Periyava Golden Quotes-292

album1_Untitled-1142

“வாரத்தில் ஒரு நாள் கூட்டு வழிபாடு, வாரத்தில் ஒரு நாள் பொதுப்பணி என்றால் எப்படி முடியும்? ஒரு நாள் தானே ‘லீவ்’ இருக்கிறது?” என்று கேட்பீர்கள். அந்த ஒரு நாளிலேயேதான் இரண்டையும் சேர்த்துச் செய்யச் சொல்கிறேன். தெய்வப்பணி, ஸமூஹப்பணி இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து ஞாயிற்றுக்கிழமை தோறும் செய்ய வேண்டும். முதலில் கோவில் வாசலில் எல்லா ஜனங்களும் சேர்ந்து வழிபட்டு, அத்தனை பேரும் அந்த ஒரே பராசக்தியின் குழந்தைகளாகச் சேர்ந்து பகவந் நாமத்துடனயே கோவிலைப் பிரதக்ஷிணம் பண்ணிக் கொண்டு போய்க் குளம் வெட்டுவதையோ, ரோடு போடுவதையோ, நந்தவனம் வளர்ப்பதையோ செய்ய வேண்டும். வேலையெல்லாம் முடிந்த பின்னும் கோவிலுக்கே திரும்பி வந்து, ”உன் க்ருபையால் இன்றைக்கு கொஞ்சம் பாபத்தைக் கழுவிக் கொள்ள முடிந்தது; சரீரம் எடுத்ததற்குப் பயனாக ஓர் உபகாரம் பண்ண முடிந்தது” என்று நமஸ்காரம் செய்ய வேண்டும். கொஞ்சம் பஜனை – ஒரு பத்து நிமிஷம் இருந்தால் கூடப் போதும் – கொஞ்சம் உபந்யாஸம் நடத்தி விட்டு எல்லாரும் கலைய வேண்டும். அறுபத்திமூவர் அல்லது ஆழ்வாராதிகள் அல்லது பக்த விஜயத்தில் வரும் மஹான்கள் இவர்களைப் பற்றிய உபந்யாஸமாக இருந்தால், நம் மாதிரி மனிதர்களாக இருந்தவர்களே எப்படியெல்லாம் த்யாகத்தாலும், ப்ரேமையாலும் தெய்வமாக உயர்ந்திருக்கிறார்கள் என்று மனஸில் ஆழப் பதியும்.  – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

You may ask how it is  possible to conduct prayer session and social work at least one day of the week-after all there is only one holiday every week, the Sunday. Both these duties can be performed on the same day. On a Sunday morning, everyone can gather outside a temple and offer prayers to Bhagawan. Then, considering themselves as children of the Mother Goddess Parasakthi, everybody should do pradhakshinam round the temple (circumambulate), chanting the name of Bhagawan. Then, social work like digging of a pond, constructing a road or developing a temple garden can be carried out. At the end of the day, everybody should again gather at the temple and express their gratitude to Bhagawan for having given this opportunity to do social service, thereby giving a a purpose to this human birth and enabling one to mitigate some of the sins. Singing of Bhajans or devotional songs can be there for even a short period of ten minutes. There can also be a short discourse before everybody disperses. If this discourse can be based on the lives of Saivite or Vaishnavite saints and the great souls who are written about in Maha Bhaktha Vijayam, then the fact that humans can also sublimate themselves through love and sacrifice will be deeply ingrained in the minds of people. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: