28. Gems from Deivathin Kural-Karma Margam-Karma Yogam

krishna_periyava

Jaya Jaya Sankara Hara Hara Sankara – The final chaper of Karma Margam section. Sri Periyava (as told in previous chapters) again re-iterates that Sastras should be the guiding principles for doing our Karmas and not based on one’s whims and fancies. Removal of ego is also a key point that has been emphasized.

Thanks to our sathsang seva volunteer for the translation. Ram Ram.

கர்ம யோகம்

யுத்தம் செய்து பந்துக்களையும் மித்திரர்களையும் கொல்வது பாபமல்லவா என்பது அர்ஜுனனின் கேள்வி. நமக்கும் அர்ஜுனன் கேட்பது நியாயம் போலத்தான் தோன்றுகிறது. ஆனால் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பகவத்கீதையிலே இதற்கு வேறு விதமாக விடை தந்திருக்கிறார். உலகத்தின் பார்வைக்கு ஒரு காரியம் கெட்டதாக, கொடுமையாகத் தோன்றலாம். ஆனால், அதனால் மட்டும் அது பாபமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. உலகத்தின் க்ஷேமத்துக்காகவே கொடுமைகளைக்கூடச் செய்ய வேண்டி நேரலாம். அப்போது அதில் பாவமில்லை. இதுதான் பகவான் தருகிற பதில். அப்படியானால் எது பாபகாரியம்; எது புண்ணிய காரியம்? இதற்கும் பகவான் பதில் சொல்கிறார். ஆசையினாலோ, துவேஷத்தினாலோ செய்கிற காரியங்கள்தான் ஒருத்தனைப் பாபத்தில் தள்ளுகின்றன. ஆசையும் துவேஷமும் இல்லாமல் லோக க்ஷேமமாகச் செய்கிற காரியங்கள் எத்தனை கொடுமையாகத் தோன்றினாலும் அதெல்லாம் புண்ணியமானவைதான். இதுதான் கீதை தருகிற பதில்.

ஆசையும், துவேஷமும் இல்லாமல்கூடக் கொடிய காரியம் செய்யப்படுமா என்று சந்தேகம் வரலாம். திருஷ்டாந்தம் சொல்கிறேன்; ஒரு ஜட்ஜ் குற்றவாளியைச் சிக்ஷிக்கிறபோது அவருக்கு சொந்த ஆசையோ துவேஷமோ இருக்கிறதா? சிக்ஷை தருவது கொடுமையாகத் தோன்றலாம். ஆனால்? அதுவே லோக க்ஷேமத்துக்காக, அந்த குற்றவாளியின் ஆத்ம க்ஷேமத்துக்காகவும்கூட விதிக்கப்படுகிறது. நம் பிள்ளைக்கே பைத்தியம் முற்றிப் போனால் சங்கிலி போட்டுக் கட்டிப் போடுகிறோமே. இது பாபமாகுமா? அவனுடைய நன்மைக்காகவும், அவனால் ஊராருக்குக் கஷ்டம் வரக்கூடாது என்ற பரோபகார எண்ணத்திலும் இப்படிக் கட்டிப் போடுகிறோம்.

சாஸ்திரங்கள் நம்மையெல்லாம் இப்படித்தான், ‘இது இதைச் செய்’ என்கிற விதிகளாலும், ‘இது இதைச் செய்யாதே’ என்ற நிஷேதங்களாலும் கட்டிப் போட்டிருக்கின்றன. அவற்றால் நமக்கும் நன்மையே; லோகத்துக்கும் நன்மையே. அந்த சாஸ்திரப் பிரகாரமே நாம் காரியம் செய்ய வேண்டும் என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் அடித்துச் சொல்கிறார். “தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யா கார்ய வ்யவஸ்தி தௌ” என்கிறார். “எது செய்யத் தக்கது; எது செய்யத் தகாதது என்று நிச்சயிப்பதில் சாஸ்திரமே உனக்கு பிரமாணம்” என்று அழுத்தமாகச் சொல்கிறார். அவனவன் தன் மனம் போனபடி முடிவு பண்ணாமல், சாஸ்திரப்படியே கர்மம் செய்ய வேண்டும் என்கிறார்.

இப்போது கீதைக்கு லோகம் முழுவதும் மவுசாக இருக்கிறது. நம் சாஸ்திரங்கள் சொல்கிற ஆச்சார அநுஷ்டானங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள், ஆராய்ச்சிக்காரர்கள், வெள்ளைக்காரர்கள் எல்லோரும் கீதையைப் பிரமாதமாகச் சொல்கிறார்கள். கீதையில் ஸ்வதர்மப்படி அவனவனும் நடக்க வேண்டும் என்று சொல்லியிருப்பதற்கு இவர்கள் பல விதத்தில் அர்த்தம் சொல்கிறார்கள். ஆனால் அந்த கீதையிலேயே மேலே நான் காட்டிய வாக்கியத்தில் அவனவனும் சாஸ்திரப் பிரகாரம் தனக்கு விதிக்கப்பட்ட கருமத்தையே செய்ய வேண்டும் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்லியிருக்கிறது.

சொந்த ஆசை, துவேஷம் இல்லாதபோது எவனுக்கும் எந்தக் காரியம் செய்வதிலும் வெறுப்பு இராது. ஆசையும் துவேஷமும் போய்விட்டால், எந்தக் காரியத்தையும் அன்போடு செய்து கொண்டு ஆனந்தமாக இருக்க முடியும்.

ஆசைக்கும் துவேஷத்துக்கும் காரணம் அகங்காரம். அகங்காரம் தொலைந்தால் எந்தக் காரியங்களுக்கிடையிலும் உயர்வு தாழ்வு தெரியாது. நாம் பாட்டுக்கு நம் கடமை இது என்ற உணர்ச்சியோடு ஆனந்தமாகச் செய்து கொண்டிருப்போம். லோகம் க்ஷேமமாக இருக்கும். ‘நான் செய்கிறேன்; எனக்காகச் செய்து கொள்கிறேன்’ என்கிற அகம்பாவம் இல்லாமல் கடமையைச் செய்து, பலனை ஈசுவரனுடைய பாதத்தில் அர்ப்பணம் பண்ணுவதுதான் கீதை சொல்கிற கர்மயோகம். சொந்த விருப்பு வெறுப்பில்லாமல், லோக க்ஷேமார்த்தமாகக் காரியம் செய்து ஆத்ம பரிசுத்தி பெறுகிற இந்தப் பண்பாடு, வேத காலம் தொட்டு நம் தேசத்தில் தழைத்து வந்திருக்கிறது. அந்தப் பண்பாட்டை ஒரு கையடக்கமான பேழையில் போட்டுக் கொடுத்த மாதிரி கீதையில் அநுக்கிரகம் செய்திருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.

இந்த உபதேசத்தை நம் வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்திலும் உரைத்து உரைத்து அலசிப் பார்க்க வேண்டும். “இந்தக் காரியத்தில் சொந்த லாபம், பேர், புகழ் இருக்கிறதா? ஆசையிருக்கிறதா? துவேஷம் இருக்கிறதா? பட்ச பாதம் இருக்கிறதா? இவை இருந்தால் வெளிப்பார்வைக்கு நாம் செய்வது எத்தனை உயர்வாக இருந்தாலும் அது பாபம்தான்” என்று நாம் செய்கிற ஒவ்வொரு செயலையும் அலசி அலசிப் பார்க்க வேண்டும். நமக்கு என்று நாமாக ஆசைப்பட்டு ஒரு காரியத்தை உண்டாக்கிக் கொண்டால் அதைச் சாதித்துக் கொள்வதில் அநேக தப்பிதங்கள் வந்து கொண்டேதான் இருக்கும். அதனால் அவரவருக்கும் சாஸ்திரம் வைத்திருப்பதே காரியம் என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா சொன்னாற்போல் அதையே பிரமாணமாக வைத்துக் கொள்ள வேண்டும். சமமான அன்புடன் இருந்து கொண்டு, சுத்தமான எண்ணத்தோடு அவரவரும் அப்படித் தன் கருமத்தைச் செய்தால், சமூகத்தில் போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவு எதுவுமே இருக்காது. லோகமே இன்பமயமாக இருக்கும்.

Karma Yogam

Arjuna raises a question (in the Bhagavad Gita) whether it is proper to kill relatives and friends in war. We too are of the opinion that Arjuna’s view is justified. Sri Krishna has given an entirely new perspective in his answer to this question. An action carried out may appear to be wrong or even cruel in the eyes of the world. Even then, the action need not be categorized as a sin. Sometimes, cruel acts may have to be committed for the welfare of others. In such cases, committing such an act does not incur sin. This is the answer given by Sri Krishna. If such is the case, what is a virtuous act and what is a sinful act? Actions driven by desire or hatred are considered sinful. Actions carried out without any desire or hatred (in the mind of the doer), done for the welfare of others, should be considered virtuous even if they appear cruel. This is the response of the ‘Gita’.

A doubt may arise (in your minds) whether a cruel act can be committed without being influenced by desire or hatred. Let me illustrate with an example. Is a Judge influenced by desire or hatred when he grants punishment to a criminal? Sentencing a criminal (to a jail term) may appear to be a cruel act. But it is done keeping the welfare of the society in mind and that of the criminal too. If our own child were to lose his senility, we may choose to keep him bound. Would that be considered a sin? We do it keeping his welfare in mind and also because others in the community should not face a problem because of him.

Similarly, Sastras have bound us with rules and regulations on what is to be done or not done. These rules are for our own good and for the welfare of others. In the ‘Gita’, Sri Krishna forcefully emphasizes that we should carry out our duties only in accordance with the Sastras.

“Tasmaat sastram pramaanam thae karyaa karya vyavasthithou” (16: 24)

He declares ‘The Sastras are the basis for a person to decide what tasks he should or should not do’. He asserts that each person should do his karmas as laid down in the sastras and not modify them as per his likes and dislikes.

Nowadays the ‘Gita’ is in great demand across the world. Researchers, Westerners, even people who do not believe in the rites and rituals prescribed by our Sastras, speak highly of the ‘Gita’. Sri Krishna’s assertion, ‘each person should follow his dharma’, is interpreted by them in many different ways. As mentioned earlier, the ‘Gita’ unequivocally emphasizes that each person should perform his duties only as laid down in the Sastras.

When a duty is performed without desire or dislike, the person will not loathe doing it. If one can get rid of desire and dislike, each and every task can be accomplished with affection and the doer can forever remain happy.

One’s ego is the root cause for desire and anger. If we can overcome our ego, we will not discriminate any task as lofty or low. We will consider them our duty and carry them out happily. The world will also stand to gain. Doing the assigned duties without the thought ‘I am doing it; This is being done for my sake’ and offering the results at the feet of Eswara, is the karma yoga as expounded in the ‘Gita. This tradition of selfless service, without ego, has been in vogue in our country since the vedic times. The same tradition has been given to us in a nutshell by Sri Krishna in the ‘Gita’.

Each and every task taken up by us should be critically analyzed by asking the following questions: “Is there any attempt for self gain, name or fame through this task? Is there any personal desire or dislike? Am I being partial? If so, however noble this task may appear to the outside world, it is in reality a sin”. This analysis should be taken up repeatedly for each task. If we desire to do a chore and take it up, there may be many mistakes in carrying it out. To avoid this, each of us should take up actions only as laid down by the sastras, in keeping with Sri Krishna’s words. If each of us were to do our duty with a pure heart and love towards all, there would be no unwanted competition, dislike amongst people or fights in the society. The world would be a happy place.



Categories: Deivathin Kural

Tags:

1 reply

Leave a Reply

%d bloggers like this: