Jaya Jaya Sankara Hara Hara Sankara – Another gem of a lesson from a simple upadesam.
Thanks to Shri. Padma for the share and Smt. Uma Ramani for our sathsang seva volunteer for the translation. Ram Ram.
மஹா பெரியவாள் பிடி அரிசி திட்டம் பற்றி சொன்னபோது, அது ஆன்மிகப் பெருமக்கள் மத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏராளமான குடும்பங்கள், தினமும் பிடி அரிசியை எடுத்து, தனியே வைத்து. அந்த மகத்தான கைங்கர்யத்தில் தங்களையும் ஈடுபடுத்திக் கொண்டன. அதனால் பல ஏழை மக்கள் பயன் பெற்றனர். இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள்தான். கவிஞர் கண்ணதாசன், மஹா பெரியவாளைச் சந்தித்தது பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டேன் அல்லவா?. அப்போது, மஹா பெரியவாளுடனான உரையாடலில், கண்ணதாசன் இந்தப் பிடி அரிசி திட்டம் பற்றியும் கேட்டார். அப்போது, மஹா பெரியவாள் ஒரு பிடி அரிசியை வைத்துக்கொண்டிருப்பது போல பாவனை செய்து, ஒரு பிடின்னா, ஒரு பிடி அளவு இல்லே; அந்தக் கையினுடைய அமைப்பை நன்னா பாரு. ஹிருதயம் மாதிரி இருக்கோல்லியோ! அதைத் தான் அங்கே கவனிக்கணும். நாம குடுக்கறது ஒரு பிடியா இருந்தாலும், ஹிருதயபூர்வமா அந்த தானத்தை செய்யணும்” என்று சொன்னார். பிடி அரிசி திட்டத்துக்குப் பின்னால் இப்படி ஒரு அழுத்தமான அம்சம் இருப்பது அனைவருக்கும் புரிந்தது.
இன்றைக்கு உலகமெங்கும் மஹா பெரியவாளுக்கு ஏராளமான பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் செய்துகொள்கிற தாழ்மையான விண்ணப்பம் ஒன்று உண்டு. வீட்டில் அவருடைய படத்தை வைத்துக் கொண்டு பக்தியைக் காட்டினால் மட்டும் போதாது. அந்த மஹான் சொன்ன கருத்துக்களில் ஒரு சிலவற்றையாவது நம் வாழ்க்கையில் கடைப்பிடிப்போம்.
—————————————————————————————————————————————————————
The “Pidi Arisi” (handful of Rice) scheme, which was conceived by Maha Periyava created a stir and major impact amongst his devotees and religious fraternity. Large number of families desiring to attach themselves and becoming a part of the “Pidi Arisi” scheme began to set aside one fistful of Rice every day. By this a large number of poor families also became the beneficiaries of this scheme. These facts are well-known and already in public domain.
I have also mentioned before, elsewhere, that the great Tamil poet Kannadasan had visited Periyava to have his Darshan. During the conversation with Maha Peiyavah, Shri Kannadasan enquired regarding the “Pidi Arisi” scheme. Maha Periyava then closed his fists, symbolically Indicating that he had a fistful of Rice said, ‘when I hold a fistful of Rice, it is not just a fistful, if one observes closely, one can see the shape of the human heart. This is what we will have to consider. Even if we are giving only one fistful of Rice, the desire to give should come from the bottom of the heart.’ It was then that many of us understood the powerful hidden significance of the “Pidi Arisi” scheme.
Today there are lakhs and lakhs of devotees of Maha Periyava are living World over and I would like to make a humble appeal to all of them. It is not enough to show our “Bhakthi” (Reverance) to Maha Periyava by having his picture and photo hanging on the wall. It is also equally important that we follow and practice at least a few of his teachings and preaching in our life.
Categories: Devotee Experiences
காஞ்சி மாமுனியாம் எம் குருநாதர் கூறியபடி தினம்!
கைப்பிடி அரிசியை கருணையோடு எடுத்து வைக்க!
கண்டிடுமோ நம் இதயம் காலன் எனும் கொடியவனை!
காமகோடி மடம் வாழும் காருண்ய மூர்த்தியே சரணம்!
Pidi arisi
=
A heartful of rice.
Such a thoughtful and innovative interpretation only Periyava can give….Very nice post..
A new dimension for Mahaperiyava’s Pidi Arisi project. It is very true that our heart is proportionate to the size of our fist. Karuna sagarane Mahaperiyava.
Gayathri Rajagopal