Do Snanam Ten feet Away!

Jaya Jaya Sankara Hara Hara Sankara – A spell bounding incident that was published more than couple of years back. Reproducing again with translation by our Sathsanga seva volunteer Smt. Uma Ramani. Ram Ram

Periyava_river_snanam
பெரியவா சரணம் !!!

“பெரியவா ஸ்நானம் செய்ற இடத்திலிருந்து கீழண்டே பத்து அடி தள்ளிப் போய் ஸ்நானம் பண்ணச் சொன்னா”

“1988 வருடம்.பல ஊர்களுக்கு வங்கி அலுவல்நிமித்தமாக பலஊர்களுக்கு செல்லவேண்டிய நிலை.சென்னை திரும்பியதும் திடிரென்று அலர்ஜி பிராப்ளம் ஆரம்பித்துவிட்டது . சிறு அழுக்கு அல்லது சில காய்கள் பட்டாலோ தின்றாலோ உடம்பு முழுவதும் சிறு சிறு கொப்பளமாக கை கால் முகம் என்று வர ஆரம்பித்து அடிக்கடி விடுமுறை எடுக்கும் நிலை உடம்பு முழுவதும் அரிப்பு.எல்லா வைத்தியமும் பலனளிக்க வில்லை. கடைசியில் பரமாசாரியரிடம் வேண்டிக்கொண்டும் பலன் கிட்டி சரியாகவில்லை. சரி இதோடுதான் இனி வாழ்க்கை என்று முடிவும் செய்து விட்டேன் .

ஒருநாள் என் நண்பர் திரு . சீதாராமன் ஆடிட்டர் கர்னூல் வரையா பெரியவா சாதூர் மாஸ்யம் விரதம் ஆரம்பிக்க போறா தரிசனம் செய்து விட்டு வரலாம் என்றார். கரும்புதின்ன கூலியா என்று உடனே சரி என்று சொல்லிவிட்டேன். மேலும் அவரிடம் நேரில் முறையிடலாம் என் நிலையைப் பற்றி என்று.

ரயலில் ஏகப்பட்ட சாமன்களோடு கர்னூல்போய் இறங்கி சைக்கிள் ரிக்ஷாவில் காய்கறி,அரிசி, மளிகை சாமான்களோடு பரமாச்சாரியார் இருக்கும் தேடி சென்றோம். ரிக்ஷாகாரர் ரேட்கூட பேசாமல் சந்தோஷமாக அழைத்துச் சென்றது இனிமையான நிகழ்வு.கருணாமூர்த்தி இருந்த இடமோ ஒரு ஜின்னிங் ஆலை. வசதிகள் மிகவும் குறைவு. ஆனால் அந்த ஆலை முதலாளி ஆச்சாரியாரிடம் இருந்த பக்தியின் காரணமாக 4 மதங்களுக்கு ஆலையை மூடிவைத்து இவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்து இருந்தார். சாமன்களை இறக்கி வைத்து விட்டு நாங்கள் வந்திருக்கும் விஷயத்தை அவரிடம் சொல்ல பாலு மாமாவிடம் சொன்னோம். அவரும் உள்ளே சென்று பரமசாரியரிடம் கணக்கர்கள் வந்த விஷயத்தை சொல்லி விட்டு வெளியே வந்தார்.எங்கள் இருவரையும் பார்த்து பெரியவா அனுஷ்ட்டானதுக்கு நதிக்கரை போகப்போறளாம் உங்க இரண்டு பேரையும் அங்கே வந்து ஸ்நானம் பண்ணிட்டு தரிசனத்துக்கு வரச்சொன்னா என்றார் .பாலு மாமா நாங்க ரயில்வே ஸ்டேஷன் ரெஸ்ட் ரூமிலேயே குளிச்சுட்டோம்ன்னு சொன்னோம் . அதெல்லாம் தெரியாது அங்கேதான் வந்து குளிக்கச்சொல்லி உத்தரவு ஆயிருக்குன்னு கண்டிப்பா சொல்லிட்டார்.

எனக்கு பஞ்சு ஆலையில் அழுக்கு பட்டு ஒவ்வாமை வந்து உடம்பு
எல்லாம் சிகப்பு கொப்பளங்கள் வர ஆரம்பித்துவிட்டது. கையில் செட்சைன் மாத்திரையும் இல்லை . பக்கத்தில் மருந்தகமும் இல்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. சரி பெரியாவளை நம்பி வந்தாச்சு அவர் பாத்துக்கட்டும் என்றுஅவர் பேரில் பாரத்தை போட்டுவிட்டு அவருடன் அவர் பின்னாலேயே ஜெய ஜெய சங்கர என்று சொல்லிக்கொண்டு அவர் பின்னாலேயே சென்றோம்.வழி எல்லாம் எனக்கு வந்த வியாதியை போக்கச்சொல்லி பிரார்த்தனை செய்து கொண்டே சென்றேன்……..

நதிக்கரையை சென்றடைந்தோம். ஆற்றில் அப்படியொன்றும் நீர் பிரவாகமா ஓடவில்லை. வாய்கால் மாதிரி முன்று பிரிவாக ஜலம் ஓடிக்கொண்டிருந்தது.பெரியவா ஆற்றில் இறங்கி நீராட ஆரம்பித்தார் . நானும் ஆற்றில் உடனே இறங்காமல் பெரியவா அனுஷ்டானம்   முடித்த பின்பு ஸ்நானம் செய்யலாம் என்று காத்துக்கொண்டு இருந்தேன் .அப்போது பெரியவா என்னைப் பார்த்துவிட்டு பாலு மாமாவிடம் ஏதோ சொன்னார். பாலுமாமா கரை ஏறிவந்து என்னிடம் உன்னையும் பெரியவா
ஸ்நானம் செய்யச் சொல்லரா என்றார். எங்கே குளிப்பது நான் குளித்த ஜாலம் பெரியவா பக்கம் போகக்கூடாதே என்றேன்.

அவர் உடனே பெரியவா ஸ்நானம் செய்ற இடத்திலிருந்து கீழண்டே பத்து அடி தள்ளிப் போய் ஸ்நானம் பண்ணச் சொன்னா என்றார். நானும் ஆற்றில் இறங்கி அவர் சொன்ன இடத்தில் ஸ்நானம் செய்ய ஆரம்பித்தேன் .குளிக்கும் போதே உடம்பெல்லாம் சிகப்பாக தடிமன் உடம்பு பூராக இருந்தது. ஓடும் தண்ணீர் மேலே பட்டு உடம்பு எரிய ஆரம்பித்து.அப்படியும் விடவில்லை நன்றாக முங்கிக்குளித்தேன். அப்பொழுதான் பொறிதட்டினாற்போல் ஒரு விஷயம் புலப்பட்டது..

பெரியவாஅதற்குள் ஸ்நானத்தை முடித்து ஜபம் ஆரம்பிக்க கரை ஏறினார் .நானும் கரை ஏறினேன்.உடம்பில் இருந்த சிகப்பு தடிமன் கொஞ்சம் குறைந்து எரிச்சலும் மிகுதியாக இல்லை. கரையில் வந்து கொண்டுபோன உலர்ந்த வஸ்திரங்களை கட்டிக்கொண்டு மாத்யானீகம் பண்ண விபூதியை பூசிக்கொண்டேன் . அப்போது பாலு மாமா கிட்டே வந்து பெரியவா பூசிக்கொண்டு மிச்சம் இருந்த விபூதியை கொடுத்து இதை முகம் , கை, மார்பு தோள் எல்லா வற்றிலும் தடவிக்கச் சொன்னா பெரியவா என்றார். அவர் சொன்னது மாதிரியே செய்தேன் . பிறகு எல்லோரும் பஞ்சாலைக்கு வந்து பூஜையில்
கலந்துகொண்டோம்.

பின்பு பெரியவாளிடம் தீர்த்தப் பிரசாதம் வாங்க வந்தேன். அப்பொழுதான் கவனித்தேன் என் உடம்பில் ஒவ்வாமை துளி கூட இல்லாமல் அரிப்பும் இல்லாமல் இருந்தது.பெரியவா எனக்கு தீர்த்தம் கொடுத்துக்கொண்டே கேட்டார்கள் ” வந்த காரியம் முடிந்ததா” என்று.எனக்கு அப்போதுதான் உறைத்தது என் ஒவ்வாமை தீர்த்தது அவர்மேல் பட்டு என்மேல் பட்ட தண்ணீரும் அவர் கொடுத்த விபூதியும்தான் என்று . இத்தனைக்கும் அவரிடம் என் வியாதியைப் பற்றி சொல்லவே இல்லை.என் இருகண்களிலும் கண்ணீர் அப்படியே சாஷ்டாங்கமாக அவரின் பாதகமலங்களில் விழுந்து நமஸ்காரம் செய்து. பெரியவா கருணையால் எல்லாம் நல்ல படியாக முடிந்தது என்று கூறி விடை பெற்றுக்கொண்டு வந்தோம் .

நண்பர் சீதாராமனிடம் வரும்போது கேட்டேன் பெரியாகிட்டே நான் என் நிலையை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே எப்படித் தெரியும் என் வியாதி. அவர் சொன்னார் ” தன்னோட சிஷ்யர்களோட கஷ்டங்கள் அவருக்குத்தான் முதல்லே தெரியும் நமக்கே அப்பறம்தான்.” என்றார் .அவ்வளவுதான் அன்று போன ஒவ்வாமை வியாதி அப்படியே கர்னூல் ஆற்றில் போய் விட்டது.

இன்றுவரை அழுக்கிலேயே இருந்தாலும் கத்திரிக்காய், கருணைக்கிழங்கு சாப்பிட்டாலும் வரவே இல்லை, அவருடைய ஆராதனை நாளில் இதை எண்ணிப்பாக்காமல் இருக்க முடியவில்லை.

நமோ நமஸ்தே குருபாதுகாப்யாம்.”

*********
பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !

அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?.

காமகோடி தரிசனம்    காணக்காணப் புண்ணியம்

————————————————————————————————————————————————————

Do Snanam Ten Feet Away!

This happened in the year 1988. I was employed in Bank and official responsibilities required me to travel to many places as a part of work.  Once when I returned to Chennai after an official tour, I developed an allergy problem which resulted in boils and red bruises developing all over my body. Even a small amount of dust and eating certain vegetables aggravated the same.

It initially started with small boils but soon spread all over the body including my hands, legs and face, causing itching sensation on the entire body.  This resulted in my taking leave of absence from office very often. None of the treatments that I underwent proved helpful. At last, I prayed to Paramacharya, Maha Periyava but even that did not yield any positive result. I reconciled to the fact that I live the rest of my life with this disease.

One day, my friend Sri. Srinivasan, an Auditor, asked if I am willing to travel to Karnool where Maha Periyavaa was to begin the Chatur Masya fasting in Karnool. What more one wanted? Here I am, being given “Sugarcane to eat and in addition, being paid for eating also”. I immediately agreed to go with him. Secondly I also, thought I can personally explain and appeal to Maha Periyavaa regarding my health problem.

We reached Karnool with plenty of luggage which included vegetables and provisions. We engaged a cycle Rickshaw to take us to the place where Maha Periyava had established his temporary camp. It was a pleasant experience as the riksha puller did not even demand or ask for any specific fare and happily took us.

Maha Periyava was camping in a cotton ginning mill, which was lacking in necessary facilities for a comfortable stay. However the owner of the Ginning Mill was a staunch devotee of Periyavaa and out of reverence he had for Maha Periyava, had closed the mill stopping all production activities for over four months to make arrangements for Maha Periyava’s stay.

After unloading our baggage and other items, we informed Balu mama regarding our arrival.  He went inside to inform Maha Periyava of the same. He came out and informed us that Maha Periyavaa will be proceeding to the river for his “Anushtanam” (Holy Bath) and also has asked both of us to have bath in the river after which we can come for Darshan.

We told Balu mama that we had already taken bath in the Railway retiring room. However Balu Mama strictly asked us to go to the river and have our Bath in river water.

I found myself already developing red boils and bruises all over my body due to the dust in the Ginning mill. I also did not carry the ‘Cetzine’ tablet with me nor I could find any Pharmacy, nearby.

Since I did not know what to do, I decided to place my entire faith on Maha Periyava and decided that whatever happens, His Holiness Maha Periyava will take care of me. So I followed Maha Periyava to the river bank chanting ‘Hara Hara Shankara’ and offering a silent prayer in my mind to Maha Periyava to cure my ailment.

We reached the river bank. I found the river calm, the water flow was also normal and water was flowing in three divided streams.  Maha Periyava stepped into the water and commenced his ‘Anushtanam’  (Holy Bath). I did not immediately step into the river and continued to remain on the river bank. I felt that I should have my Bath after Maha Periyava completes his ”Anushtanam’ and hence waited. Maha Periyava who was taking his Holy Bath suddenly looked at me standing on the bank of the river called Balu Mama and said something. Balu Mama immediately climbed the river bank and told me that Maha Periyava has asked me to take Bath. I asked Balu Mama as to where I should Bath as I did not want the water which I have bathed to reach and touch the Holiness. Balu Mama asked me to stand about 10 ft away from Maha Periyava on the downstream side of the river. I immediately stepped in to water at the place indicated on the downstream side and started bathing. Red boils and rashes had now formed all over my body and I could feel my whole body itching and burning as the cold water touched my body. Still I immersed myself fully in to the water. It was at this time that a thought struck me like a bolt and understanding came to me.

By that time Maha Periyava had completed his Holy Bath and stepped out of the river and commenced chanting of Manthra(Jabam). I also stepped out of the water and I could feel that the burning sensation in my body had reduced and the red boils and bruises also had lessened in intensity. I changed in to dry clothes and began apply “Vibhuthi” to begin my afternoon religious chores. Balu Mama came to me and handed over some “Vibhuthi” which was left after Maha Periyava had applied for himself. Balu Mama informed that Maha Periyava had asked me to apply the ” Vibhuthi” all-over my face, hands, shoulders and chest. I did as I was told. Then we all returned to the Cotton Mill and participated in the prayers.

On completion of the prayers I approached Maha Periyava to seek his blessings and Holy water. I suddenly realized that I did not have any boils or bruises on my body and the itching sensation also had disappeared. As Maha Periyava blessed me and offered the Holy water, he asked me,” is the purpose for which you came has been accomplished?’. Something struck me hard in mind and I realized that it was the river water which flowed downstream towards me after flowing and touching Maha Periyava’s Holier than Holy body and the “Vibhuthi” he offered me to apply all over my body that had cured my disease. That too, I never even mentioning anything to Maha Periyava, not even a word about my ailment.

Tears were streaming from my eyes as I fell flat on his feet to seek his blessings. I told Maha Periyava that with his blessing and kindness my purpose had indeed been accomplished and we left his presence.

I asked my friend Sitaraman how Maha Periyava could have known about my ailment, when I had not uttered a word to him about the same. Sitaraman said, Maha Periyava is able to perceive and know the hardships, problems and ailments of his devotees even before they come to know about them.

On that day my ailment was washed away by the waters of the Karnool river. Till today, I am free from that dreadful ailment, even if I find myself  in any dirty, dusty or filthy surroundings or eat vegetables such as Brinjal and Karanai, which normally used to trigger the rashes and boils.  Never a day of Aradhana of Maha Periyava passes, when I do not reverently remember, recollect and ponder about this incident and ever flowing benevolence of Maha Periyava.

Namo Namasthe, Guru Padhugapyam!!

It’s a great privilege and abundant blessings of God that we are born and living in the same era of Maha Periyavaa.

KAMAKOTI DHARISANAM, KAANA KAANA PUNNIYAMCategories: Devotee Experiences

Tags:

8 replies

 1. Could you kindly tell me the name of bank sir’s.I am searching but I can’t get the name of bank sir’s name.The interview done by bank sires and I wanna see the video.Kindly anybody help to get to know the name of that sir’s

 2. Shri Mahaperiyava Charanam

 3. gurubyo namaha. jaya jaya shankara hara hara shankara. kakum deivam

 4. Not surprised. His daily routine is this. We are blessed to live in the time when he was walking on earth.

 5. sree gurubhyo namaha. jaya jaya sankara hara hara sankara.

 6. எம் குருவுக்கு !

  வஞ்சமில்லா மனம் கொண்டு!

  தஞ்சம் என தாள் வணங்கி!

  மஞ்சள்மாலையதை !

  நெஞ்சார சமர்ப்பித்தால்!

  கிஞ்சித்தும் வாராது !

  சஞ்சலங்கள் நம் மனதில்!

  ஸ்ரீ சரணாளே சரணம்!

 7. No doubt Ganga Snaanam cleanses our sin.
  But Mahaperiyava-Snaanam not only cleans our SIn but also vapourises our ills also.

 8. very blessed soul!

Leave a Reply

%d bloggers like this: