சரீர உழைப்பில்தான் ஆரம்பித்தாக வேண்டியிருக்கிறது. ஆனால் சரீரத்தோடு நின்றுவிடாமல் அந்த ஆரம்ப நாளிலிருந்தே ஈஸ்வரபரமான விஷயகங்ளிலும் ‘டச்’ வைத்துக் கொண்டேயாக வேண்டும். போகப் போக ‘டச்’ பண்ணினால் மட்டும் போதாது, ‘டச்’ பண்ணுவதை கையில் பிடித்து வைத்துக்கொள்ளவும் ப்ரயத்னப்பட வேண்டும். அத்யாத்ம ஸமாசாரங்களில் அதிகம் ஈடுபட வேண்டும். ஆனால் இப்போதும், இவன் ஆத்மாபிவிருத்தியில் உச்சாணிக் கொம்புக்கே போய்விட்டாலும் அப்போதுங்கூட, சரீரப் பணியில் இவன் ‘டச்’சை அடியோடு விட்டுவிடக் கூடாது. ஜீவன்முக்தன் என்று என்னவோ சொல்கிறார்களே, நமக்கெல்லாம் அப்படிப்பட்ட ஸ்திதி புரிவதுகூடக் கஷ்டமாயிருக்கிறதே, அந்த ஸ்திதி வந்து நமக்கென்று மனஸில்லை, எண்ணமில்லை, ‘ப்ளான்’ இல்லை என்று ஆகிறமட்டும், நாமாக உடற்தொண்டை அடியோடு விட்டோமென்று இருக்கவே கூடாது. அதனால்தான் பெரியோர்கள், “ஒரு கையால் ஈஸ்வரனைப் பிடித்துக்கொண்டே இன்னொரு கையால் லோக கார்யங்களைப் பண்ணு” என்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Physical labor is the foundation to build upon, but one should not confine oneself to this physical labor alone. One should also keep in touch with things related to Bhagawan. As days progress, one should mentally retain what he has touched upon and delve deeper into spiritual matters. But even when he reaches the height of spirituality, he should not lose touch with physical labor. It is difficult to even understand the state of “Jeevan Muktha” or the One who is liberated from Life. Till that state is obtained and we are left with no mind, no thought and no plans, we should not abandon physical labor. That is the reason our ancestors advised us to simulataneously work hard and devote oneself to God. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply