அநேக பரோபகாரப் பணிகளுக்குப் பணம் வேண்டும், உழைப்பு வேண்டும். அதோடு மத ஸம்பந்தமான விஷயம் தெரிந்தவர்கள் வேண்டும். அவர்கள் தங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பஜனை பண்ணத் தெரிந்தவர்கள் மற்றவர்களையும் கூட்டி, பகவந் நாமாவைப் பாடப் பண்ண வேண்டும். இப்போது ஊருக்கு ஊர், பேட்டைக்குப் பேட்டை பஜனை கோஷ்டி இருக்கிறது. இந்த கோஷ்டிக்காரர்களே வார வழிபாட்டையும் மற்ற பரோபகார கார்யங்களையும் எடுத்த நடத்த வேண்டும். ச்ரத்தையாக உழைக்க கூடியவர்கள், பணவிஷயத்தில் நாணயமாக இருக்கக் கூடியவர்கள், ‘இவர்கள் சுத்தமானவர்கள்’ என்று ஸமூஹத்துக்கு நம்பகமாக இருக்கிறவர்கள் ஒரு பத்து பேர் அங்கங்கே சேர்ந்து விட்டால் போதும். ஊர் உலகத்தில் ஒரு குறைவில்லாமல் பொதுநலக் கார்யங்கள் ஜாம் ஜாம் என்று நடந்துவிடும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Many philanthropic efforts need finance and labor. Experts on religion who can guide the others are also needed. Singers who can perform Bhajans, should involve the others also in singing the divine names of Bhagawan. Nowadays, many areas have exclusive bhajan groups of their own. These groups can also undertake the responsibility of weekly worship and acts of philanthropy. If hard working honest people who have earned the confidence of the society about their straightforwardness come together, many social welfare schemes will be successfully implemented in this society. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply