ஏழையோ, பணக்காரனோ எல்லார் குடும்பத்திலும் கல்யாணம் மாதிரியான சுப காரியங்கள், சாவு மாதிரியான அசுப காரியங்கள் வருகின்றன. இவற்றுக்காக எவனும் கடன்படுகிற மாதிரி நாம் விட்டால் அது நமக்குப் பெரிய தோஷம். அவரவரும் தன்னாலானதை ஐந்தோ, பத்தோ ஏழைப்பட்ட பந்துக்களின் சுப, அசுப கார்யங்களுக்கு உதவ வேண்டியது ஒரு பெரிய கடமை. இதை முன்காலங்களிலெல்லாம் ஸஹஜமாகச் செய்து வந்தார்கள். ‘பரோபகாரம்’ என்று யாரோ மூன்றாம் மனிதர்களுக்குச் செய்வதற்கு முன்னால், ‘பந்துத்வ’த்தோடு நம்முடைய ஏழைப்பட்ட உறவினர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இரண்டு தலைமுறைக்கு முந்தி இதைச் சொல்ல வேண்டிய அவச்யமே இருக்கவில்லை. அப்போது ‘கிழவர் பராமரிப்பு இல்லம்’, ‘விதவை விடுதி’ என்றெல்லாம் வைக்க வேண்டிய அவச்யமே இல்லாதிருந்ததற்கு என்ன காரணம்? பந்துக்களே இவர்களைப் பராமரித்து வந்ததுதான். தற்காலத்தில் ரொம்பவும் பணக்காரர்களும்கூட வெறும் ‘ஷோ’வாக பார்ட்டியும் ஃபீஸ்டும் கொடுக்கிறார்கள் அல்லது பேப்பரில் போடுகிற மாதிரி டொனேஷன் கொடுக்கிறார்கள்; ஆனால் பந்துத்வத்தோடு தங்கள் குடும்பத்திலேயே வசதி இல்லாதவர்களை ஸம்ரக்ஷிப்பது என்பது இப்போது அநேகமாகப் போயே போய்விட்டது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Whether a person is rich or poor, good and bad events like weddings and deaths respectively take place in his life. It is a great sin if we allow anyone to get into debt on account of these occurrences. We should contribute whatever possible by us when such events take place in the lives of our poor relatives. In olden days, this used to be done automatically. Before being philanthropic towards strangers, we should help our poor relatives. It was not necessary to talk about this before two generations. There was no need for an Old Age home, or a Widow’s home because relatives used to take care of them. Nowadays, rich people throw parties and organize feasts as mere ‘shows’. Otherwise they give donations to appear in the newspapers but taking care of the poor relatives is a practice that has almost disappeared. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Hara Hara Sankara Jaya Jaya Sanakara. True, PAROPAKARAM is not to be seen nowadays.But it is still prevalent in some villages only.There is a marked drift from the traditional custom and practice.Janakairaman. Nagapattinam.
please one correction old age home and not homes. thank you