Periyava Golden Quotes-266

album1_83

தயை என்பது ஒவ்வொருவர் மனஸிலும் இருக்க வேண்டிய உயர்ந்த குணம். அந்த தயைக்கு உருக்கொடுக்கும்படியான ஒரு கார்யத்தை சரீரத்தினாலும் அவசியம் செய்ய வேண்டும். வாரத்தில் ஒரு நாளாவது சரீர கைங்கர்யத்தை ஸகல ஜனங்களும் பண்ண வேண்டும் என்பது என் ஆசை. யாராயிருந்தாலும் வாரத்துக்கு ஒரு நாள் ஹாலிடே (விடுமுறை) இருக்கிறதல்லவா? அன்றைக்கு லோகோபகாரமாக சரீரத்தால் ஒரு பொதுப்பணி செய்ய வேண்டும். மனப்பூர்த்தியுடன், அல்லது மனப் பூர்த்திக்காக பூர்த்த தர்மம் பண்ண வேண்டும். அவரவருக்கும் எத்தனையோ குடும்பக் கார்யங்கள் இருக்கும் என்பது வாஸ்தவம்தான். இந்தக் கார்யங்களை லீவு நாளில் பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் வைத்திருப்பார்கள். ஆனாலும் இதோடுகூட பார்வதீ-பரமேஸ்வராளின் பெரிய லோக குடும்பத்துக்கும் தன்னாலானதை ஒரு ‘ட்யூட்டி’யாக செய்யத்தான் வேண்டும். இதற்காக அதையும் விடக்கூடாது. அதற்காக இதையும் விடக்கூடாது. கொஞ்ச நேரமாவது இந்தப் பரோபகாரப் பணி புரிய வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

Compassion is a noble quality which should be enshrined in every heart. This compassion should be given a form, by performing physical labour at least once a week. It is my desire that all people should perform this physical service at least once a week. There is a weekly holiday for everyone. On this day, everybody should wholeheartedly perform a social service or Poortha dharmam for the benefit of this world and for one’s own mental satisfaction.  It is understandable that people may have many familial duties to perform. But along with those, this duty towards the divine family (the world) of Parvathi and Parameshwara must be performed. Neither duty should be neglected. This Philanthropy should be carried out at least for a short time. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. What a beautiful way Mahaperiyava has advised everyone to strike a balance between home and home of Parvathi Parameswaran. Very soulful and heart melting message. This is one way of avoiding our Roopam over shadowing Swaroopam. This teaching of Mahaperiyava will certainly enable us to have
    “Athma Darshanam”.

    Gayathri Rajagopal

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading