ரொம்ப ஜலக் கஷ்டமுள்ள இடத்தில் கிணறு, குளம் வெட்டுவதை ரொம்பவும் பெரிய தர்மமாக ஆதிநாளிலிருந்து ஸ்லாகித்துச் சொல்லியிருக்கிறது. க்ராமப் புறங்களில் எல்லாரும் சேர்ந்து குளம் வெட்டலாம். இருக்கிற குளங்களைத் தூர் வாரி சுத்தம் பண்ணலாம். பெரியவன் சிறியவன் என்றில்லாமல் எல்லோரும் சேர்ந்து பண்ணுவது முக்யம். கோடீஸ்வரனானாலும், பெரிய பண்ணையாரானாலும் அவனும் மண் வெட்டிக் கொண்டு வந்து போட வேண்டும். சாஸ்த்ரங்களில் அப்படித்தான் எழுதியிருக்கிறது. அஸ்திவாரக் கல் நாட்டுவது, டேப் வெட்டுவது முதலானதுகள் சாஸ்த்ரத்தில் இல்லை. எத்தனை பெரியவனானாலும் அவனும் வாஸ்தவமாகவே உடம்பு வேர்க்க மற்றவர்களோடு ஸரி ஸமமாகப் பூர்த்த தர்மம் பண்ணவேண்டும். ரதோத்ஸவத்தில் எல்லா ஜாதிக்காரர்களும் ஒன்றாகச் சேர்ந்து வடம் பிடித்து இழுக்கிற மாதிரிதான் இதுவும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Digging a well or a pond in a place with acute water scarcity has been praised as a great act of charity since the ancient days. People can dig ponds in villages. Existing ponds can be de-silted. People should forget their differences and cooperate. Even a big landlord should dig with a spade. This has been stated in our ancient scriptures. Laying of foundation stones or cutting a ribbon are not in our scriptures. However important a person may be, he should sweat it out with others and perform this Poortha dharma or Social Service. It is like people drawing a chariot in Rathothsavam forgetting their differences of caste. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply