ஸ்ரீமஹாஸ்வாமி நவரத்தினமாலை by Saanuputhran

Another gem from Suresh.

Periyava Padham

ஞாலங் காக்கும் உமையாள் பதியோன்
ஞானக் குழந்தை வடிவா னழகன்
ஞாலம் உடைசால் தொந்தியன் அருளில்
ஞானக் குருவை போற்றிடு வோமே! (1)

“சந்திர சேகர குருவே சரணம்
சந்திர சேகர குருவே சரணம்
சந்திர சேகர குருவே சரணம்
சந்திர சேகர குருவே சரணம்”

பூக்கும் புலர் காலையில் தினமும்
நோக்கும் விழி யாலருளும் பதியாம்
வாக்கில் அறமும் உடைசால் குருவாய்
காக்கும் கருணா நிதியே சரணம்! (2)
“சந்திர சேகர குருவே சரணம்…”

தேறா தெதுவும் தேறித் தெளிய
தாரா வருமும் தந்தெமைக் காக்க
நாரா யணனாய் நரணெனக் கருளும்
பாதாம் புயமுடை பதியே சரணம்! (3)
“சந்திர சேகர குருவே சரணம்…”

மூவாப் பிணியும் வெகுண்ட துமோட
காணா தெதுவும் தீண்டா தருள
தீராத் துயரும் தீர்த்தருள் பெறவே
கோணா வாழ்வின் நிதியே சரணம்! (4)
“சந்திர சேகர குருவே சரணம்…”

சாடா வாழ்வில் நாணமும் பேதமும்
நாடா தருள்வாய் நலம்பல தருவாய்
கூடா நட்பின் குறையும் களைந்தே
வாடா வாழ்வருள் கதியே சரணம் ! (5)
“சந்திர சேகர குருவே சரணம்…”

சூரர் வினையும் சூழா தருளும்
தீரர் திருத்தாள் பணிந்தேத் துவமே
வீரத் தெழிலாய் வதனந் தருவாய்
வீழா வாழ்வருள் திருவே சரணம்! (6)
“சந்திர சேகர குருவே சரணம்…”

சூலம் கொண்டருள் சுந்தரி எந்தரி
தூலம் காத்திடும் தூயநற் சங்கரி
நாளும் எமைக்கத் தருளும் பதமும்
நல்கும் காஞ்சிநற் குருவே சரணம்! (7)
“சந்திர சேகர குருவே சரணம்…”

நேயம் கொண்டிட நெறிதந் தவராய்
காயம் திரித்தே தவமேற் பதியாய்
மாயம் எதுவென மதிதந் தருள்வாய்
தாயம் தந்தருட் தருவே சரணம்! (8)
“சந்திர சேகர குருவே சரணம்…”

காலம் எல்லாம் கதியாய் நின்னருட்
கோலம் மனதுள் தியானித் தனமே
நாளும் இனியாம் நல்லன கொண்டிட
தாளும் பணிந்தோம் சசி சேகரனே! (9)
“சந்திர சேகர குருவே சரணம்…”

புஷ்பங்களுக்கு மத்தியிலே ஓர் கனகபுஷ்பமாக ஐயனின் இத்தரிசனம் உங்கள் தர்மமான ப்ரார்த்தனையை ஏற்று பலிதம் அருளட்டும்.

குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.

பெரியவா கடாக்ஷம்

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்



Categories: Bookshelf

Tags:

11 replies

  1. இவ்வகையிலாகவே ஐயனின் அருளிலே “திருத்தண்ட விருத்தம்” எனும் பாமாலையும் சமர்ப்பிக்கும் பாக்கியம் கிடைத்ததும் தங்கள் யாவரின் ஆசிகளினாலும், ஸ்ரீசரணரின் கருணாகடாக்ஷத்திலும் தானே! எல்லோருக்கும் நமஸ்காரங்கள்.

  2. Sanuputhran’s Kavippaa, always, the Divinic version of MahaPerivaa’s sthulasukshma nod from the ultimate Guru. May MahaPerivaa continue to bless him for his continuance of such paa Malai for all of us to realise HIS blessings.

    • சங்கரா! நமஸ்கரித்து ஏற்கின்றேன் தங்கள் ஆசிகளை! சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம்.

  3. Hara Hara Shankara, Jaya Jaya Shankara! Navarathna Maalai usually will have the Nine Gems names incorporated in the stanzas. One offers to the Lord the Garland of Nava Manis as poems. Each stanza may be considered a Divinity oozing offering to Maha Periyava!

    • இங்கே நவரத்திணங்களின் பெயரைச் சொல்லாமல் ஸ்ரீசரணரின் அருளும் பதங்களையே நவ ரத்திணங்களாக பாவித்துள்ளேன் ஐயா!

      • அருமை! மஹா பெரியவா அருள் எப்போதும் தங்களுக்கு இருக்கும்! ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர! மஹா பெரியவா திருவடிகளே சரணம்!

  4. Jaya Jaya Sankara Hara Hara Sankara. Sri Maha Periyava Anugraham. Janakiraman. Nagapattinam

  5. சானு புத்ரன் இதற்கெனவே பூவுலகில் உதித்தவன்! அவர் ஸ்மரணையன்றி வேறெதுவும் அறியாதவன். நாவில் பெரியவா சரணம் என்ற கோஷமே ஸதா! நாவில் அவன் நாம ஜபம் மதுரஸமாகுமே என்ற பாடலுக்கு இலக்கணமாகத் திகழ்பவன்! சங்கரா சரணம்…

    • சத்தியம் பகர்கின்றேன் அம்மா. நம்மைச் சுற்றிய சூழ்நிநிலையே நம் குணத்துக்கும் பண்புகளுக்கும் காரணம் என்பர். அவ்வண்ணமாக உங்களைப் போன்றவர்களின் சத்சங்கமும் வழிகாட்டுதலுமே எல்லாவற்றுக்கும் காரணம். இப்படியாக வாழவைத்துவரும் ஸ்ரீசரணாளுக்கு ஆத்மார்த்தமாக நமஸ்கரிக்கின்றேன். பெரியவா சரணம்

  6. Arumai, arumai miha arumai.

Leave a Reply to HemalathaCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading