பெரியவா காமாக்ஷி போல தரிசனம் தந்தா!

Thanks to Smt Saraswathi Thiagarajan mami for the share….

Kamakshi_Periyava

முப்பது வருஷங்களுக்கு முன் கும்பகொணத்தில் இருந்தபோது நடந்தது. ஸ்ரீமடத்தில் தரிசனத்துக்காக
காத்திருந்தேன். உள்ளே செல்ல அனுக்ரஹம் இல்லை!

கொஞ்ச நேரம் கழித்து யாரோ செல்லும்போது, நானும் அவாளுடன் தொடர்ந்தேன். யாரோ மடத்தில்
இருந்தவர்கள் என்னைப் பார்த்து, ‘பெரியவா ஓய்வு எடுத்துண்ருக்கா..அப்புறம் வாங்கோ’என்று
சொல்ல திரும்பவும் வெளியில் வந்து உட்கார்ந்தேன். எப்படியாவது இன்று நமக்கு தரிசனம் கிடைக்காதா
என்ற ஆவலில்.

சிறிது நேர காத்திருத்தலுக்குப் பிறகு அங்கிருந்த ரேழி என்று வழங்கப்படும் (வீட்டிலிருந்து உள்ளே செல்வதற்கு முன் நடைபாதை போன்ற அமைப்பு} அதன் வழியாக எட்டிப்பார்த்தேன் உள்ளே போக அனுமதி கிடைக்குமா என்பது போல். அங்கு உட்கார்ந்திருந்த ஒரு மாமா ‘நீ இப்போ உள்ளே போய் தரிசனம் பண்ணிக்கோ’என்று சொல்லவும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனேன். உள்ளே சென்றால் பெரியவா மட்டும் விச்ராந்தியாக பாதங்களை நீட்டியவாறு உட்கார்ந்திருந்தார்! ஆத தரிசனம் முதலில்!

அஹோ பாக்யம்! பின் திடீரென் பெரியவா பாதங்களுக்கு மேலான பகுதியில் முழங்காலுக்குக் கீழ், ஒரு சிவப்புப் புடவை தெரிந்தது! பாதங்கள் ஒளி மயமாக அக்னி போன்று சிவப்பாகத் தெரிந்தன!
கண்களைக் கசக்கிப் பார்த்தேன். ஆனாலும் காமாக்ஷி அம்மன் போலவே பெரியவா ஒரு நிமிஷம் போல் தரிசனம் கொடுத்தார்!

எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாம் காண்பது கனவா ..நினைவா? இப்படி எண்ண ஓட்டம். சட்டென்று பெரியவா எப்போதும் உள்ளது போல் சன்னியாசக் கோலத்தில் தரிசனம் தந்து அருள் புன்னகையுடன் ஆசி கூறினார்கள்

இது ஒன்றுதான் பெரியவா பற்றி நான் நினைக்கும்போதெல்லாம் எனக்குக் கண்முன் தோன்றும் காட்சி!

என் குடும்பத்தில் மூதாதையர் எல்லாம் பெரியவாளுடன் நெருங்கிப் பழகியவர்கள்.

என் குழந்தைகளும் சதா பெரியவா நினைவில் நல்ல சத் காரியங்களில் ஈடு பட்டு வருகிறார்கள். இது ஒன்றே என் வாழ் நாட்களிக் கடத்த எனக்கு அருட் ப்ரஸாதம்!

இவ்வாறு என் நெருங்கிய நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்டார். என்னே பாக்யம் அவருக்கு? பாத தரிசனம்! காமாக்ஷி போல உடை தரித்து!

ஜய ஜய சங்கரா…..



Categories: Devotee Experiences

6 replies

  1. Blessed by Maha Periyava

  2. Shri Maha Periyava Charanam.

  3. Thirty years before, incident happened while residing in Kumbakonam.
    I was waiting at Sri Mutt for Darshan. There was no permission to go in. After sometime, when somebody was going in, I also followed them. Soemone from Sri Mut looking at me told “Periava is taking rest… Come afterwards”, I returned back and sat outside with an longing of will I get somehow darshan today.

    After sometime, l peeped inside through veranda with a longing for admission. One person sitting there told me “You go inside and have darshan”. I immensely soaked in happiness. As I entered, Sri Periyava was sitting alone relaxed with His holy Feet extended. First Darshan was His ‘Thituvadi’ (Holi Feet).

    What a great blessing, suddenly above Sri Periyava’s Divine feet and below knee, I could see a red saree. Divine feet was seen as red and were glowing like a fire. I rubbed my eyes and seen again, but Sri Periyava Gave Darshan for a minute as Divine Mother Sri Kamakshi

    I was not understanding anything and thinking I am I seeing reality or in dream. While this thought was going in, Sri Periyava as usual in His Divine robe, gave Darshan with His smile and blessed me.

    This is the only thing appears in front of me, when ever I think of Sri Periyava.

    My forefathers are all moved with Sri Periyava very closely.

    My children are also doing ‘Sath Karya’(Good deeds) keeping Sri Periyava in thought. This is the greatest blessing in my life and Divine blessings.

    Like this, one of my friend shared with me. What a blessing to Him? Divine Feet Darshan in Sri Kamakshi dress.

    Jaya Jaya Shankara…

    Translated By His order and He wrote from within… Everything is to His Credit

  4. translations for non tamil readers

  5. I am Latha ramakrishna fortunate to read your articles. Such a great person Sri hh.maha periyava. Padika padika thigatadha peramudham .thanks a lot ji. Hara hara Sankara Jaya Jaya Sankara  Sent from Yahoo Mail on Android

Leave a Reply to TS.VenuCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading