Jaya Jaya Sankara Hara Hara Sankara – Sri Periyava stresses on the importance of helping temple renovation kainkaryams. There are some important ancient temple renovations taken up by Smt. Mahalakshmi Mami and Punar Uddaranam (renovation) is happening in full swing. The kumbabishekams for those are coming up shortly which need all of our help & support. Mami can very easily put her feet up and spend the rest of her life stress free but she is doing this purely for Sri Periyava despite many challenges. Every renovation/kumbabishekam she undertakes is based on the guidance and advice from our Periyavas. It is our duty to give her a helping hand in whatever capacity one can and take part in this great kainkaryam. It can be physical, financial, or even spreading this message across to as many like minded as possible. Mami is also very humble and a charm to talk to so please do not hesitate to call her if you have any questions.
The ancient temple renovations that are in progress can be seen in the following link. This website can also be accessed from the “Important Links” section on the blog’s homepage.
http://ancienttemples.webs.com/renovations-in-progress
Mami’s Contact Info. is in the website but listing it below for convenience:
Anantha Jaya Jaya Sankara to our Sathsang Seva Volunteer for the Tamizh typing and translation. I’m attaching the original message below as well. Ram Ram
ஒரு செங்கல்லில் இவ்வளவு புண்ணியமா?
ஸ்ரீ ஒரு கோவிலை புனர் நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் நடத்துவது என்பது மிகப்பெரிய பணிகளில் ஒன்று. முக்கியமாக இதற்கு ஏராளமான பணம் தேவைப்படும். எவ்வளவு பணம் தேவைப் பட்டாலும், அதை புரட்டியே ஆக வேண்டும் என்கிறார் காஞ்சி மகாபெரியவர். கோவில் கும்பாபிஷேகத்திற்கு உதவுவதில் பலன்கள் குறித்து அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கேளுங்கள்.
ஒரு நல்ல காரியத்திற்கு உதவி செய்வது என்பது பெரிய புண்ணியத்தை தரும். கோவில் திருப்பணிக்கு நம்மால் என்ன கொடுக்க முடியுமோ அதை கொடுத்து கோடி புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். தர்மமாக ஒரு செங்கல்லாக கொடுத்தாலும், அந்த செங்கல் அந்தக் கோவிலில் எத்தனை வருஷங்கள் உள்ளதோ அத்தனை ஆயிரம் வருஷங்கள் கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ வாசம் செய்யலாம். கும்பாபிஷேகம் மட்டுமின்றி, ஒரு ஏழையின் கல்யாணத்திற்கு உதவுவதும், சிவபூஜை செய்பவர்களுக்கு வேண்டிய பூவோ, பழமோ, கற்பூரமோ ஏதாவது ஒன்றைக் கொடுத்தாலும் புண்ணியம் உண்டாகும்.
இது பற்றி கதை ஒன்று சொல்வார்கள்.
ஒரு அந்தணர் தெருவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த ஒருவர், “ஐயா…என்ன தேடுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்தணர், “சிவ பூஜைக்கு வாழைப்பழம் வாங்குவதற்காக ஓர் அணா வைத்திருந்தேன். அது கீழே விழுந்து விட்டது. தேடிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
வந்தவர், “பரவாயில்லை…அதை விடுங்கள். நான் ஒரு அணா தருகிறேன். நீங்கள் வாழைப்பழம் வாங்கி வைத்து பூஜை நடத்துங்கள்” என்றார்.
கால வெள்ளத்தில் இருவரும் இறந்து போனார்கள். எமதர்ம ராஜன் சிவபூஜை செய்தவரை ரத்தின சிம்மாசனத்திலும், ஓர் அணா காணாமல் போய் அவருக்கு உதவியவரை தங்க சிம்மாசனத்திலும் உட்கார வைத்து அழைத்துச் சென்றார். அந்த அளவுக்கு சிறு தொகை கூட பெரிய புண்ணியத்தைக் கொடுக்கும்.
இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், சிவபூஜை அல்லது கும்பாபிஷேகத்தை நடத்துபவரை விட, அதற்கு உதவி செய்பவருக்கே புண்ணியம் அதிகம். அதனால் தான், எந்த ஊரில் கும்பாபிஷேகம் நடந்தாலும் அதற்கு உங்களால் முடிந்ததைக் கொடுங்கள். ஏற்கனவே சொன்னது போல, ஒரு செங்கல் கொடுத்தாலும் கூட அந்த செங்கல் அந்தக் கோவிலில் இருக்கும் நாள் வரைக்கும் கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ வாசம் செய்யலாம் என்பதை நினைவில் வையுங்கள். அது மட்டுமல்ல…உங்கள் முன்னோர்களில் பலர் மோட்சம் அடைய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கலாம். கும்பாபிஷேகம் முடிந்த 48 நாட்களில் ஏதேனும் ஒருநாள் செலவை நீங்கள் ஏற்றுக் கொண்டால் அவர்களின் ஆத்மா சாந்தியடையும்.
So much punya for one brick?
Rebuilding or reconstructing a dilapidated temple and performing kumbabhishekam for the same is one of the very important tasks. One would need lot of funds to perform this. Kanchi Maha Periyava clearly states that how much ever fund is required for this activity, it has to be collected and used for this activity. Let us understand what Periyava mentions about the reward on helping for a temple kumbabhishekam.
Helping a noble cause would yield lot of punyam. Whatever we could offer and help for a temple kumbabhishekam, we should give and be a recipient to koti punyam. Even if we offer one brick and till that brick stays in a temple, those many thousand years we get to stay either in Kailasa or Vaikunta. Apart from helping for kumbabhishekam, sponsoring weddings for needy people, buying fruits, flowers or camphor for Siva Pooja would also yield lot of punyam.
There used to be a story regarding this. One Brahmin was searching for something in the street. Another person who looked into that asked, “Sir, what are you searching for?” Brahmin responded, “To buy bananas for Siva Poojai, I had kept money and it fell down. I am searching for that”. That person on hearing this told, “That’s ok…please leave that. I shall give you money. Please buy banana with that and perform your Siva Pooja”
After few years, both of them died. Yamadharma Raja took that Brahmin who performed Siva Pooja in a rathna simhasanam and for the person who helped by giving money, he took him in a gold simhasanam. Even a small amount would yield lot of punyam. Point to be noted here is, person who helps in doing Siva Pooja or Kumbabhishekam would get more punyam rather than the one who is doing it. So, wherever Kumbabhishekam happens, we should offer whatever we could. As said above, we should remember that even a brick is offered, we get to stay in Kailasa or Vaikunta till that brick stays in a temple. Not only that, some of our ancestors might be struggling without attaining moksha. It is said that if we sponsor one day activity within the 48 days after the kumbabhishekam, they would attain moksha.
Categories: Samrakshanam
The website link no longer works, kindly let know if this is closed or there is an update. I will also contact the person for details.