Periyava Golden Quotes-312


album1_17

ரிடையரானவர்கள் தங்களை மட்கப் பண்ணிக் கொண்டு உட்காராமல், கிளுகிளுவென்று கல்பக வ்ருக்ஷங்களாகி, ஸமூஹத்துக்கு நிழலும் பழமும் கொடுத்து ஆதரிக்க முடியும், ஆதரிக்க வேண்டும் என்று சொல்ல வந்தேன். ஒரு ரிடையர்ட் என்ஜீனியர் இரண்டு பையன்களுக்கு ஓவர்ஸீயர் படிப்புக்கு ஸமமாக வீட்டிலேயே (முடிந்தால் அன்னமும் போட்டு) படிக்கக் கற்றுக் கொடுத்தால், அவர்கள் டிக்ரி வாங்க வேண்டுமென்பதுகூட இல்லை; இன்ன பெரியவரிடம் படித்தார்கள் என்பதாலேயே அவருடைய ஸர்டிஃபிகேட்டைப் பார்த்தே, ப்ரைவேட் கான்ட்ராக்டர்கள் அவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். என்ஜீனியரீங் காலேஜில் தனக்கு இடம் கிடைக்கவில்லையே என்று Forward Community மாணவன் அழ இடமிருக்காது. இப்போது ஸங்கீதத்தில் ஒருத்தனின் டிக்ரியையோ டிப்ளோமாவையோ பார்க்காமல், இன்னார் சிஷ்யன் என்றுதானே கச்சேரிக்கு ஸபாக்காரர்கள் கூப்பிடுகிறார்கள்? அப்படியே Forward Community-ஐச் சேர்ந்த வாலிபர்கள் மற்றத் துறைகளிலும் காலேஜ் படிப்பை எதிர்பார்க்காமல் இன்னாருடைய சிக்ஷையில் கற்றுக்கொண்டான் என்பதாலேயே ப்ரைவேட் ஃபாக்டரிகள், கம்பெனிகள் ஆகியவற்றில் உத்யோகம் பெறக்கூடிய மஹா உபகாரம் நன்மதிப்பு பெற்ற அநுபவஸ்தர்களான பென்ஷனர்கள் ஒன்றுகூடி வித்யாதானம் செய்வதால் ஏற்படும். இப்போது ஸீ.ஏ., அந்த ‘டெக்’, இந்த ‘டெக்’ என்று எத்தனை படிப்புகள் தனியார் ஸ்தாபனங்களால் நடத்தப்பட்ட போதிலும் யூனிவர்ஸிடி டிக்ரிகளைவிட உசத்தியாக ஸர்க்கார் உள்பட எல்லாராலும் நினைக்கப்படுகின்றன? அம்மாதிரி இதுவும் வ்ருத்தியாக முடியும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Retired persons should not allow themselves to get rusted but provide service to the society like the ever munificent Kalapaka Vruksha. If a retired engineer is able to train two students at his house for the post of overseer (simultaneously providing them with food), it is not even necessary that they should get a formal degree. The fact that they have been trained under that particular engineer  will induce private contractors to employ these students on the basis of the certificate provided by the engineer. The student belonging to forward community need not get depressed because he has not got a seat in the engineering college. In the field of music, it is not the formal degree that counts, but the training that a student has obtained from a reputed musician.  This principle can be applied in many subjects and students belonging to forward communities can get employment in many a private factory or company. This can be made possible by the efforts of qualified, valued pensioners. There are so many courses conducted by private organizations which are valued by the Government. This practice can also gain such a recognition in due course. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. Jaya Jaya Sankara hara Hara Sankara. what an excellent piece of advice for those who were not able to join engineering collage.HIS DIVINE GRACE WILL DEFINITELY GUIDE THOSE PEOPLE AND SHOW THE WAY TO PROSPERITY. Pranams to Sri Maha Periyava.Janakiraman. Nagapattinam.

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: