Periyava Golden Quotes-303

album1_25

ஓரளவு வயஸான பிற்பாடாவது விவேக வைராக்யாதிகளைப் பழக வேண்டாமா? கொஞ்சமாவது வானப்ரஸ்தாச்ரமிகளைப் போல, வீட்டுப் பொறுப்புக்களை அடுத்த தலைமுறைக்கு விட்டு விட்டுத் தங்கள் தங்கள் ஆத்மாவை கவனித்துக் கொள்ள வோண்டும். உத்யோக காலம் முடிந்த பின் சொந்த பிஸினஸ் பண்ணலாமா, ஃபாக்டரி வைக்கலாமா, ஃபார்ம் வைக்கலாமா, எக்ஸ்டென்ஷனுக்கு ‘ட்ரை’ பண்ணலாமா என்று தவித்துக் கொண்டிருக்காமல், தன்னைக் கடைத்தேற்றிக் கொள்வதற்கான வழிகளைத் தேட வேண்டும். ஸ்வயோபகாரமில்லாமல் பரோபகாரமில்லை என்றேனே! அதனால், இதற்கு முன்னால் தெரிந்து கொண்டு, அவற்றின்படி இதுவரை பண்ணாத அநுஷ்டானங்களை இப்போதாவது பண்ண ஆரம்பிக்க வேண்டும். இதெல்லாம் பண்ணினாலும் உச்சிப்பொழுதுக்கு அப்புறம் நிறைய அவகாசம் இருக்கும். அதில் பரோபகாரங்கள் பண்ண வேண்டும்.

இருக்கிற ஓய்வை நன்றாகப் பிரயோஜனப்படுத்திக்கொண்டு ஸத் விஷயங்களைத் தாங்கள் படித்தும் கேட்டும் தெரிந்து கொள்வதோடு மற்றவர்களுக்கும் அவற்றை எடுத்துச் சொல்வது பெரிய உபகாரம்.

அது தவிர நீங்கள் எந்தத் தொழில் செய்தீர்களோ, அதை நாலு ஏழை இளைஞருக்கு ஃப்ரீயாகச் சொல்லிக் கொடுத்து அந்த உத்யோகத்துக்கான பரீக்ஷைகளுக்கு அவர்கள் போகிறதற்கு உதவி செய்யுங்கள். கொஞ்சம் வசதியாகப் பென்ஷன் வாங்குகிறவர்களாயிருந்தால் இப்படி வித்யாதானம் செய்வது மாத்திரமில்லாமல் அவர்களில் ஓரிரண்டு பேருக்காவது அன்னதானமும் சேர்த்துப் பண்ணுங்கள். சொந்தக் குடும்பத்துக்கு சொத்துச் சேர்த்து வைத்தால் மட்டும் போதாது. வெளி மநுஷ்யாள் இரண்டு பேர் வயிறும் குளிரப் பண்ணுங்கள். இப்படி ஆதரவில்லாதவர்களுக்கு அன்னம் போட்டு ஆதரிக்க ஆரம்பித்து விட்டால் ஸமூஹத்திலேயே திருட்டு, புரட்டு எவ்வளவோ குறையும். இல்லாமையால்தான் (வசதியிருக்கிறவர்களுக்கு மனமில்லாமையாலுந்தான்!) அநேகர் ஏமாற்றுக்காரர்களாகவும் திருடர்களாகவும் ஆகிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

At least after a certain age, one should develop certain maturity and detachment. Like Vaanaprasthaas, you should hand over your responsibilities to the next generation and take care of your spiritual welfare. After the period of employment is over, one should not  hanker after re-employment or setting up one’s own business, farm, or factory and instead search for means to elevate one’s own self. Helping one self is part of helping others, as I had stressed aearlier. So one should practice all those rituals and conduct the life as prescribed by shaastraas. Even after doing so, there will be a lot of free time after noon and this can be used in serving the others.

The available leisure should be productively utilized in learning about valuable ethics and also teaching them to others. Apart from this, you can train the youth in whatever profession you were practicing before retirement and help them in writing the exams for the same. If you are earning a comfortable pension, you cannot only give them free education but also provide free food to a few. It is not enough if you gather wealth for your family. You should also help the needy. If the hungry are thus fed, crimes will be reduced in the society. It is want and the lack of the will to act among the wealthy that leads many to the path of crime and fraud.  – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi SwamigalCategories: Deivathin Kural, Golden Quotes

Tags:

3 replies

  1. Jaya Jaya Shankara

  2. Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  3. Jaya Jaya Sankara Hara Hara Sankara.”Parobahartham eitham sariram”The above quote has been emphasized by our great Sri Paramacharya. These are not for reading but to put it in practice with a firm determination. Janakiraman. Nagapattinam.

Leave a Reply

%d bloggers like this: