வைதிக தர்மத்துக்கு ஸாரமாக இருப்பது பஞ்ச மஹாயஜ்ஞங்கள் என்ற ஐந்து வேள்விகள். இவற்றில் ‘ப்ரம்மயஜ்ஞம்’ என்பது வேதம் ஓதுதல், ஓதுவித்தல். இதுவே நிஜமான வித்யா தானமாகிய பெரிய பரோபகாரம். ‘பித்ரு யஜ்ஞம்’ என்பது முன்னமே சொன்னாற்போல் மூதாதைகளுக்குச் செய்யும் தர்ப்பணம். ‘தேவ யஜ்ஞம்’ என்பது ஈஸ்வர ஆராதனம். இது தான் மற்ற எல்லா தான தர்மங்களுக்கும் பூர்த்தி ஸ்தானம். ‘பூத யஜ்ஞம்’ என்பது நாயும், காக்கையும் உள்பட எல்லா ஜீவராசிகளுக்கும் பலி போடுவது. ‘ந்ரு யஜ்ஞம்’ என்பது அதிதியை உபசாரம் பண்ணுவது. பஞ்ச மஹாயஜ்ஞங்களைப் பார்த்தால் நம் வேத மதத்தைப் போல் பரோபகாரத்தைக் கார்யத்தில் கட்டாயமாக விதித்திருக்கிற மதம் வேறு இல்லை என்றே தோன்றுகிறது. ஸ்ருஷ்டியில் ஒரு பிரிவைக்கூட விடாமல் உபகாரம் பண்ணி வைப்பது பஞ்ச மஹா யஜ்ஞம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
The Pancha Maha Yagnam or the five ritual sacrifices form the essence of the Vedic dharma. Brahma Yagnam is chanting and teaching Vedas. This constitutes the ultimate Philanthropy of free education. Pithru Yagnam consists of the ancestral rituals. Deva yagnam is worshipping Bhagawan. All the other yagnams eventually lead to this. Bootha Yagnam is feeding the cows, dogs, and other living beings. Nru Yagnam is hospitality to the guests. When we look at these Pancha Maha Yagnas, it is clear that our Vedic religion had made Philanthropy compulsory, a rule no other religion has.Pancha Maha Yagnam takes care of every element of this Creation. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
please coillect golden words of MAHAPERIYAVA fron 001 to 260 and to be compiled…