Periyava Golden Quotes-319

album1_106

நல்ல ஸத் விஷயங்களில் பிடிமானம், படிப்பு, பயிற்சி, பக்தி, பூஜை, த்யானம் உள்ளவர்களைத் தவிர மற்ற பெரும்பாலாரின் மனஸு கெட்டதுகளில் போகாமல் தடுப்பதற்குச் சரீர உழைப்புதான் ஸாதனமாகிறது. நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஏதோ எழுதுகிறோம், யோசனை பண்ணுகிறோமென்றால் அப்போதும் மனஸ் அது பாட்டுக்கு அவ்வப்போது இதை விட்டுவிட்டு ஓடிக் கொண்டுதானிருக்கும். அதுவே சரீரத்தால் கார்யம் செய்கிறோமென்றால் அப்போது அப்படிப்பட்ட கார்யத்திலேயே மனஸ் அதிகம் ஈடுபட்டுவிடுகிறது. அதனால் கண்ட கண்ட நினைப்புகளுக்கு ஓடாமலிருக்கிறது. அதாவது சரீர உழைப்பால் சித்தம் கெட்டதில் போகவில்லையே தவிர, நல்லதில் ஈடுபட்டு உத்தம அநுபவங்களைப் ‘பாஸிடிவ்’-ஆகப் பெறவில்லைதான். ஆனால் முதலில் இந்த நெகடிவ் ஸ்டெப்பில் அடி வைத்துத் தான் பாஸிடிக்குப் போயாகவேண்டியிருக்கிறது. ஆசார்யாள் அதனால்தான் முதலில் கர்மாநுஷ்டானம், அப்புறம் இதனால் ஏற்படும் சித்தசுத்தியினால் மனஸ் உத்தமமாகவே போகிற பக்தி, அதற்கப்புறம் மனஸே போய்விடுகிற ஞானம் என்று படிவரிசை போட்டுக் கொடுத்தார். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்


Physical labor is the only way to prevent the mind from going astray in the case of those who are not naturally inclined towards devotion, meditation and related good things. When we are confined to a chair doing our work, the mind will have a tendency to wander after unwanted things. On the other hand, while practising hard physical labor, the mind is concentrated only on the labor and there is very small scope for it to be led astray. Of course, there may not be a positive effect of divine experiences, but at least the mind is not subject to unwanted thoughts. This negative step leads to a positive step. Aware of this progression, Sri Adi Shankara Bhagawath Paada delineated the sequence of steps – strict adherence to duty (anusthanams) led to cleansing of the mind and this in turn led to Bhakthi or devotion which sublimates the mind and eventually the mind itself gets negated as enlightenment dawns. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

2 replies

  1. Sorry. ‘H’ is missing in anushtanam. Thank you

  2. Namakarams to Mahan periyava. What he said is 100% correct. The farmers, weavers and other manual work persons are more honest and do not indulge in bad activities because their mind is involved immersed in their work and no time to think bad things They maintain good health, good appetite, good sleep which white collar job takes away.
    Lax man.

Leave a Reply

%d bloggers like this: