Periyava Golden Quotes-280

Maha Periyava-15

நமக்கெல்லாம் வழிகாட்டினவர் அப்பர் ஸ்வாமிகள். “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற அவர் என்ன செய்தார்? ‘பாடும் பணி’யினால் ஸகல ஜனங்களின் நெஞ்சமும் உருகிப் பரமேஸ்வரனிடம் சேருமாறு பண்ணி வைத்தது அவர் செய்த வாக் கைங்கர்யம். அது தவிர சரீர கைங்கர்யமாக, ஒரு உழவாரப் படையை வைத்துக் கொண்டு கோயில் கோயிலாய்ப் போய் அங்கே ப்ராகாரத்தில் முளைத்திருந்த புல்லைச் செதுக்கிக் கொண்டிருந்திருக்கிறார். அப்பர் காட்டிக் கொடுத்தபடி அம்மையப்பரிடம் பக்தி வைத்து, எல்லாரும் அந்த ஒருவனின் குழந்தைகள் என்கிற அன்பில் ஒன்றுபட்டுச் சேர்ந்து ஸேவை செய்கிற போதுதான் த்வேஷம், கட்சிச்சண்டை, ஏமாற்று, வெறும் நடிப்பான ‘இன்டக்ரேஷன்’ (ஒருமைப்பாடு) இவை இன்றி களங்கமில்லாத பரிசுத்த ஒற்றுமையும், உத்ஸாஹத்தோடு உழைக்கிற மனப்பான்மையும் ஏற்படும். பெரிய பெரிய கார்யங்களையெல்லாம் ஸுலபமாக ஸாதிக்கலாம். அந்தச் சூழ்நிலையிலேயே ஆனந்தத்தின் ஸுகந்தத் தென்றல் வீசும். கெட்டதுகளின் வாடையே அங்கு தலை காட்டாது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்


The Saint-poet Appar Swamigal is an exemplary example to all of us. Through his songs soaked in divine love, he took people closer to Eshwara. He also formed an ‘Uzhavaarap Padai”, a group of volounteers to perform services at the temples like cleaning its surrounding.  When we follow in his path, and perform service in the firm belief that we are all children of the Universal Parents (Ammayappar), true integration, and enthusiastic service will happen. Even major tasks can be accomplished. Unnecessary politics, cheating, prejudices and a false show of integration will cease to exist. All evils will disappear. The fragrant breeze of happiness will blow gently. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. ஸ்ரீ பெரியவா சரணம் Sri Periyava Saranam

Leave a Reply to ramesh p eCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading