Jaya Jaya Sankara Hara Hara Sankara – Thanks to Shri Srinivasan for the article. Ram Ram
விநாயகர் அகவல் – பாகம் 13:
ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்.
20. பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
பதவுரை:
திருந்திய – திருத்தப்பட்டுள்ள
திருந்திய தெளிவு:
எல்லையற்ற பரம்பொருளை எப்படி நாம் உணரமுடியும்? பிரார்த்தனையும், சாதனையும், தவமும், தொடர்ந்துசெய்துகொண்டே இருந்தால் குருவருளால் நமக்கு ஞானமாகிய கடவுள் தரிசனம் கிடைக்கிறது. நமது மனம்பரிபக்குவம் அடைந்தால், அப்பொழுது நாம் கூறும் முறையீட்டை கணபதி கேட்கிறார்.மந்திர ஸ்வரூபமே கணபதி ஸ்வரூபம். அவரே, ஸ்த்தூலம், சூக்ஷுமம், காரணம் முதலிய ஸ்ரீபஞ்சாக்ஷர ஸ்வரூபமாகஇருக்கிறார். ஸ்தூல, சூக்ஷ்ம, காரண பஞ்சாக்ஷரங்களுக்கு தகுந்த அதிகாரிகள் உண்டு. இவற்றுக்கெல்லாம் ஆதாரம்(மூலம்) பிரணவமே. அது அகரம், உகரம், மகரம், நாதம், பிந்து எனப்படும்.
நாதமும், பிரகாசமும் கூடிய ஓம்கார பஞ்சாக்ஷரம் (ஓம்கார நாதம்) மூலாதாரத்தில் தோன்றி, ஸ்வாதிஷ்டானம்,மணிபூரகம் (நாபி), அனாகதம் (ஹ்ருதயம்), விஷுத்தி (கண்டம்), புருவ மத்தி (ஆக்ஞா) என்ற சக்ர நிலைகளில்சுஷூம்ணா நாடி வழியாக நிற்கின்றன. ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் என்பவர் இந்த ஐந்துஎழுத்துக்களுக்கும் அதிதெய்வங்கள் – என்றல்லாம் தந்திர சாஸ்திரங்களில் உள்ளன.
கண்ணால் காண்பது – வரிவடிவம் (ப்ரத்யக்ஷம்). வாயால் சொல்வது வைகரி. காதுகளால் கேட்பது சப்த மாத்திரை.
அனைத்து பிராணிகளில் செவிகளுக்கும் கேட்கும் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை இடையறாது உச்சரிக்கவேண்டும். அந்தபஞ்சாக்ஷர சப்தமே உச்சரிப்பவருக்கு பேரின்பம் தரும். உச்சரிக்க உச்சரிக்க அந்த தெய்வ எழுத்துக்கள் ஐந்தும் தெய்வநாதமாக மாறும். திருந்திய பஞ்சாக்ஷர வடிவான கணபதி, உள்ளம் புகுகிறான். அவனது ஸ்வரூபம் (பஞ்சாக்ஷரம்)தெரிகிறது. உலக நினைவுகளிலிருந்து இதயம் பிரிந்து, ஹ்ருதயம் பஞ்சாக்ஷர மயமாக மாறுகிறது.
எவராலும் காண்பதற்க் அரிய இறைவன், ஞானிகள், தான் ஹ்ருதய கமலத்தை மலர்ச்சி செய்து அதன் மத்தியில் உள்ளதஹரகாசத்தில் உள்ள பரம்பொருளை உணர்வு கொண்டு வழிபட்டு பேரின்பம் அடைவர். இது தகர வித்யை.
இதைத்தான் திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
என்கிறார்.
மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம். ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்
Categories: Deivathin Kural
Thank you for sharing
Thanks for sharing Vinayakar Ahaval.. What a coincidence we have five Panchakshram, including Namasivaaya. Even in English there are (a e I o U) five vowels..- M.Laxman.