
Many Jaya Jaya Sankara to Sri B Srinivasan for the share. Ram Ram
விநாயகர் அகவல் – பாகம் 19
ஸ்ரீ மகா பெரியவா சரணம். கணேச சரணம்.
33. ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
பதவுரை:
ஒன்பது வாயில் – ( இரண்டு கண்கள், இரண்டு காதுகள், நாசியின் இரு துளைகள், வாய்,எருவாய், கருவாய் – என்ற ஒன்பது உறுப்புகளின் தன்மைகளையும்
ஐம்புலக் கதவை – ஐம்பொறிகளான கதவுகளையும்
ஒரு மந்திரத்தால் – ஒப்பற்ற ஓம்கார மந்திரத்தால்
விளக்கவுரை:
உடலை நீடித்து நிறுத்தி வைத்திருக்க முடியாது. தோற்றம் உண்டேல் மறைவு உண்டு. ஒன்பது வாயில் உள்ளதல்லவா உடலுக்கு? அதன் வழியே ஒருநாள் உயிர் வெளியே ஓடிவிடும்.
குறையே இல்லாமல் நிறையே உடையவன் இறைவன். குறைகள் நிறைந்த அறிவுடையது ஜீவன். அது ஜீவ தோஷம். அடியோடு குறைகளை அகற்றுதல் வேண்டும். அதற்கென்றே கரசரணாதி அவயவங்களுடன் பிறவி எடுக்கிறது ஜீவன். தோஷங்களை நிவர்த்திப்பதற்கு கிடைத்த வாய்ப்பே இப்பிறவி. புறவுலக போகத்தை துய்ப்பதற்கு ஐம்புலக் கதவுகள் என்றும் திறந்தே இருக்கிறது. ஆன்ம உணர்வு புறம் போகாதபடி அக்கதவுகளை அடைத்தது விடுவதே அருமையான வழி. ஒன்பது வாயில் உடல் எப்பொழுதும் புறவுலக போகத்தையே நாடிச் செல்வதற்கு காரணம், இந்த ஐம்புலக் கதவுகள் எப்பொழுதும் திறந்து இருப்பதே! காமத்திற்கு அடிமையான காமியோ,ப்ரஹ்மசர்யம் நஷ்டமாவதால், ஓஜஸ்ஸை இழந்து முகப் பொலிவை இழந்து பரிதாபமாக நிற்கிறான். ஆனால் அறிவுடையவர்களுக்கோ, நல்ல புலடக்கத்தால், ப்ரஹ்மசர்ய அனுஷ்டானத்தால், சிவசக்தி கனல் போன்று ஓஜஸ் மேலேறி, சுஷூம்ணா வழியாக அந்தக் கனல் (குண்டலி ஷக்தி) மகத்தான அமுதமாக மாறும். இதற்கென்றே அவர்கள் ஓரெழுத்து மந்திரத்தை உருவேற்றுவர். பிராணாயாமம் செய்வர். இதனால் உலக போகத்தை துய்க்கத் துடிக்கும் மனம் ஒடுங்கும். ஒன்பது வாயிலும், ஐம்புலக் கதவுகளும்,தாமே அடைபடும். இந்த உயர் நிலையை எய்தினவர்கள் சரீரத்தில் ஞான ஒளி விளங்கும். அருள் அறிவு சுரந்து கருணாரஸம் வெளிப்படும். சிவபோகம் சித்திக்கும். என்ன அற்புதமான செய்தி! யானைமுக கணபதி இவை அத்தனையும் தமக்கு அறிவுறுத்தினன் என்கிறார், ஒளவையார்.
மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
Categories: Deivathin Kural
Leave a Reply