”மக்களுக்குச் செய்வதே மஹேசனுக்குச் செய்வது” என்று வெறும் வாய்ப் பேச்சாகச் சொல்லிக்கொண்டு, மஹேசனை மறந்து இப்போது கார்யங்களைப் பண்ணும்போது என்ன ஆயிருக்கிறது? தெய்வ ஸம்பந்தமில்லாமல் பணியைக் கத்தரித்து விட்டிருப்பதால், நல்ல குறிக்கோளோடு பண்ணுவதெல்லாமே அனர்த்தங்களைக் கொண்டு வந்து விடுகிறது. பழைய நாளில் பக்தியால் தேசத்தில் கன்யாகுமாரியிலிருந்து காஷ்மீர் வரை எல்லா ஜனங்களும் ஏகோபித்திருந்ததால், வடக்கே கோயில் கட்டுகிறார்களா, தெற்கே கோயில் கட்டுகிறார்களா என்று சண்டை போடாமல், வடக்கத்திக்காரன் தென்தேசத்துக் கோயில்களுக்கும், தெற்கத்திக்காரன் வடதேசக் கோயில்களுக்கும் போனான். இப்போதோ ராஜாங்கம் எந்த டாம் கட்டட்டும், எந்த ஃபாக்டரி வைக்கட்டும், உடனே அத்தனை ஸ்டேட்காரர்களும், தங்கள் தங்கள் ஸ்டேட்டில் தான் அதைக் கட்ட வேண்டும் என்று சண்டைக்கு ஆரம்பிக்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
“Service to people is Service to Bhagawan”. These have become mere words and lost their true meaning and we have forgotten Bhagawan and continued performing our tasks. This has resulted in even well motivated tasks causing many confusions. In the olden days, the feeling of Bhakthi or devotion bound people together from Kashmir to Kanyakumari. People were not bothered whether the temple was built in the North of the country or the South. South Indians went to North Indian temples and North Indians went to South Indian temples. Nowadays, whenever a plan is drawn up for building a dam or a factory, people belonging to every state want to have it in their own state and infighting ensues in the country. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply