Foresight – Be Patient…You will know what is correct!

Hanumath_Jayanthi_Periyava_Meena

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Another great personal experience by Shri Ramani Anna , the noble soul instrumental in constructing Nanganallur and Panchavadi Anjaneyar temple near Pondicherry. He has learned a great lesson here on how to distribute prasadams. I’m sure it will be a lesson for many of us here as well. This experience is taken from Anna’s book Maha Periyava.

Anantha Jaya Jaya Sankara to Smt. Bharathi Shankar, our Sathsang seva volunteer for the translation. Ram Ram


மஹா பெரியவர் – எஸ். ரமணி அண்ணா

                               தீர்க்க தரிசனம்- எது சரிங்கறது தெரியும்… பொறுமையா இரு
 

சென்னை நங்கநல்லூர் ஸ்ரீ அஞ்சநேய ஸ்வாமி விக்ரகம்
ஸ்தாபிக்கபட்டு நிர்மாணப் பணிகள் நடை பெற்று வந்த சமயம். 1993 ம் வருட ஆரம்பம்.

தரிசனத்துக்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சென்றனர்.

அப்போது ஒரு நாள் காஞ்சி மஹா ஸ்வாமிகளை தரிசித்து ஆசி பெற சென்று இருந்தேன். ஸ்வாமிகளிடம்  நமஸ்கரித்து எழுந்தேன்.
ஸ்வாமிகளுக்கு என்னையும் ஆஞ்சநேயர் ஆலய நிர்மாண
விஷயமும் நன்றாகவே தெரியும்.அதனால் “க்ஷேமமா இரு. இப்பவே
நிறையே கூட்டம் வர்றதா இங்கே வர்றவா எல்லாம் சொல்லிண்டு
இருக்கா. பெரிய ஆஞ்சநேயரோன்னோஅதான் அப்படி ஒரு ஆகர்ஷண
சக்தி இருக்கு!” என்று ஆசீர்வதித்து விட்டு, “பெரிய ஸ்வாமி ஆச்சே…
அவர் சாப்பிடறதுக்கு தினமும் நெறைய நிவேதனம் பண்ணனுமே?” என்று கவலையுடன் கேட்டார்.

உடனே நான் “தினமும் ஒரு மூட்டை அரிசி வடிச்சு நைவேதிக்கிறோம்
பெரியவா” என்றேன்.

“சுத்த அன்னமாகவா”?

“இல்லை பெரியவா…சித்ரானன்களா (கலந்த சாத வகைகள்) தயார்
செய்து நிவேதனம் பண்றோம்.”

“எனென்ன பதார்த்தங்கள் பண்றேள்?”

“காலையில் இருந்து வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல்,
புளியோதரை, மிளஹோரை, தயிர் சாதம்னு மாத்தி மாத்தி
பண்றோம் பெரியவா”?

“அவ்வளவையும் வாங்கிக்க நிறைய பக்த ஜனங்கள் வராளோ?”

“அபரிதமான கூட்டம் வரது பெரியவா. அத்தனை பிரசாதமும்
செலவாயிடறது என்றேன் நான் பெருமையுடன்.

பெரியவா சற்று மௌனமாக இருந்து விட்டு, “பிரசாதங்களை எப்படி
கொடுக்கறேள்? துளிப் போறமா அல்லது நிறையவா ?” என்று கேட்டார்.

நான் மிகப் பெருமையாக ஸ்வாமிகளிடம், “கையிலே வாழ இலையைக் கொடுத்து வாரிக் கொடுக்கறோம்
பெரியவா” என்றேன்.

உடனே ஸ்வாமிகள், “அதை நானும் இங்கே வர்றவா மூலம்
கேள்விப்பட்டேன். அதிருக்கட்டும். உன்னை ஒன்னு கேக்கறேன்.
ஸ்வாமி பிராசாதத்தை துளியுண்டு, ப்ராசாதமா கொடுக்கறது
சரியா…இல்லை சாப்பாடு மாதிரி நிறைய கொடுக்கறது சரியா?”
என்று கேட்டார் ஆர்வமுடன்.

எனக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. குழம்பி போய்மௌனமாக நின்றிருந்தேன்.

அந்த மாமுனிவர் சிரித்து கொண்டே,”என்ன இப்படி ஸ்தம்பிச்சு
நின்னுடியே! நானும் உன் மூலமா தெருஞ்சுக்கலாமேன்னு தானே
இதை கேக்கறேன்?” என்றுமீண்டும் கேட்டார்.

நான் தயங்கியபடியே பவ்யமாக, “இல்லே பெரியவா…கோயிலுக்கு வர
பக்த ஜனங்கள் ரொம்ப தூரத்தில் இருந்து வந்துண்டு இருக்கா…பசியா
இருப்பா…அதனாலே தான் பிராசதத்தை அள்ளி கொடுத்துண்டு…”என்று நான்  முடிப்பதற்குள்
ஸ்வாமிகள், “நீ நெனைக்கறது எனக்குப் புரியறது.
பிரசாதத்தை ப்ராசாதமா கொஞ்சம் கொடுத்துட்டு, பசிக்கிறவாளுக்கு
ஒக்கார வச்சு சாப்பாடு போடறது தான் சரியாய் இருக்குமோன்னு
எனக்கு தோண்றது” என்று நிறுத்தியவர், ” நம்ம பண்டிதர்களும்வேத சாஸ்திரங்களும் ‘இப்படிப் பண்ணு,அப்படிப் பண்ணாதே” னு
சொல்லி வச்சிருந்தாலும் எத்தனையோ விஷயங்களை அனுபவ
உண்மையாய் பார்த்தால் தான் தெருஞ்சுக்க முடியறது” என்று பட்டும் படாமலும் சொல்லவே, எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை.

நான் மிக குழப்பத்துடன். “எனக்குப் புரியலையே பெரியவா, எது சரி?
பிராசாதத்தை கொஞ்சமா அளவா கொடுப்பதா? நிறைய கொடுப்பதா?
நீங்க உத்தரவு பண்ணனும்!” என்றேன் பணிவாக.

“அப்பிடி இல்லை…அப்பிடி இல்லை! எது சரிங்கறதை அனுபவ
சித்தாந்தமா நீயே ஒரு நாள் தெருஞ்சுப்பே. அது வரைக்கும்
பொறுமையா இரு” என்று முடிவைச் சொல்லாமலே உத்தரவு
கொடுத்து விட்டார் அந்த மாமுனிவர்.

தற்போது, பாண்டிச்சேரி -திண்டிவனம் மார்கத்தில் ‘பஞ்சவடி’ என்னும்
இடத்தில், 36 அடி உயர பஞ்சமுக ஸ்ரீ அஞ்சநேய ஸ்வாமிக்கு ஆலயம்
ஒன்றை நிர்மாணித்து வருகிறேன். கட்டுமானப் பணிகள்
நடைபெறுகின்றன. இங்கும் பக்தர்கள் கையில் வாழ இலை
கொடுத்து ‘போதும் போதும்’ என்கிற அளவுக்கு ப்ராசாதங்கள்
கொடுப்பது வழக்கம். சில நேரம் நானே கொடுப்பதும் வழக்கம்.

சமீபத்தில் ஒரு நாள் ஸ்வாமிக்கு நிவேதிக்கப்பட்ட ப்ராசாதங்களை
நிறையஅள்ளி கொடுத்து கொண்டு இருந்தேன். ஓர் இலையில் கதம்பம்
(சாம்பார் சாதம்), மற்றொன்றில் தயிர் சாதம் என விநியோகித்து
கொண்டு இருந்தேன்.அமர்ந்து பிராசதங்களை சுவைத்து கொண்டு
இருந்த நான்கைந்து பேர் என்னிடம் வந்தார்கள். அதில் ஒருவர்
என்னிடம் சீரியஸ் ஆக, “சாம்பார், தயிர்சாத பிராசதமெல்லாம்
நிறையவே தர்றிங்க. வாய்க்கும் ரொம்பவே நல்லா இருக்கு.
இருந்தாலும் ஒண்னு சொல்றோம். சாம்பார் சாதத்துக்கு தொட்டுக்க
ஒரு பொரியலும், தயிர் சாதத்துக்கு கொஞ்சம் ஒறப்பா ஊறுகாயும்
வெச்சிங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்!” என்றார்.

எனக்கு தூக்கி வாரி போட்டது. உடனே என் நினைவுக்கு வந்தது,
93-ம் வருடம் காஞ்சி ஸ்ரீ மடத்தின் தீர்க்க தர்சியான மஹா ஸ்வாமிகள்
சொன்ன நிதர்சன வாக்கியம்.

“அப்பிடி இல்லை…அப்பிடி இல்லை! எது சரிங்கறதை அனுபவ
சித்தாந்தமா நீயே ஒரு நாள் தெருஞ்சுப்பே. அது வரைக்கும்
பொறுமையா இரு”.

பிரசாதத்தை ப்ராசாதமாகக் கொஞ்சம் தான் கொடுக்க வேண்டும்’
என்பதை அனுபவ சித்தாந்தமாக இப்போது நான் தெரிந்து கொண்டு
விட்டேன்.
__________________________________________________________________________________________

Foresight – Be Patient…You will know what is correct!

It was at the time of the establishment of Nanganallur Anjaneya Swamy temple and the construction works of the temple was being carried out. The beginning of 1993.

A lot of devotees were visiting the temple.

At that time, one day I went to have the Darshan of Maha Periyava to seek His blessings. I prostrated before Him and paid my obeisance. Swamigal knows me and about the construction of the temple.  “Stay blessed. I’ve heard from many who are coming here, about the news of people thronging your temple. Being a giant sized Anjaneyar, He must have had a great Aakarshana Shakthi” (the power of attracting the masses).

Blessing me, He asked me with concern,” He is quite a big Swamy. Don’t you have to offer Him a lot of Prasadham to eat?” At once I replied,” We cook a big bag of rice and offer Him every day Periyava.”

“Just as plain rice?”

“No Periyava. We prepare Chithraannams (mixed Rice) and offer Him.”

“What are the items that you are preparing?”

“From morning onwards we make a variety of Venn Pongal, Sarkkarai Pongal (Jaggery rice),  Puliyodharai, (Tamarind Rice), Milahorai (Pepper Rice), Curd Rice etc. in an order, Periyava.”

“So a lot of devotees are coming to get all these?”

“An extraordinary number turn in everyday Periyava. All the items are used up daily,” I replied proudly.

Periyava was keeping silence for some time. Then He asked,” Are you giving the Prasadhams in small quantity or large quantity?”

I replied to Swamigal with a lot of pride,” We give them a piece of plantain leaf and offer them a lot Periyava”

At once Swamigal asked,” I heard of it from people who come here. Let me ask you one thing. Should the Prasadham be given in small quantity as Prasadham or should it be given as meals in plenty?” The question came eagerly.

I didn’t know how to reply this.

I was standing there confused.

The great Saint said laughing, “Why are standing awestruck? I’m asking you this question, only to get an idea about it myself,” He asked again.

I replied humbly with some hesitation,” No Periyava, the devotees visiting the temple are coming from far off places. They might be hungry. That’s why we are offering the Prasadham in plenty….,” even before I could complete the sentence, Swamigal replied, “I could understand what you are thinking. But I feel  Prasadham should be given in small quantity as Prasadham and the hungry masses can be fed properly by making them sit and have their meals.” He stopped and continued to say, “Though all our Vedas and Sastras have laid down many rules for the Do’s and Don’ts, many things in life can be comprehended only by personal experience,” He said in a non-committal way and I couldn’t get it properly.

I asked confusedly.” I don’t understand Periyava, which is right? Should the prasadham be given less or more? You have to guide me in this,” I requested humbly.

“No, no. You will know which is right from your own personal experience. Till then, be patient,” the great Saint had seen me off without letting out the answer.

Presently I’m constructing a temple at Panchavadi, situated on the way from Pondichery to Dindivanam, for a 36 foot high Panchamukha Anjaneya Swamy. Construction work is being carried out now. It’s customary here too, to give a plantain leaf to the devotees and give away Prasadham to their hearts’ full. Sometimes I myself used to undertake the job of giving it. Recently one day I was giving away the Prasadhams in large quantity as usual. I was distributing Kadhambam (Sambar Rice) in one leaf and Curd Rice in another leaf. A few of the men sitting nearby and tasting them, approached me. One among them told me seriously,” You are giving Sambar Rice and Curd Rice in large quantity and they are all very tasty too. But then, we would like to suggest one thing. It would be better still if you could offer some Poriyal (a side dish) to the Sambar Rice and a hot pickle for Curd Rice.” I was flabbergasted by it. At once the everlasting sentence of the great Foreseer of Kanchi, uttered in 1993, flashed through my mind.

“No, no. You will know which is right from your own personal experience. Till then, be patient.”

I have learnt the truth that ‘Prasadham should be given as Prasadham only, in small quantity,’ from this personal experience.



Categories: Devotee Experiences

Tags:

3 replies

  1. Only Mahaperiyavaa can explain the difference between Prasadam and Annadaanam in such practical and simple manner.

    But one question which Mahaperiyavaa has Himself expressed in many occasions is that when there are hundreds of temples languishing without proper maintenance and do not have resources even for lighting the lamp, what is the purpose of building such huge temples spending crores of rupees.

    Well that is point to ponder by all of us.

  2. Jaya Jaya Shankara Hara Hara Sankara.There is lot of difference between Giving prasadam and Annadhanam. Now we know what to do while distributing prasadams, Janakiraman. Nagapattinam.

  3. Beautiful experience. Sometimes, the greatest of the messages are provided by Periyava through very subtle and simple incidents. Om Nama Shivaya!!!

Leave a Reply

%d bloggers like this: