Are there old wing and new wings in your palace?

Periyava_walking_logo

Jaya Jaya Sankara Hara Hara Sankara – I have heard this fabulous incident in Shri Ganesa Sarma Mama’s Periyava Sapthaagam.

Anantha Jaya Jaya Sankara to Shri Krishna Kanna for the translation and Shri Varagoor Narayanan Mama for Tamizh typing. Ram Ram

“உங்கள் அரண்மனையில் நியூவிங், ஓல்ட்விங் என்று இரண்டு இருக்கோ?”-பெரியவா

‘இவர் சாட்சாத் பரமேஸ்வரரின் கலியுக அவதாரம்’ (ஸ்பெயின் பிரமுகர்)

கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி.
காஞ்சி மகானின் கருணையுள்ளம்-புத்தகத்திலிருந்து.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒருமுறை ஸ்பெயின் நாட்டிலிருந்து ஓர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பிரமுகர் வந்து மகானைத் தரிசனம் செய்கிறார். அவர் ஸ்பானிஷ் மொழியில் பேசியதை மகானுக்கு ஒருவர் மொழிபெயர்த்துச் சொல்லிக்கொண்டு இருந்தார்.

நாட்டின் அதிபரைப் பற்றியோ, சீதோஷ்ண நிலையைப் பற்றியோ விசாரிக்கலாம். இல்லை மக்களின் பண்பாடு, கலாச்சாரம் இவற்றைப் பற்றியும் பேசி இருக்கலாம். இந்த எல்லா  விஷயங்களையும் பத்திரிகை வாயிலாக எல்லோருக்கும் தெரிய வாய்ப்பு உண்டு.

ஆனால் மகான் இதைப் பற்றியெல்லாம் அந்த ஸ்பெயின் பிரபுவிடம் கேட்கவில்லை.

அவர் என்ன கேட்டார் பாருங்கள்.

“உங்கள் அரண்மனையில் நியூவிங், ஓல்ட்விங் என்று இரண்டு இருக்கோ?”

“ஆமாம்”

“இப்ப நீங்க எந்த ‘விங்’லே இருக்கீங்க?”

“நியூவிங்” என்கிறார் அவர்.

“அங்கே தண்ணீர்,மத்தவசதி எல்லாம் இருக்கோ?”

“ஆமாம் நியூவிங் மிகவும் வசதியாக இருக்கிறதாலே தான் அங்கே தங்கியிருக்கிறோம்.”

அடுத்து மகான் அவரிடம் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போடுகிறார்.

“அப்போ அந்த உபயோகப்படாம இருக்கிற ஓல்ட்விங்கை இடிச்சுட்டு, நந்தவனமா பண்ணிடலாமே” என்று அந்த மகான் சொன்னதைக் கேட்டதும் ஸ்பெயின் பிரமுகருக்கு ஒரு பலமான சந்தேகம் மனதில் எழுந்தது.

இப்படி தன் நாட்டின் ஒரு குறிப்பட்ட இடத்தைப் பற்றி இத்தனை விரிவாகச் சொல்லி, அதை இப்படி மாற்றலாம் என்று அறிவுரை வேறு கூறுகிறாரே என்று நினைத்த அவர், மொழிபெயர்ப்பாளரிடம்,
“மகான் எப்போது ஸ்பெயினநாட்டிற்கு விஜயம் செய்தார்?” என்று கேட்டார்.

மொழிபெயர்ப்பாளர் அதை மொழிபெயர்ப்பு செய்து பதில் கேட்பதற்கு முன்பே சாட்சாத் பரமேஸ்வரரான மகான், ஒரு சைகையின் மூலம் அந்த ஸ்பெயின் பிரமுகருக்கு பதிலளித்து விட்டார்.

தன் திருக்கரத்தால் ஒரு வட்டம் போடுவது போல் சைகை காண்பித்து, ஓர் அர்த்த புன்னகையோடு அந்தப் பிரமுகரைப் பார்த்தார். ஸ்பெயின் பிரமுகருக்கு அந்தக் கணமே எல்லாம் புரிந்து போயிற்று.

‘இவர் சாட்சாத் பரமேஸ்வரரின் கலியுக அவதாரம்” என்று தெரிந்து கொண்ட அவருக்கு மெய்சிலிர்க்க, கீழே விழுந்து வணங்கி எழுந்து, மகானின் ஆசியைப் பெற்றார்.

——————————————————————————————————————————————————–

Are there two wings namely Old wing and New wing in your palace? – Maha Periyava.

He is verily the Kaliyug Avtar of The God – Spain visitor.

Author – Ra.Venkataswamy

From Kanchi Mahanin Karunai Ullam – Book

Scripted by: Varagooran Narayanan.

Once a prominent person belonging to the Spanish Royal Family came to Sri Mahaperiyava for darshan. A person was translating his Spanish speech to Mahan.

Could have enquired about Spain’s President, climate. Perhaps could have spoken about People’s habits and culture. People could be aware of these matters by possibly reading tabloids and magazines.

But He did not enquire to Spanish Royal diplomat on these things.

What did he enquire about, let’s see.

“Are there two wings namely old wing and new wing in your palace?”

“Yes.”

“Currently in which wing do you stay?”

“New Wing” said the visitor.

“Do you have Water and other facilities in the new wing?”

“Yes, since New Wing is very comfortable we are staying there”

Next Mahan put a shocker to him.

“Then, perhaps you may renovate that unusable old wing into an orchard”. After hearing the speech of Mahan, Spanish diplomat had a strong doubt in his mind.

Thinking how this Mahan knew the details of a specified place of my country and further more able to suggest changes to that place, he asked the translator “When did Mahan visit Spain?”

Before even the translator was trying to translate this, The God in real, Mahan has answered the Spanish diplomat through a mere signal.

Through His divine arm, waving a circle like signal, Mahan displayed a compassionate smile toward the Spanish diplomat.  Spanish diplomat immediately understood everything instantly.

After becoming aware that “He is verily the Kaliyug Avtar of The God “the Spanish visitor reverently prostrated at the feet of Venerable Mahan and got blessings.



Categories: Devotee Experiences

Tags:

4 replies

  1. I’m afraid I don’t understand!

  2. Jaya Jaya Sankara Hara Hara Sankara..’ SHOOSHMA DRISTI, DOORA DRISTI ETC ETC ARE ONE OF THE SPECIALITIES and that is why we call him SARVANGYNA , SARVAVIYAPI.” Kali Yuga kankanda deivam” sri Maha Periyava. Let us pray for his blessings. Janakiraman. Nagapattinam

  3. Nothing is understood by this post

  4. Maha periyava is kuliyuga deivam. No words to express

Leave a Reply to MahesCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading