Jaya Jaya Sankara Hara Hara Sankara – There is often talk that it is enough to have a clean mind and all these anushtanams (rituals) are not needed, but the key question is how does the mind become clean? Does it get cleansed automatically? Sri Periyava answers emphatically below.
Thanks to our sathsang seva member for the translation. Ram Ram
சீலம் உண்டாக வழி
நல்ல சீலம், குணங்கள் வரவேண்டுமென்றால் நம் வேத சாஸ்திரங்களில் சொல்லியுள்ள காரியங்களைச் செய்ய வேண்டும். நல்ல ஆசாரங்கள் இருக்க வேண்டும். நல்ல அநுஷ்டானம் இருக்க வேண்டும். மனசு நன்றாக இருந்தால்தான் சீலம் வரும். எல்லோருக்கும் நல்ல மனசாக இருக்க முடியவில்லை. கெட்டது என்பதே மனசில் புகாதபடி நல்லதே உள்ளம் முழுவதும் நிரம்பியிருந்தால்தான் சீலம் வந்ததாக அர்த்தம்.
எல்லோருக்கும் மனசு மிகவும் நன்றாக இருக்க முடியாது. இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டாலும் முடியவில்லை. வீட்டிலே இருக்கிற குழந்தை சதா ஏதோ விஷமம் பண்ணிக் கொண்டிருக்கிறது. கத்தரிக்கோலை எடுத்து நல்ல துணிகளை, முக்கியமான காகிதங்களை நறுக்கிவிடுகிறது. செடிகளை வெட்டிவிடுகிறது. இப்படித் துஷ்டத்தனம் பண்ணுகிறது. அதையே பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டால், ‘இத்தனை மணிக்குள் போக வேண்டும். இன்ன இன்ன பாடங்களை அதற்குள் எழுதிவிட வேண்டும், திரும்ப இத்தனை மணிக்குத்தான் வரமுடியும், வந்தால் இதைச் செய்ய வேண்டும்’ என்று அதற்கு ஒரு கட்டுப்பாடு வந்து விடுகிறது. முன்பு காணப்பட்ட விஷம குணங்கள் எங்கோ போய் விடுகின்றன. பள்ளிக்கூடம் இல்லை, லீவுநாள் என்றால் மறுபடியும் விஷம குணங்கள் தலைகாட்டுகின்றன. அதேபோல் நாம் கெட்ட எண்ணத்திலும் காரியத்திலும் ஈடுபட அவகாசம் இன்றி, நல்ல காரியங்களை ஒரு விதிப்பிரகாரம், ஒழுங்கு தப்பாமல் செய்வதுதான் முக்கியம். இதற்குத்தான் சாஸ்திரங்கள் நமக்கு விதிகள் போட்டிருக்கின்றன.
நல்ல சீலங்கள் உண்டாக வேண்டுமானால் துர்க்குணங்கள் நிவிருத்தியாக வேண்டும். துர்க்குணங்கள் நிவிருத்தியாக நல்ல கர்மாநுஷ்டானங்களைச் செய், பூஜை பண்ணு, (சகல ஜீவராசிகளுக்கும் ஆகாரம் கொடுப்பதான) சைச்வதேவம் பண்ணு, அதிதிகள் வந்தால் ஸத்காரம் (விருந்தோம்பல்) பண்ணு என்று பல விஷயங்களைச் செய்யச் சொல்கிறது சாஸ்திரம். இதன்படி செய்துவந்தால் கெட்ட காரியங்களுக்கு நேரமே இல்லாமல் போய்விடும். கர்மாநுஷ்டானங்களைப் பண்ணுகிறபோதும் ‘நாம் பண்ணுகிறோம்’ என்ற அகம்பாவத்தோடு பண்ணக்கூடாது. பண்ணக்கூடிய சக்தியை நமக்கு ஈஸ்வரன் கொடுத்தான், பண்ண வேண்டும் என்ற புத்தியைக் கொடுத்தான். அதற்கு வசதியும் கொடுத்தான் என்று நினைத்து, ஈசுவரார்ப்பணமாகப் பண்ணு என்று நமது வைதிக மதாசாரியர்கள் விதித்து வழிகாட்டினார்கள். துளி அகம்பாவம் வந்துவிட்டால் போச்சு! அது எத்தனையோ வேஷங்களைப் போட்டுக்கொண்டு, நாம் கொஞ்சம் அசந்து மறந்து இருந்தாலும் வந்து பிடித்துக்கொண்டு விடும்.
கண்ணாடியில் பார்க்கிறோம். அழுக்காக இருந்தால் பார்க்க முடிகிறதா? சுத்தமாகத் துடைத்துவிட்டுப் பார்த்தால் நன்றாகத் தெரியும். சுத்தமாகத் துடைத்த கண்ணாடிதான் என்றாலும்கூட, அது ஆடிக் கொண்டிருந்தால் பிம்பம் விளங்காது. கண்ணாடி சுத்தமாகவும் இருக்க வேண்டும். ஆடாமல் நிலையாகவும் இருக்கவேண்டும். சுத்தமான ஆடாத கண்ணாடியாக இருந்தால்தான் உண்மை பிரகாசிக்கும்; சித்தம் என்பது கண்ணாடி போன்றது. பரம்பொருள் ஒன்றே உண்மை. கெட்ட எண்ணம் தோன்றாவிட்டால் சித்தக்கண்ணாடி சுத்தமாகும். ஒன்றிலேயே அதை ஈடுபடுத்தினால் அது ஆடாமல் நிலைத்த கண்ணாடியாகும். அப்போதுதான் பரமாத்மா அதில் பிரதிபலிப்பார்.
இந்த உலகத்தை எல்லாம் படைக்கிறவன் யார்? நமக்கெல்லாம் இவ்வளவு அன்ன, வஸ்திர, சௌக்கியங்களைக் கொடுக்கிறவன் யார்? அருட்கடலாக இருப்பவன் யார்? அவனைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நாம் விரும்பினால் நம்முடைய சித்தத்தை அழுக்கு இல்லாமல் ஆடாமல் வைத்துக் கொள்ள வேண்டும்.
தாமிரச் செம்பு கிணற்றில் பத்து வருஷங்கள் கிடந்து விட்டது என்றால் அதை எத்தனை தேய்த்தாக வேண்டும்? எவ்வளவுக்கு எவ்வளவு தேய்க்கிறோமோ, அவ்வளவுக்கு அது வெளுக்கிறது. சுத்தமாகிறது. இவ்வளவு வருஷ காலம் எத்தனை கெட்ட காரியங்களைச் செய்து நம்முடைய சித்தத்தில் அழுக்கை ஏற்றிக் கொண்டு விட்டோமோ, அந்த அழுக்கைப் போக்க அத்தனை நல்ல காரியங்களைச் செய்து தேய்க்க வேண்டும். நல்ல கர்மாநுஷ்டானங்களைச் செய்ய வேண்டும். அதனால் சித்த சுத்தி வரும். நல்ல சீலங்கள் உண்டாகும்.
சரி, இன்றைக்குச் செம்பைத் தேய்த்து வெள்ளை வெளேர் என்று ஆக்கிவிட்டோம் என்றால் சரியாகிவிட்டதா? நாளைக்கு அதற்கு மறுநாள் என்று மறுபடியும் அதைத் தேய்க்காமலிருந்தால் என்ன ஆகும்? மறுபடியும் அழுக்காகிறது. இதேபோல் நம் சித்தத்தையும் விடாமல் அநுஷ்டானத்தால் சுத்தம் செய்து கொண்டேயிருக்கவேண்டும். அப்புறம் ஒரு நிலை வந்துவிட்ட பின்தான் இந்தச் சித்தம் என்பதே ஓடிப்போய்விடும். ஆத்மா மட்டும் நிற்கும். சித்தமே இல்லாத அப்போதுதான் அதை சுத்தம் செய்கிற காரியமும் இல்லாமல் ஆகும். அதுவரை இந்தச் சுத்தப் படுத்துகிற காரியத்தைச் செய்து சீலங்களை வளர்த்துக் கொள்ள வேண்டியதே.
Ways to develop Good Character
In order to develop good character and good conduct, we should perform the rituals/tasks as prescribed in the Veda Sastras. We should follow proper Aacharam (ritualistic purity) and Anushtanams (do prescribed rituals, puja, etc.). If the mind is pure, good character follows. However, everyone does not have a pure mind. If the mind has only good thoughts, with no bad thoughts ever entering it, then we can say that the person has developed good character.
Everyone’s mind is not filled with goodness. This will not happen even if one desires so. Your child, while at home, is constantly up to mischief. The child, sometimes, cuts to pieces clothes and important papers using scissors, chops away plants, all the time indulging in mischief. The same child, when sent to school develops discipline in terms of reaching school on time, completing assigned home work, coming back home on time etc. The tendency to indulge in mischief disappears. Once the vacations begin, the tendency for mischief crops up again. Even we elders should constantly be involved in doing Anushtanas and not give ourselves an opportunity to indulge in wrong thoughts or actions. We should do the Anushtanas as per the rules and at the right time. The Sastras have laid down codes for this.
If we wish to develop good character, the negative traits in us should leave us. To get rid of these negative traits, the Sastras direct us to do our regular Anushtanas, perform puja, carry out Vaiswadevam (feeding all living things), Athiti Satkaaram (Annadanam to guests) etc. If we do these as specified in the Sastras, we will not have any time for negative thoughts or deeds. While doing the Anushtanas, the sense of ‘I’ (ego) should not rear its head. Our Gurus have advised us to offer all our deeds with humility to Bhagawan, for having blessed us with the thought, strength and the capacity to do them. Unless and until we are very alert, our ego will take over in some form or the other.
Say we look at our reflection in a mirror. Are we able to see the image if the mirror is dirty? The image is clearly visible only if the mirror is clean. Even when the mirror is clean, if it is shaking, the image is not clear. The mirror needs to be clean and steady. Only then will it truly reflect the object. Our mind is like the mirror. Bhagawan is the only real object. The mirror called mind will be clean if there are no wrong thoughts in it. If the mind can be focused only on good thoughts, then it is like a steady mirror. Only then will Bhagawan’s reflection appear in the mind.
Who has created this world? Who has given us food, clothing and other comforts? Who is that ocean of compassion and grace? If we wish to know Him, our mind should remain pure (clean) and unwavering.
Let us take the example of a copper vessel that remained immersed in the well for ten years. We need to scrub it a lot in order to bring back its shine. The more we scrub, the more it shines. We have been accumulating dirt in our minds with our wrong deeds. To remove the dirt we need to do many good deeds (scrub our minds). We need to perform the prescribed Anushtanas. These will purify the mind resulting in the development of good character.
Is it enough if we scrub the vessel and bring back its shine just once? What will happen if we leave it as it is for a few days? It will again become coated. Likewise, our mind should also be regularly cleaned by performing Anushtanas. At a particular stage, the mind will become insignificant. Only the Athma (soul) will remain. Only when the mind becomes insignificant will the task of purifying it cease. Till then the task of purifying the mind should continue for good character to develop.
Categories: Deivathin Kural
Shri Mahaperiyava Charanam
AVAN ARUNACHLA AVAN THAILAND PANINDHU..if only HIS grace is there, we shall endeavour to do the karma assigned to us and thereby attain SITHASUDHI on the way to elevation.Hence we should pray Sri PERIYAVA profusely to bless us the attitude to perform our karma dedicatedly
In this birth to surrender Periyava pada pankajam,my namaskarams to my Amma and Appa
Periva said it…. in implementation, we all still struggle a lot to sustain…… for that sustenance also we need HIS Anugraham. Let HIM bless Anugraham enormously to all of us. Let us all seek HIS Paada Pankajam.
Jaya Jaya Shankara….. Hara Hara Shankara!