21. Gems from Deivathin Kural-Bhakthi-Ishta Devatha (Favorite form of God)

Periyava_praying_meenakshi_sudhan

Jaya Jaya Sankara Hara Hara Sankara – This is the last chapter under Bhakthi series in Deivathin Kural Vol. 1.  Smaarthas, the followers of Sri Adi Sankara Bhagawadpadhal sees everything as Paramathma (including the jeevans like us); however the same is not the case with other philosophies. For example, in Sri Vaishnavism only Lord Vishnu is the Paramathma and the rest of devathas as well as all other creatures are Jeevathmas. Also, in Sanatana Dharma, Bhagawan is one and only ONE but has the power and ability to appear in different forms as explained by Sri Periyava below.

Thanks to our sathsang seva volunteer who wish to remain anonymous for the translation. Ram Ram


பக்தி – இஷ்ட தேவதை

மநுஷ்யர்களின் மனப்பான்மைகள் பல தினுசாக இருக்கின்றன. ஒவ்வொரு விதமான மனப்பான்மை உள்ளவர்களையும் ஆகர்ஷித்து, அவர்களைப் பக்தி செலுத்த வைத்து, அவர்களுடைய மனத்தைச் சுத்தம் செய்து, சித்தத்தை ஏகாக்ர (ஒருமை)ப்படுத்தவே பரமாத்மா பல பல தேவதா ரூபங்களாக வந்திருக்கிறது.

“இந்த ஹிந்துக்களுக்கு எத்தனை கோடி சாமிகள்!” என்று அந்நிய மதஸ்தர்கள் நம்மை கேலி செய்வதுண்டு. உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்வாமி இருப்பதாக விஷயம் தெரிந்த எந்த ஹிந்துவும் எண்ணவில்லை. வைதிக மதம் ஸ்வாமி ஒருவரே என்று கண்டது மட்டுமில்லை; இந்த ஜீவனும்கூட அதே ஸ்வாமிதான் என்று வேறெந்த மதமும் கண்டுபிடிக்காததையும் கண்டுபிடித்திருக்கிறது. எனவே, பிரபஞ்ச வியாபாரத்தை நடத்துகிற மகா சக்தியாக ஒரு ஸ்வாமி தான் இருக்கிறது என்பதில் எந்த விஷயமறிந்த ஹிந்துவுக்கும் சந்தேகமில்லை. ஆனால் அந்த ஸ்வாமி பல ரூபத்தில் வரமுடியும்; அப்படிப்பட்ட யோக்கியதையும் கருணையும் அதற்கு உண்டு என்று இவன் நம்புகிறான்.

ஒரே ஸ்வாமி நம் தேசத்தின் மகாபுருஷர்களுக்குப் பல ரூபங்களில் தரிசனம் தந்திருக்கிறார். அந்தந்த ரூபங்களுக்குறிய மந்திரம், உபாஸனா மார்க்கம் எல்லாவற்றையும் அந்த மகாபுருஷர்கள் நமக்குத் தந்திருக்கிறார்கள். இவற்றை முறைப்படி அநுஷ்டித்தால் நாமும் அந்தந்த தேவதையின் அநுக்கிரகத்தைப் பெற முடியும். எந்த தேவதையாக இருந்தாலும் சரி, அது முடிவில் பரமாத்மாவே. ஆகையால், நாம் சந்தேகம் கொள்ளாமல் பூரண சிரத்தையோடு பக்தி வைத்தால் அது நமக்குச் சம்ஸார பந்தத்திலிருந்து விடுதலை தரும். இந்த விடுதலைக்கு நாம் பக்குவப்படுவதற்கு முன் லௌகிக வேண்டுதல்களைக்கூட நிறைவேற்றி அநுக்கிரகிக்கும்.

அவரவர் மனத்தைப் பொறுத்து ஒன்றில் பிடிமானம் கொள்வதற்கென்றே இத்தனை தேவதைகள் இருக்கின்றன. தாயாரிடம் குழந்தைப்போல் பரமாத்மாவை அநுபவிக்க வேண்டும் என்கிற மனப்பான்மை உடையவனுக்கு அம்பாள் உபாஸசனை இருக்கிறது. ஒரே சாந்தத்தில் அழுந்திப்போக வேண்டுமென்ற மனோபாவம் உள்ளவனுக்கு தக்ஷிணாமூர்த்தி இருக்கிறார். ஆனந்தமாக ஆடிப்பாடி பக்தி செலுத்துவதற்குக் கிருஷ்ண பரமாத்மா இருக்கிறார்.

இஷ்டம் இருந்தாலும் இஷ்டம் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு மகா சக்தியிடம் பக்தி செய்வது என்று ஏதோ ஒரு தத்வத்தை மட்டும் காட்டாமல், நம் மனசுக்கு எப்படி இஷ்டமோ, அதற்கு அநுசரணையாகவே அந்த மகாசக்தியை ஒரு மூர்த்தியில் பாவித்து, வெறும் தத்வத்தை ஜீவனுள்ள ஒரு அன்பு உருவகமாக பாவித்து, பக்தி செய்வதற்கு நம் மதத்தில் உள்ள “இஷ்ட தேவதை” வழிபாடே வழி வகுக்கிறது. அன்போடு உபாஸிக்க வேண்டுமானால், உபாஸனைக்குறிய மூர்த்தி நம் மனோபாவத்துக்குப் பிடித்தமானதாக இருந்தால்தானே முடியும். இதனாலேயே இஷ்ட தேவதை என்று தனக்குப் பிடித்த மூர்த்தியை உபாஸிக்க நமது மதம் சுதந்திரம் தருகிறது. ‘நம் மனப் போக்குக்குப் பிடித்தது’ என்கிற நிலையில் ஆரம்பத்தில் ஏதோ ஒரு மூர்த்தியை இஷ்ட தேவதையாக்கிக் கொண்டாலும், போகப் போக அதனிடம் உண்மையான பக்தி உண்டாக உண்டாக, ‘நமக்கென்று என்ன ஒரு தனி மனப்போக்கு?’ என்று அதையும் விட்டுவிட அந்த தேவதையே அநுக்கிரகம் செய்யும். அப்புறம் எல்லாமே ஒரே பரமாத்ம வஸ்துவாகத் தெரியச் செய்யும்.

அவரவரும் தமக்கு இஷ்டமான தேவதையே உபாஸிக்கும்போதே மற்றவர்களுடைய இஷ்ட தேவதைகளைத் தாழ்வாக எண்ணக்கூடாது. நமக்கு எப்படி இந்த ரூபத்தில் பரமாத்மா அநுக்கிரகம் பண்ணுகிறாரோ அப்படியே மற்றவர்களுக்கு மற்ற ரூபங்களின் மூலம் அநுக்கிரகம் பண்ணுகிறார் என்று தெளிவு பெற வேண்டும். ‘அந்தந்த தேவதைக்குறிய புராணத்தைப் பார்த்தால் அது ஒன்றே முழுமுதற் கடவுள்; மற்ற தேவதை எல்லாம் அதற்குக் கீழானவை; இதை அவை பூஜை செய்தன; இதனிடம் அவை தோற்றுப் போயின என்றெல்லாம் இருக்கிறதே!’ என்று கேட்கலாம். இதற்கு நஹி நிந்தா நியாயம் என்று பெயர். அதாவது இதர தேவதைகளை நிந்திப்பது பௌராணிகரின் நோக்கமல்ல. இந்த ஒரு தேவதையை ஆராதிப்பவருக்கு மனம் சிதறாமல் இது ஒன்றிடமே தீவிரமாகப் பற்றுதல் ஏற்படுத்த வேண்டும் என்பதே புராணத்தின் நோக்கம். இதற்காகவே இந்த தேவதைக்கு மட்டும் மற்றத் தேவதைகளுக்கு இல்லாத உத்கர்ஷம் (உயர்வு) சொல்லப்படுகிறது.

மகாநுபாவர்களாக இருந்தவர்கள் எல்லாத் தேவதைகளையும் சமமாகவே பார்த்தார்கள். மகா கவிகளான காளிதாசன், பாணன் முதலியவர்களும் ஒரே வஸ்துதான் பல மூர்த்திகளாகவும் வருகிறது என்று சந்தேகமில்லாமல் கூறுகிறார்கள்.

பக்தர்களின் மனோபாவத்தைப் பொறுத்துப் பரமாத்மா பல ரூபம் கொள்கிறபோதே, பிரபஞ்சத்தில் தன்னுடைய வெவ்வேறு காரியங்களைப் பொறுத்தும் வெவ்வேறு ரூபங்களை எடுத்துக் கொள்கிறது. ரஜோ குணத்தால் சிருஷ்டி செய்யும் போது அதற்கேற்ப பிரம்மாவாகிறது; ஸத்வ குணத்தால் பரிபாலிக்கும்போது அதற்கேற்ப மகா விஷ்ணுவாகிறது; தமோ குணத்தால் சம்ஹரிக்கும்போது அதற்குறிய முறையில் ருத்ரரூபம் கொள்கிறது. இந்த மூன்றைப் பாணனும் காளிதாசனும் ஒரே சக்தியின் மூன்று வடிவங்களாகக் குறிப்பிடுகிறார்கள். இந்த மூன்றுக்கும் பொருந்துவது முப்பத்து முக்கோடி தேவதைகளுக்கும் பொருந்தும்.

எனவே, என் தெய்வம் உசந்தது, உன் தெய்வம் தாழ்ந்தது என்று சண்டை பிடிப்பதில் அர்த்தமே இல்லை. ஆனாலும், நம் தேசத்தில் பல இஷ்ட தெய்வங்கள் இருந்தாலும் கூட, பிரதானமாக இருந்து வரும் சைவத்துக்கும் வைஷ்ணவத்துக்கும் இடையே ரொம்பவும் சண்டைதான் நடந்து வந்திருக்கிறது. நன்றாக ஆலோசித்துப் பார்த்தால் இந்த இரண்டு பிரிவுகளுக்கும் தெய்வங்களான பரமேச்வரனும் மகா விஷ்ணுவும் ஒரே வஸ்துதான் என்ற ஞானம் பெறுவோம். *

——————————————————-

* இவ்விஷயமாக அடுத்த பிரிவில் உள்ள ‘சிவ விஷ்ணு அபேதம், ‘ அரியும் சிவனும் ஒன்னு’, ‘சிவமயம்’, ‘சர்வம் விஷ்ணுமயம் ஜகத்’, ‘அரனை மறவேல்; திருமாலுக்கு அடிமை செய்’, ‘காலையில் திருமால், மாலையில் மகாதேவன்’, ‘ஒற்றுமை உணர்த்தும் உத்தமத் தலங்கள்’, ‘இரண்டு ராஜாக்கள்’, ‘பகவான் யார்?… பகவத் பாதர் பதில்’, ஆகிய உரைகளைப் பார்க்க.

———————————————————————————————————————–

Ishta Devatha – Favorite Form of God

People have different kinds of mindset. In order to attract people with each kind of mindset, make them show devotion, cleanse their mind and make them concentrate only on the God, “Paramaathma” or the Almighty Bhagawan comes in different forms.

“Hindus have how many crores of Gods”, says people from other religions and they make fun of us. The truth is that none of the Hindus, who know about Sanathana Dharma, believe that there is more than one God. The Vedic religion or “Vaidhiga Madham” not only discovered that there is only one God; it has also discovered something that other religions do not know – Our soul or “Jeevan” is also the same God. Hence there is no doubt for any Hindu, who knows Sanathana Dharma, that the business of this universe is conducted by the one and only Almighty God. However, the God can take different forms due to his capability and compassionate nature, as believed by the Hindu person.

The same God has appeared before Great Saints and Great Personalities in different forms. Those great personalities have given us the method and prayers or sacred message (“mantra”) to attain God by worshipping him in those forms. If we follow the same method and chant the prayers with devotion (without any deviation from prescribed method), we are sure to be blessed by those specific forms of the God. Be it any form, at the end it is the same Almighty God. Hence, if we completely trust and show selfless and pure devotion to any specific form of God, it will truly relieve us from all the worldly desires and bonds. Before our mind is tamed and ready to be freed from worldly desires, it even blesses us to achieve some worldly desires.

According to each person’s mindset, in order to hold on to and show devotion, different forms of God exists. If a person’s mindset is such that he needs God to show love and affection to him just like a mother would to her child, there is worship of Goddess Ambal. If a person needs to be in complete peace, there is worship of Lord Dakshinamoorthy. Worship of Lord Krishna is there for those who want to happily sing and dance and show their devotion.

Instead of forcing someone to imagine and realize an essence of reality (“tathvam”), whether they like it or not to attain the Almighty God, our religion shows the way to idolize the Almighty God, to convert the essence of reality into a soulful and loving form that we like and show devotion – worship of the Favorite Form of God (“Ishta Dhevadhai”). If we need to show pure love and sincere devotion, the corresponding form of God needs to be something that we like a lot and fits our mindset. This is the reason, our religion gives freedom to worship a Favorite Form of God. Even if we initially think, “Something that fits my mindset”, and follow a Favorite Form of God, our sincere devotion towards that idol will finally lead us to think “Why should I have a separate mindset?” as blessed by our Favorite form of God. We will then be able to see everything as the one and only Almighty God.

Also, the people worshipping one form of God should not think low of other forms of God. We should realize that, just like how God blesses us in our favorite form, he will also bless others in their favorite form. People can ask, “If we look at the history (“Puraanaa”) of each form of God, it states that only a specific form is the most powerful. Rest of the forms are under it. The other forms have worshipped and have been defeated by the all-powerful form”. This is called “Nahi Nintha” rule. The motive of the upanyasakas (one who tells Bhagawan leelas) is not to bring down the importance of other forms of God. Their reasoning was to ensure that people worshipping a particular form of God should not be distracted by other forms and develop devotion and concentration only on the specific form of God. Hence, more importance has been given to one form of God over the others.

Great Personalities have always considered all forms of God to be equally powerful. Great Poet Kalidhaas and Paana have clearly stated without any doubt that there is only one God that appears in different forms.

Just like how there are different forms of God based on different mindsets of people, there are different forms based on various jobs conducted by the God in the universe. When the universe is created with passion (Rajas), God takes the form of Lord Brahma, when the universe is protected with goodness and peace (Sathva), God takes the form of Lord MahaVishnu, when destroyed due to tendency to disintegrate (Thamas), God takes the form of Lord Rudhra. These are specified as three different forms of the same Almighty God by both Paana and Kaalidhaas. The same is applicable for all the 33 crore forms of God.

Hence, saying that my God is more powerful and your God is below mine and fighting with each other makes no sense. However, though there are different forms of God in our country, the most common ones are Saivaites and Vaishnavaites who fight a lot amongst themselves. If we think and analyze properly, let us understand and realize that Lord Shiva and Lord Vishnu (Forms worshipped by these two types – Saivaites and Vaishnavites respectively) are one and the same**.

** In this context, please refer to subsequent sections and corresponding chapters “No difference between Shiva and Vishnu” (“Shiva Vishnu Abedham”), “Hari and Shiva are the same” (“Hariyum Sivanum onnu”), “Shiva is everywhere” (“Sivamayam”), “Vishnu is everywhere in the universe” (“Sarvam Vishnumayam Jagath”), “Do not forget Aran (Shivan)” (“Aranai maravel”), “Be a slave to Lord Vishnu” (“Thirumaalukku Adimai sei”), “In the morning worship Lord Vishnu, In the evening worship Lord Shiva” (“Kaalaiyil Thirumaal, maalaiyil Mahaadevan”), “Unity shown by Great and important places of worship” (“Ottrumai unarthum utthama thalangal”), “Two Kings” (“Irandu Raajaakkal”), “Who is God.. Reply by Sri Adhi Shankara” (“Bhagavaan yaar.. Bhagavad paadhar badhil”).



Categories: Deivathin Kural

Tags: ,

1 reply

  1. பெரியவாளைப் பற்றி வர்ணிக்க நமக்கு அருகதை இருக்கிறதா என்ன

Leave a Reply to santasiddiCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading