ஒரு பெண்ணின் கல்யாணம் என்றால் ஸரி, மற்ற பல விஷயங்களிலும் ஸரி, ‘மிடில் க்ளாஸ்’ (மத்யதர வகுப்பு) ஜனங்கள்தான் கஷ்டப்படுகிறார்கள். பணக்காரர்கள் கல்யாணத்தில் ஆடம்பரம் செய்தால் ஹானி அடைவதில்லை. அவர்கள் “நாங்கள் ஸிம்பிள் மாரேஜ் செய்கிறோம்” என்று ஆரம்பித்தாலும் ஸமூஹம் அவர்களைக் கொண்டாடுகிறது. ரொம்பவும் ஏழைக்கு எவனோ உதவி பண்ணிவிட்டுப் போகிறான். அவன் எத்தனை ஸிம்பிளாகப் பண்ணினாலும், ”ஐயோ பாவம், அவனால் முடிந்தது அதுதான்” என்று லோகம் அநுதாபப்படுகிறது. மிடில் க்ளாஸ்காரன்தான் இரண்டுங்கெட்டானாக, ஆடம்பரம் செய்யவும் வசதியில்லாமல், ஸிம்பிளாகச் செய்தாலும் மற்றவர்களின் திட்டை வாங்கிக்கொண்டு அவஸ்தைப்படுகிறான். இவன் மட்டும், ”திட்டினால் திட்டட்டும்” என்று பொய் அந்தஸ்து கொண்டாடிக் கொள்ளாமல், எளிமையாகத்தான் இருப்பது என்று ஆரம்பித்துவிட்டால் எல்லாம் ஸரியாய்விடும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Whether it is the marriage of a daughter or any other occurence, it is the middle class which suffers the most. Rich people are not affected by ostentatious marriages. Even if they choose to perform the marriage in a simple manner, they are praised by the society. Somebody helps the poorest of the poor. Even if the poor performs the simplest of marriages, society sympathises with him. Only the person belonging to the middle class is caught in a no man’s land. He can neither spend ostentatiously nor can he perform a simple marriage without becoming the butt of the criticism of others. If only he chooses to ignore the criticism of others and daringly decides upon simplicity, everything will be solved. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply