கண்ணைத் திறந்து பல தினுஸாகக் கஷ்டப்படுபவர்களையும் பார்த்து நம்மாலானவரையில் அதை நிவ்ருத்தி பண்ண வேண்டும். அது மட்டும் போதாது. அவர்களும் தங்கள் கண்ணைத் திறந்து கொண்டு, இத்தனை கஷ்ட நிவ்ருத்திக்கும் எவன்தான் மூலகாரணமோ, எவனுடைய கருவி மாத்திரமாகவேதான் நாம் தொண்டு செய்வதல்லாமோ – அவனைப் பார்த்து, இந்தக் கஷ்டம் ஸுகம் எல்லாவற்றையும்விடப் பெரிசு அவனை அடைவதுதான் என்று உணரும்படியாகப் பண்ண வேண்டியதே நம்முடைய தலையாய பணி. –ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
We should understand the sufferings of others and strive to mitigate them. But that is not enough. We should make them realize that ultimately what is important is to reach the feet of the Divine, the Supreme power whose mere instruments we are and who alone can alleviate their sufferings in this world. Instilling this spiritual awareness in people must be the most important service we do. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
திரு சாணு புத்ரன் அண்ணா அவர்களின் பாடல் வரிகளுக்கு என் வாழ்வில் நடந்ததை சொல்கிறேன்!
1 தேவதேவ தேவனாய் தேம்புமாந்தர் தாயுமாய் – (உண்மை )
22-05- 2016 ஞாயிறு அன்று எம் ஸ்ரீ சரணாளின் 123 வது ஜெயந்தி! அபிஷேக
ஆராதனைகள் உலகம் முழுவதும் செய்தார்கள்! ஆனால்
என்னால் எதிலும் நேரில் கலந்து கொள்ள முடியலை!
தினம் நம் குருவிடம் ’’உமக்கு செய்த அபிஷேக ஆராதனை
களை நேரில் பார்க்க எனக்கு குடுப்பினை இல்லையே ஸ்ரீ
சரணாளே’ என வருத்தப்பட்டு கண்ணீர் மல்க கேட்பேன்!
2 பாபதாப நீச்சமும் நீக்கும்யோக நாதனாய் இதுவும் உண்மை
சரியாக 29 நாள் கழித்து 19- 06 – 2016 -ல் என் தம்பியிடம் இருந்து போன் வந்தது !
’மதுரையில Bharathi yuva kendra வுலேந்து போன் பண்ணினா!இன்னிக்கு’’ சிவக்குமாருக்கு 10த்ல
ஸ்டேட் பர்ஸ்ட் எடுத்ததுக்கு ஹானர் பண்ணனும்’’னுவரச் சொல்லி இருக்கா! எனக்கு உடம்பு சரி
இல்லை !நீ வேணும்னா அவனை அழைச்சிண்டு போயிட்டு வரியா’’ன்னு கேட்டான்!சரின்னு
சொல்லிட்டு சிவக்குமாரை அழைச்சிண்டு போனேன்! அங்கு போன பிறகுதான் தெரியும் அன்னிக்கு
பெரியவாளுக்கு அனுஷத்தை முன்னிட்டு அபிஷேக ஆராதனை பண்ணி எழுத்தாளர் “இந்த்ரா
செளந்த்ர ராஜன்’ அவர்கள் கையால ஷீல்டும் , ஸ்படிக மாலையும் கொடுக்கப்போறான்னு. எப்பேர்
பட்ட பாக்யம் ! முதலில் நாங்கள் கண்டது எம் ஐயனின் பாதுகைகளை ! பின் நெல்லை பாலா என்பவர்
ஐம்பொன் விக்ரகமாய் எம் ஸ்ரீ சரணரை எடுத்து வந்தார். ஆகா ! அப்ஷேகம் செய்ய செய்ய எம் உடம்பு
புல் அரித்து சிலிர்த்தது!என் பாபத்தினால் என்னை 29 நாள் காக்க வைத்தார்! ஆனால் தாபமுடன் என்
கண்ணில் வழிந்த கண்ணீரை ஒரு தாய் போல் துடைத்து என் பாபத்தை நீக்கி யோகநாதனாய் காட்சி
தந்தார்!
3 காஞ்சிமேவு யோகியாம் சந்த்ரசேக ரத்தினை – (ஆம்)
கண்டேனே! கண்டேனே! கண்ணாரக் கண்டேனே!
ஸ்ரீ காஞ்சி மாமுனியின் ஐம்பொன் விக்ரகத்தை!
நின்றேனே! நின்றேனே! நெக்குருகி நின்றேனே!
நானிலமே போற்றுகின்ற நம் சரணர் பாதுகை பார்த்து!
எண்ணை காப்பு எங்கும் நிறை எம் ஐயனுக்கு !
திரவிய பொடி அபிஷேகம் எம் குரு நாதருக்கு!
மஞ்சள் பொடி அபிஷேகம் எம் ஸ்ரீ சரணாளுக்கு!
மணக்கும் சந்தன அபிஷேகம் எம் சங்கரருக்கு!
பால் அபிஷேகம் எம் காமாஷி பிரியருக்கு!
பஞ்சாமிர்தமும் இன்னும் பல அபிஷேகமும் எம் பெரியவாளுக்கு!
காணும் காட்சி மெய்யோ என கிள்ளிக்கொண்டேன் என்னையே!
4 வாஞ்சையோடு சரண்புக வலியஞானம் தெரிவையே! (ஆஹா)
பாடல் ஒன்று உதித்தது என் மனதில்!
என்ன சொல்லி நான் அழைக்க வந்தீரோ – ஐயா
இத்தனை நாள் பக்தி செய்ததற்கு காட்சி இதுவோ குருவே ( என்ன )
சங்கர ரூபா சந்த்ர சேகரா
சத்குரு நாதா வந்தீரோ!
சங்கரர் உம்மை பாடி பணிந்திட
எந்தனுக்கே அருள் செய்தீரோ (2) ( என்ன )
எந்தனுக்கும் உங்களுக்கும் காத தூரமோ – என நான்
இங்கிருந்து கூப்பிட்ட குரல் காதில் விழுந்ததோ (2) ( சங்கர )
அன்னையை காணா கன்றாய் அலைந்தேனே – அன்புருவே
என் கண் முன்னே ஓடி வந்தீரோ (2) (சங்கர )
கண்ணார உம் தரிசனம் காண அருள் செய்தீரே
கண்கண்ட தெய்வமே காம கோடி குருவே (2) ( சங்கர )