Periyava Golden Quotes-286

With a cow

ஹிந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஒவ்வொரு நாளும் ஒரு பசுக்காவது ஒரு பிடி புல் கொடுக்க வேண்டும்; தோட்டம் உள்ள எல்லோரும் அதில் கொஞ்சமாவது மாட்டுக்கேற்ற அகத்திக்கீரை போடவேண்டும் என்றெல்லாம் ஏற்பாடு செய்து அதன்படியே ரொம்பப் பேர் நடத்தி வந்தார்கள். மாட்டுக்கு ஒரு பிடி என்பதை ”கோ க்ராஸம்” என்று சொல்லியிருக்கிறது. இதிலிருந்துதான் இங்கிலீஷில் புல்லுக்கு ”க்ராஸ்” என்று பேர் வந்ததோ என்னவோ? மேய்ச்சல் நிலமெல்லாம் குடியமைப்பாயும், தார் ரோடாயும் மாறி வருவதால் நம் கொல்லையிலேயே துண்டு இடமிருந்தால் அதில் ஆத்தி, அறுகு வைத்துக் கால்நடைகளுக்குக் கொடுக்க வேண்டும். நம் அகத்தில் கறிகாய் முதலியவற்றை நறுக்கும் போது தோலை வீணாகத்தானே போடுகிறோம்? அப்படிப் போடாமல், சிலர் வீடுவீடாகப் போய் இந்தத் தோலை எல்லாம் ‘கலெக்ட்’ பண்ணி மாடுகளுக்குப் போட ஏற்பாடு பண்ணினோம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

In the olden days, every Hindu would feed a handful of grass to at least one cow per day and persons with the benefit of a garden will cultivate Agathikirai, that form of greens so much liked by cows. That handful of grass for a cow, used to be called “Go graasam”. May be this is the etymological source for the English word “Grass’. When all meadows are getting converted into housing colonies and roads, we should cultivate agathikeerai and arugu (a form of grass), even if we have a small piece of land in our backyard, and feed the cows. We waste the peelings when we cut the vegetables in our homes. Instead of doing this, we had even arranged people to go door to door and collect these peelings and feed the cows. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

Loading

One Response

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading