Periyava Golden Quotes-261

album1_1

பாரி வள்ளல் முல்லைக் கொடி படருவதற்காகத் தன் தேரையே கொடுத்த கதை எல்லோருக்கும் தெரியும். இன்னொருத்தன் (பேகன்) மயில் குளிரில் நடுங்குகிறதே என்று தன் உத்தரீயத்தையே எடுத்து அதற்குப் போர்த்தினானாம். இதெல்லாம் புத்தி இல்லாத கார்யமாக அல்லவா இருக்கிறது?’ என்று கேட்கலாம். என்னைக் கேட்டால், இப்படி புத்திக்கு வேலையே இல்லாமல் முட்டாள்தனம் மாதிரி கூடத் தோன்றுகிற கார்யங்களைச் செய்வதுதான் நிஜமான அன்பை, நிஜமான த்யாகத்தைக் காட்டுகிறது என்பேன். அன்பு பீறிக்கொண்டு வருகிறபோது மூளையினால் அதற்கு நியாய அநியாயங்கள் பார்க்க முடியாது. இப்படித்தான், நாயன்மார்களைப் பார்த்தால் பெண்டாட்டியையே ஒருத்தர் தானம் பண்ணினார், இன்னொருத்தர் பிள்ளையையே கறி பண்ணிப் போட்டார் என்கிறபோது, இதெல்லாம் மூடத்தனம், உணர்ச்சிக் கட்டுப்பாடில்லாத கார்யம் என்று சொல்லக்கூடாது. அவர்களுக்கு எப்படிப்பட்ட த்யாக சிந்தனை இருந்தது என்பதுதான் முக்யம். மூளையால் ஸமாதானம் சொல்ல வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் உருட்டிப் புரட்டிக் கொண்டு வந்துவிட்ட த்யாகம்தான் நிஜமான த்யாகம் என்று என் அபிப்ராயம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

The munificent King Paari gave his chariot to a flowering Mullai creeper to cling to. Another person named ‘Began’ gave his shawl to a peacock shivering in the cold. These may seem to be foolhardy acts. If you ask me, such acts where intellect had no role to play, represent acts of true love and sacrifice. When love overflows, the brain cannot analyse the just or unjust aspects of it. Likewise, if we look at the history of the Nayanmaars or the Saivite saints, one of them gave away his wife in charity and another cooked and served his own son. We cannot dismiss them as foolish acts born out of unbridled emotions. What is important is their willingness to sacrifice.  In my opinion, the sacrifice which need not justify anything to the intellect is the true sacrifice. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: