Periyava Golden Quotes-276

Maha Periyava-11

அநாதைக் குழந்தைகளின் ஸம்ரக்ஷணை, திக்கற்ற ஏழைகளுக்கு ஸேவாஸதனம் வைப்பது, ப்ராணி வதையைத் தடுப்பது, பசு வளர்ப்பது, பசிக்கஷ்டம் யாருக்கும் வராமல் உபசரிப்பது என்றிப்படி எந்தெந்த விதத்தில் முடியுமோ அப்படி நம் அன்பை, வெறும் பேச்சாக இல்லாமல், கார்யத்தில் காட்டினால் பரமேஸ்வரனின் அன்பு நமக்கும் கிடைக்கும். ஈஸ்வராநுக்ரஹம் எங்கேயும் ப்ரவாஹம் மாதிரி ஓடிக் கொண்டேன்தான் இருக்கிறது. ஆனால் நம் மனஸ் கல்லாக இருந்தால், கல்லுக்குள் ஜலம் ஊறாத மாதிரி அநுக்ரஹத்தை நம்மால் தெரிந்து கொள்ள முடிவதில்லை. அதுவே ஒரு துணியை வெள்ளத்தில் போட்டால் அதுதானே விரிந்து ஜலத்தை இழுத்துக் கொள்கிறது. துணியை வெளியே இழுத்துப் பிழிந்தால் ஜலம் கொடுக்கிறது. கல் மனஸைப் பரோபகாரத்தில் இப்படி லேசாகத் துணி மாதிரி ஆக்கிக் கொண்டால் எப்போதும் நம்மைச் சூழ்ந்திருக்கிற அநுக்ரஹத்தை நன்றாக உறிஞ்சிக் கொள்ளலாம். ஜீவனுக்குச் செய்கிற பெரிய உபகாரம் அவனுக்குக் கருணாமூர்த்தியான ஈசனிடம் பிடிப்பு ஏற்படுத்தித் தருகிற திருப்பணிதான். –ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்


We should not confine ourselves to mere talks but express our love in acts of social service like supporting the orphans and the poor, preventing slaughter and cruelty to animals, maintaining cows, and mitigating the pangs of hunger among the needy. Then we will all be blessed by the love of Eshwara. This divine love is an ever flowing stream which is omnipresent. But when our hearts are stony, this love does not seep into them. When a cloth is dipped in flowing water, it expands and absorbs the water and when it is taken out and wrung, gives out the water. Similarly when our stony hearts are lightened like clothes by the acts of philanthropy, we can absorb the eternal divine blessing by which we are always surrounded. The biggest service to a living being is to develop in him an attachment to the Divine. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: