Vinayagar Agaval – Part 14 (f)

Vinayaka--my first W.C painting

ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்

அகவல் வரிகளைப் பற்றி எழுதிவரும்போது பாகம் 14  (e) க்கு பிறகு, நடுவில் ஒரு வரி (26 வது வரி) விடுபட்டுவிட்டது.  அதைப் பற்றி இங்கு சிந்தனை செய்வோம்.

26. தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

பதவுரை:

தெவிட்டாத – தெவிட்டுதல் இல்லாத ஞானத் தெளிவையும் காட்டி – பேரின்பத்துக்குரிய தெளிந்த ஞானத்தையும் எனக்கு அனுபவத்திலேயே தந்தருளி

ஞானத் தெளிவு:

சைவ சித்தாந்த பசு-பதி -பாசம் என்ற கருத்துப்படி: நெருப்பை போன்றது பசு.  நெருப்பின் சூடு போன்றது பதி.  நெருப்பின் ஒளியைப் போன்றது பாசம். நெருப்பின் சூடு,அருவமாகி, அகத்திலும் புறத்திலும் அடங்கி கிடக்கிறது.  சூடு இல்லையேல் நெருப்பும், ஒளியும் வெளிப் படுதல்  இல்லை.  நெருப்பும்சூடும், ஒளியும் போன்று பசுவும் பதியும் பாசமும் ஒன்றை ஒன்று பிரியாத அநாதி நிதியம் [என்பது சைவ சித்தாந்த கருத்து.  மேலும், பேரறிவை உடையது பதி; அந்த பதியை அறியும் ஆற்றல் பசுவுக்கு உண்டு, ஆனால்,அறிய இயலாதபடி பாசம்மறைத்து நிற்கிறது.  ]

இந்த தெவிட்டாத ஞானத் தெளிவை அவ்வையார் கணபதியிடம் வேண்டி நிற்கிறார்.  கணபதியோ, அவர் வேண்டிய ஞானத் தெளிவை ஒரு தாய் குழந்தைக்கு பால் புகட்டுவது போல் அவருக்கு உபதேசிக்கிறார். அவ்வைப் பிராட்டிக்கு உதித்த இந்த ஞானத் தெளிவு, கணபதி காட்டியதின்  மூலம் உதித்தது. ஆதலின் இது, “தெவிட்டாத ஞானத் தெளிவு”  எனப் பெறுகிறது.  கணபதியை அன்றி நல்ல ஞானம் தந்தருளும் தெய்வம் வேறு ஏதும் உண்டோ?

இப்பொழுது ஸ்ரீ மஹா பெரியவாளை ஆஸ்ரயிப்போம்.  ப்ரஹ்மம், ஈஸ்வரன், மாயை, மனஸ், அத்வைதம், போன்ற விஷயங்களை பற்றி தெய்வத்தின் குரல் பகுதிகளை பலமுறை படித்தால் தான், நமக்கு அதைப்பற்றி கொஞ்சமாவது தெரியவரும்.  இங்கே சொல்லப்பட்ட தெவிட்டாத ஞானத் தெளிவு‘, ஸ்ரீ பெரியவாளின் க்ருபையால்தான் நமக்கும் கிட்ட வேண்டும்.  மாயா சக்தியே ஞானமும் அளிப்பதுஎன்ற தலைப்பில் தெய்வத்தின் குரல் – பகுதி 4-ல், ஸ்ரீ பெரியவா சொல்லுவதைக் கேட்போம்.

மாயாசக்தியே ஞானமும் அளிப்பது (Deivathin Kural – Vol 4)

ஈச்வரன் ஞான ஸ்வரூபி, அவனே ஞானம் தருபவன் என்கிற விஷயத்தைச்சொல்லாமல் சொல்லும்ஸூக்ஷ்மமான முறையில் ஆசார்யாள் கேநோபநிஷத் பாஷ்யத்தில்வெளியிட்டிருப்பதாகத் தோன்றுகிறது. ‘யார் எது செய்தாலும் அது தன்னுடைய ஸொந்த சக்தியைக் கொண்டு அல்ல; ப்ரஹ்மத்தின் சக்தியைக் கொண்டுதான் எவரும் எதையும்செய்யமுடிவதுஎன்று அம்பாள், இந்த்ரனுக்கு உபதேசித்ததாக அந்த உபநிஷத்திலே இருக்கிறது. மூலத்திலே அம்பாளைரொம்ப சோபையுள்ளவள், உமா என்றும் ஹைமவதி என்றும்பெயருள்ளவள்என்று தான் சொல்லியிருக்கிறது. ஆனால் ஆசார்யாளோ இதற்குப் பதம் பதமாகச் செய்த பாஷ்யம், வாக்யம் வாக்யமாகச் செய்த பாஷ்யம் ஆகிய இரண்டிலும்அம்பாளைத் திரும்பத் திரும்பவித்யாஎன்று சொல்கிறார். “வித்யாஎன்றால் ஞானம் என்றே அர்த்தம். ஞானம் என்றால் அத்வைதத்தில் ப்ரஹ்ம ஞானம்தான்அதாவது ஜீவன்தன்னுடைய ஆத்மாவே ப்ரஹ்மம் என்று உணர்வதான அத்தைவ ஞானம்தான். உபநிஷத்தில் பலவிதமான உபாஸனைகளையும் வித்யா என்றே சொன்னாலும் அவற்றிலெல்லாம் அந்தஉபாஸனையே ஸம்பந்தப்படுத்தி அதற்குஇன்ன வித்யாஎன்று அடைமொழி கொடுத்துப் பெயர் சொல்லியிருக்கும். இப்படியில்லாமல் வெறுமே வித்யா என்று மட்டும் சொன்னால்அது ப்ரஹ்ம வித்யாதான், அதாவது ஆத்மஞானம்தான். “சோபையுள்ளவற்றிலெல்லாம் பரம சோபையானது வித்யையேஎன்று அம்பாளை வித்யாவாகச் சொல்கிற ஆசார்யாள்பாஷ்யம் பண்ணியிருப்பதால் அவர் அவளை ப்ரஹ்ம வித்யாஸ்வரூபிணியாகவே சொல்கிறார் என்று நிச்சயப்படுகிறது.

அவித்யா என்றால் அஞ்ஞானம். மாயையை ஆசார்யாள் அவித்யா என்றே சொல்வார். (அப்புறம் மாயைக்கும் அவித்யைக்கும் கொஞ்சம் வித்யாஸம் காட்டியும் ஒரு அபிப்ராயம்அத்வைதிகளுக்கிடையே எழுந்தது. அவர்கள் மாயை என்பது ஒன்றை இன்னொன்றாகக் காட்டும்மாஜிக்மாதிரியான சக்தி என்றும், அவித்யா என்பது ஸத்யத்தைத் தெரிந்துகொள்ளாதஅஞ்ஞான நிலை என்றும் ஒரு பாகுபாடு செய்கிறார்கள். ப்ரஹ்மம் மாயையோடு சேர்ந்துள்ளபோது ஈச்வரனாகிறது என்றும், அவித்யையில் கட்டுப்படும்போது ஜீவனாகிறது என்றும்அவர்கள் சொல்கிறார்கள். அது இருக்கட்டும்.) மாயா சக்தியோடு சேர்நது ப்ரஹ்மம் ஈச்வரனாயிருக்கிற போதும் அந்த ஈச்வரன் ஞான ஸ்வரூபியாகவே இருப்பதாக அத்வைதிகள்சொல்வதில் இன்னம் மேலேபோய் ஆசார்யாள் இங்கே அம்பாளை வித்யா என்றே சொல்கிறார். அம்பாளை ராஜ ராஜேச்வரியாக ஆராதனை செய்யும் உபாஸனைக்கே ஸ்ரீ வித்யைஎன்று பெயர் இருக்கிறது. அந்த ஆராதனையையும் ஆசார்யாள் யந்த்ர ப்ரதிஷ்டை, ‘ஸௌந்தர்யலஹரிஸ்தோத்ரம் முதலியவற்றால் போஷித்திருக்கிறார். மாயையாகவே இருக்கிறஅவளை மாயா நிவ்ருத்தியையே மோக்ஷமாகச் சொன்ன ஆசார்யாள் ஞானாம்பிகையான வித்யாவாகச் சொல்வதால் மாயையால் லோகத்தை நடத்தும் சக்திதான் அதிலிருந்துவிடுவிக்கவும் செய்கிறது என்று அவர் காட்டுவது தெரிகிறது.

மற்றவை அடுத்த பதிவில்

ஸ்ரீ மஹா பெரியவா சரணம்.  கணேச சரணம்.

Loading

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading