Vinayagar Agaval – Part 10

Pillayar

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Thanks to Shri Srinivasan for the article. Ram Ram

விநாயகர் அகவல் – பாகம் 10

ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்.

12. திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

பதவுரை:

திரண்டமுப் புரிநூல் திகழ் ஒளி மார்பும் – மூன்று புரிகளைக் கூட்டி முறுகேற்றிய பூணுல் அணிந்த ஒளி பொருந்தியதிருமார்பும்

முப்புரி நூல்:

திரிபாதா என்று புகழ் பெற்ற காயத்ரி மந்த்ரம், ” ஓம்பூர் புவஸ்ஸுவ: தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்யதீமஹி தி யோ யோ ந: ப்ரசோதயாத்”

ய: – எவன்
ந: – நமது
திய: – சிந்தனைகளை
ப்ரசோதயாத் – அருள் ஒளி பெற ஊக்குகின்றானோ (அவனே)
வரேண்யம் – மிகச் சிறந்த
ஸவிது: – சிவ சூரியன்
ஓம் – (அவனே) ஓம்காரம்
பூ: – உடல் உலகம்
புவ: – உயிர் உலகம்
ஸுவ: – மன உலகம் (முதலியவைகளில் விளங்குபவன்) ஆன
தத் – அந்த
தேவஸ்ய – இறைவனுடைய
பர்க: – அருள் ஆக்கத்தை
தீமஹி: – (என்றும்) தியானம் செய்வோம்

இப்படி பொருள் படும் இம்மந்திரத்தில் ‘தத் ஸவிது:’ என்பதற்கு, அவரவர் தம் இஷ்ட தெய்வம் அல்லது மதஅனுஸாரப்படி பொருள் கூறுவர். பெயரையும் உருவத்தையும் வைத்து, யாருக்கும் கவலை வேண்டாம். உள்ளத்தூய்மையுடன் இம்மந்திரத்தை உபாசித்து பயன் பெறலே வேண்டும். தத் ஸவிது: என்பதற்கு கணபதி பரமாகக்காண்பார்கள் கணபதி உபாசகர்கள்.  அதற்கான பயனையும் அடைவார்கள்.

கணபதி சாரூபத்தை அளிக்கிறது காயத்ரி. காலையில் ப்ரஹ்ம ஸ்வரூபம், மாலையில் விஷ்ணு ஸ்வரூபம்,உச்சிப்பகலில் ருத்ர ஸ்வரூபம்.  அதனால் நடுப்பகல் காயத்ரி ஜபம், மிகவும் பெருமை பெரும்.

ஸ்ருதி, கணபதி காயத்ரியை ‘ஏக தந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி, தந்நோ தந்தி ப்ரசோதயாத்’ என்றுபுகழ்கிறது. இதன் அருமையை நாம் நன்கு உணர்ந்து தொடர்ந்து ஜபிக்கவேண்டும்.

கணபதியின் திருமேனியில் உள்ள ஒவ்வோர் உறுப்பும் சிறந்த ஒவ்வோர் உபதேசத்தை செய்துகொண்டே இருக்கின்றன.

மற்றவை அடுத்த பதிவில் பார்க்கலாம்.  ஸ்ரீ மஹா பெரியவா சரணம், கணேச சரணம்



Categories: Devotee Experiences

Leave a Reply

%d bloggers like this: