லோகத்தில் சிலபேர் ஏன் ரொம்பக் கஷ்டப்படுகிறார்கள் என்றால், மற்றவர்கள் அவர்களுக்குப் பரோபகாரம் செய்கிறார்களா என்று பார்ப்பதற்காகத்தான் ஈஸ்வரன் இப்படிப் பரீக்ஷை பண்ணுகிறான் என்று சொல்வதுண்டு. ‘அவனவன் தன் கர்மாவுக்காகக் கஷ்டப்படுகிறான்; நாம் உதவி பண்ணினாலுங்கூட அவன் பலன் அடைய முடியாதபடி கர்மா குறுக்கே நிற்கலாம்’ என்பதும் வாஸ்தவம்தான். ஆனால், நம் உபகாரத்தால் அவர் கர்மா தீருகிறதோ, தீரவில்லையோ, நம்மாலான ப்ரயாஸையை நாம் பண்ணுவதுதான் மநுஷ்ய தர்மம். ஒருத்தனைக் கர்மாவுக்காக தண்டிக்கிறபோதே ஈஸ்வரன் மற்றவர்களுடைய பரோபகார சித்தத்துக்கும் அதை ஒரு ‘டெஸ்ட்’டாக வைக்கிறான் என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் உபகாரம் பண்ணியும் அது அவனுக்கு ப்ரயோஜனமாகாவிட்டால்தான், கஷ்டம் என்பது அவன் கர்மாவுக்குத் தண்டனை என்று சொல்லலாம். அநேக ஸமயங்களில் பரோபகாரத்தினால் பிறத்தியார் கஷ்டத்தைப் போக்கவும் முடிகிறதே! இப்படியானால் என்ன அர்த்தம்? நாம் பரோபகாரம் பண்ணி அவன் கஷ்டத்தைப் போக்குகிறோமா என்று பகவான் ‘டெஸ்ட்’ பண்ணியதாகத்தானே அர்த்தம்? – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
It is said that some people are subject to many sufferings in this world only because the Almighty wants to see how others come forward to help them. It is true that the sufferings one experiences are the result of past acts or karma and however much we may try to relieve him of his difficulties, Karma will prevent him from reaping the benefits of this assistance. It is our bounden duty as human beings to try to help those in difficulties without worrying whether our help will benefit him or not. When a person is punished for his karma, it is also a test for others – a test of their philanthropic mindset. Only if our assistance does not mitigate his suffering, we can consider it as a punishment for his karma. Many a times, our assistance relieves him of his sufferings. So it is indeed clear that Bhagawan is testing us to find out whether we are of sufficient charitable bent of mind. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Devotee Experiences
Leave a Reply