நம் மதத்தையே தொண்டால்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஹிந்துமதம் வேலி இல்லாத தர்காஸ்து நிலம் மாதிரிக் கிடக்கிறது. இந்த நிலைமை மாறி இந்த மதத்தைக் கவனிக்க மநுஷ்யர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை உண்டு பண்ண வேண்டும். ஸ்வய மரியாதையுடன் நம் மதத்தில் இருக்கலாம் என்று ஸகல வகுப்பினருக்கும் நம்பிக்கையை உண்டு பண்ணுவது எல்லோரும் ஸங்கமாகக் கூடிச் செய்கிற பொதுத்தொண்டு தான். இப்படி ஸகல ஹிந்துக்களும் சேர்ந்து கொண்டு, செய்வதே நம் மதத்துக்கு வேலியாகி, இது ‘தர்காஸ்து’ நிலமில்லை என்று ஆக்கும். ‘நம்முடைய சொந்த மதம்’ என்ற அபிமானம் எல்லா வகுப்பாருக்கும் உண்டாகி விடுமாதலால் வேறு யார் வேண்டுமானாலும் இதிலிருக்கிறவர்களை ஸ்வாதீனம் பண்ணிக் கொள்ளலாம் என்ற நிலைமை போகும். மதமாற்றம் ஏற்படாமல் ஹிந்துக்களின் நிலைமையை மாற்ற நாம் எதிர் பிரசாரம் பண்ணிச் சண்டை உண்டாக்க வேண்டியதில்லை. நம்முடைய அசட்டையும், கடினமும் போய் நாம் மனமாற்றம் அடைந்து நம் ஜனங்களையெல்லாம் பரோபகாரத்தில் அணைத்துக் கொண்டாலே மதமாற்றம் நின்று போய்விடும். இதுதான் ஹிந்து ஸமூஹத்தை ஹிந்து ஸமூஹமாகவே வைத்துக் காப்பாற்றுவதற்கு சாந்தமான வழி. மதத்துக்காக ulterior motive-ஓடு (உள் நோக்கத்தோடு) நாம் பரோபகாரம் பண்ணாமல் அன்பின் நிறைவுக்காகவே பண்ணி, side by side மதத்தையும் ரக்ஷிக்க வேண்டும், .-ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Our Hindu religion should be taken care of only through Philanthropy. Now this religion is like a land without fences, anybody can encroach upon it. This situation should change and people should get a confidence that there are responsible persons available to cherish this religion. Only social service can infuse a feeling among all creeds of people that they can remain within the Hindu religion and retain their self respect. When all Hindus come together for a social cause, everybody will develop a feeling of attachment towards this religion and it will form a fence around it. Religious conversions will be on the wane. We need not do counter-preaching to stop religious conversions. Our hardness and carelessness should be given up and we should embrace all the people in the act of philanthropy. This is the most peaceful means to retain the uniqueness of the Hindu society. Our philanthropy should not be stained by the ulterior motive of religion but should be impelled by the thought of Universal love and we should protect the Hindu religion simultaneously. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply