந்தர காமாக்ஷி கோவிலுக்கு போய் வரலாமா?..மனைவியை கேட்டேன் …ஆஹா தாராளமாய் என்றாள்…வாடகை காருக்கு போன் செய்தேன் …என் மனைவி ,தீபத்திற்கு நெய் ,திரி ,நெருப்பெட்டி , காலையில் வாங்கிய புஷ்பம் எடுத்து கொண்டேன் …வேறு என்ன வேண்டும்?ஒரு ரவிக்கை பிட்,தாம்பூலம் எடுத்துக்கொள் …குருக்களின் மனைவியிடம் கொடுத்து விட்டு வருவோம் என்றேன் …”கோவிலின் சாவி அவர்கள் வீட்டில்தான் இருக்கும் …சென்று குருக்கள் வீட்டை தட்டினோம் …அவரின் 2-வது பையன் வந்தான் ….”காஞ்சிபுரத்தில் இருந்து வருகிறோம் …உன் அண்ணன் எங்கே?(அவனை தெரியும்)…அப்பா எப்படி இருக்கார்?……..அவர் காலமாகி 6 மாசம் ஆகிறது …ஒரே ஷாக் ..எப்படி என்றேன்? ….மருத்துவருக்கே புரியவில்லை என்றார்..சரி அம்மா எங்கே? மார்க்கெட்டுக்கு போய் இருக்கார் …நீங்கள் கோவிலில் இருங்கள் …வருகிறேன் என்றான் …..
    நான் வைத்த மஹாவில்வ செடி எப்படி இருக்கு என பார்த்தேன்…சுமார் 7,8 அடி வளர்ந்து இருந்தது ….ஸ்வாமிக்கு நெய்,புஷ்பம் கொடுத்து அர்ச்சனை ….சுந்தர காமாக்ஷி சன்னதி …நெய்,புஷ்பம்,கொண்டுசென்ற மாதுளம் பழம் எடுத்து வைத்தாள் என் மனைவி …அந்த அர்ச்சகர் பையன் ….என் மனைவியின் கையிலேயே இருந்த பையை பார்த்து …அந்த ரவிக்கை துணியையும் தட்டிலே வையுங்கள் ….அம்பாளுக்கு சாத்தி விடுகிறேன் என்றாள் ….என்மனைவி என்னை பார்க்க …நான் அம்பாளை பார்க்க …சட்டென்று இந்த பதிவு மனசில் ஓடுகிறது….குருக்களின் மனைவிக்கு கொண்டு வந்தாய் …நீங்கள் மனிதர்கள் …..கொண்டுவந்ததை திருப்பி எடுத்து போகாதே ….நான் இருப்பது தெரியலையா?…என்று கேட்பது போல தோணியது…ரவிக்கை துணி அன்னையை அலங்கரித்தது …..
    அது என்ன சாதாரண கோவிலா?மஹாபெரியவா 2 முறை வந்து தங்கிய இடமாயிற்றே?…புறப்படும் போது…பிரிய மனம் இல்லாமல் , தம் சிஷ்யர்களிடம் …கொஞ்ச நேரம் …சாயங்காலம் ..இருட்டாயிடுத்து …நாளை காலை என சாக்கு போக்கு சொல்வாராம் ….வைத்த கண் வாங்காமல் அம்பாளையே பார்த்து கொண்டு இருப்பாராம் …கிளம்பி பிரதான சாலை ஏறும் வரை திரும்பி திரும்பி பார்ப்பாராம் …யார் கண்டது ….தன் புதலவனை வழி அனுப்பி வைக்க அம்பாளும் பின்னாலேயே வந்தாளோ என்னமோ?…வஸ்திரங்கள் பற்றி கேட்டேன் …நித்ய நெய்வேத்தியத்திர்ற்கு?….”ஆத்தில் சமைப்பதுதான் என்றான்”
    பிறகு என்ன …முடிவெடுத்து விட்டேன் …என் வீடு முகவரி …போன் நம்பர் கொடுத்து விட்டேன் …அவசியம் காஞ்சிபுரம் வருகிறேன்…என் அண்ணன் வந்ததும் பேச சொல்கிறேன் என்றான்…
    இந்த பதிவிற்கும் …இன்று நடந்த நிகழ்விற்கும் சம்பந்தம் உண்டுதானே? அதுதான் மஹாபெரியவா …

Leave a Reply

%d bloggers like this: