ஒவ்வோர் அவயவத்தாலும் ஏற்படக்கூடிய தோஷத்தைப் போக்கிக் கொள்ள அந்த அவயவத்தாலேயே செய்யக் கூடிய புண்ய கர்மாக்கள் இருக்கின்றன. குப்பைத் தொட்டியான மனஸை சுத்தம் பண்ண அந்த மனஸாலேயே த்யானம் செய்ய முடிகிறது. கண்டதைப் பேசுகிற நாக்கை சுத்தப்படுத்திக் கொள்ள அந்த நாக்காலேயே பகவந்நாமாவைச் சொல்ல முடிகிறது. குயுக்தி எல்லாம் பண்ணும் மூளையை சுத்தமாக்கிக் கொள்ள அந்த மூளையாலேயே தத்வ ஆராய்ச்சி பண்ண முடிகிறது. இப்படியே, இந்த சரீரத்தால் – கையாலும், காலாலும், உடம்பாலும் எத்தனையோ தப்பு தண்டா பண்ணுகிறோமல்லவா? அதை இந்த சரீரத்தாலேயே தான் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். சரீரப் பிரயாஸையாலேயே பண்ணிக் கொள்ளும் இந்த சுத்திதான் பொதுக் கார்யங்களான பூர்த்த தர்மங்கள்-சோஷியல் ஸர்வீஸ்-அத்தனையும், சரீரப் பிரயாஸையாலேயே இது சித்த சுத்தியையும் தரக் கூடியது. ஏனென்றால் சரீரத்தால் செய்கிற இந்தக் கார்யங்களுக்கு மூலமாகப் பரோபகாரம் என்ற எண்ணம் நம் சித்தத்தில் இருப்பதுதான். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
Our religion prescribes acts to absolve the sins caused by the misuse of different parts of the body. What is important is that these acts are performed by the very same part of the body that has indulged in the sin .To clean the garbage that is our heart, we can meditate with the same heart. To absolve the tongue which indulges in reckless speech, we can chant the name of Bhagawan. The cunning mind can save itself by choosing the path of philosophical research. Similarly, the numerous sins performed by the body have to be cleansed by physical effort only. Social service is the ritualistic cleansing of these bodily sins through physical labour. Simultaneously, these labours also cleanse our minds because the genesis of these acts is the thought of philanthropy in our minds. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Every sin and crime happens through our five senses and holistically through this sareeram. Through the same sareeram we can dismantle our karmic cycle. The evolution of karma and solutions are well said by Mahaperiyava. If we follow Mahaperiyava’s teachings and preachings we are sure of leading our peaceful life.,
Hara Hara Shankara Jaya Jaya Shankara
Gayathri Rajagopal
Please.. It should be “part of” and not “parts of” in the fourth line from top. Thank you.ii